வரித்துறையை படுத்தி எடுக்கும் 'பிட்காயின்' முதலீட்டாளர்கள் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வரித்துறையை படுத்தி எடுக்கும் 'பிட்காயின்' முதலீட்டாளர்கள்

'பிட் காயின்' எனப்படும், 'டிஜிட்டல்' நாணயங்கள் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளோரின் முதலீடு தொடர்பான தகவல்களை, அதற்கு உரியவர்களிடம் இருந்து பெற முடியாமல், வருமான வரித்துறையினர் தவிக்கின்றனர்.

வரித்துறையை படுத்தி எடுக்கும் 'பிட்காயின்' முதலீட்டாளர்கள்


உலகில் தற்போது, 'டிஜிட்டல் கரன்சி' அல்லது 'கிரிப்டோ கரன்சி' என்ற, கணினி வழி பணப்பரிவர்த்தனை பிரபலம் அடைந்துள்ளது. அதில், பிட் காயின் முன்னணியில் உள்ளது. இத்தகைய, டிஜிட்டல் நாணயங்களுக்கு உருவம் கிடையாது. அதில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தகவல்

கிடைத்ததை அடுத்து, நாடு முழுவதும், 5.84 லட்சம், பிட் காயின் உபயோகிப்பாளர்களுக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது.
இப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள சிலரிடம், தமிழக வருமானவரித்துறை, விசாரணையை துவங்கி உள்ளது. சிலருக்கு, 'சம்மன்' அனுப்பி உள்ளது. ஆனாலும், இதில், பல்வேறு சிக்கல்களை, வருமான வரித்துறையினர் சந்தித்து வருகின்றனர்.

அடம் பிடிக்கின்றனர்.
இது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: செல்வந்தர்கள், பிட் காயினில், முதலீடு செய்துள்ளனரா என்பதை கண்டறிவதில், பல சிரமங்கள் உள்ளன. அவர்கள் முதலீடுசெய்திருந்தாலும், கணினி வழியில், சிக்கலான நடைமுறையை பின்பற்றுவதால், கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. சில முதலீட்டாளர்கள், 'பிட் காயின் வாங்கவே

Advertisement

இல்லை' என, அடம் பிடிக்கின்றனர். வேறு சிலரோ, தங்கள், 'இ - மெயில்' உள்ளிட்ட பல்வேறு கணினி பரிவர்த்தனைகளை யாரோ, 'ஹேக்' செய்து விட்டதாக கூறி, தப்ப பார்க்கின்றனர்.இதே போல, பல்வேறு அலைக்கழிப்புகளுக்கு இடையே, நம்பிக்கையுடன் விசாரணையை தொடர்ந்து வருகிறோம். வருமான வரி ஏய்ப்பு தவிர்த்து, அதில், அன்னிய பரிவர்த்தனை மோசடி இருப்பது தெரியவந்தால், அமலாக்கத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thiru - Chennai,இந்தியா
02-ஜன-201821:39:36 IST Report Abuse

thiruபிட் காயின் கருப்பு பணத்தின் இருப்பிடமாக திகழ்கிறது.. பாஜகவின் கருப்பு பணம் ஒழிப்பு தோல்விக்கு முதல் காரணம் இந்த பிட் காயின்...இங்கு முதலீடு செய்து விட்டு வெளிநாட்டில் விற்று விடலாம்..

Rate this:
(விடை விரும்பி) Vidai Virumbi - யாதும் ஊரே யாவரும் கேளிர்,இந்தியா
02-ஜன-201819:49:08 IST Report Abuse

(விடை விரும்பி) Vidai Virumbi School la exam la bit ..... College cut adichu bit tu Padam.... Ippo bit coin ..... life here oru bit kukul adakkam

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-ஜன-201816:29:13 IST Report Abuse

Pugazh Vஇந்த பிட் காயின் முதலில் வந்த போது, பிஜேபி ஆட்கள் தான் அதிகம், ஆ ஊ, டிஜிட்டல் ஆகிறது இந்தியா ஒளிர்கிறது, காசில்லா வர்த்தகம் ஊழலை ஒழிக்கும் வளர்ச்சி இது என்று ஒரே ஆட்டம் ஆடினார்கள். இப்போது? இதே நிலை தான் இனி உள்ள பே-டி எம் கம்பெனியில் ஆகப் போகிறது. ஆனால், அதிகாரிகளை திட்டுவார்கள். இந்த அயல்நாட்டு கம்பெனிகளை உள்ளே விட்டதே பிஜேபி தான்.

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X