முதல்வரின் அறிவிப்பை முடக்கும் அதிகாரிகள் நகரமைப்பு வல்லுனர்கள் நியமனத்தில் குளறுபடி Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
முதல்வரின் அறிவிப்பை முடக்கும் அதிகாரிகள்
நகரமைப்பு வல்லுனர்கள் நியமனத்தில் குளறுபடி

அரசுத்துறைகளில், நகரமைப்பு வல்லுனர்கள் நியமனத்தை முறைப்படுத்தும் வகையிலான, முதல்வரின் அறிவிப்பை நடைமுறைப்படுத்தாமல், அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதல்வரின் அறிவிப்பை முடக்கும் அதிகாரிகள் நகரமைப்பு வல்லுனர்கள் நியமனத்தில் குளறுபடி


நகர், ஊரமைப்புத்துறையான, டி.டி.சி.பி., - சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில், கட்டுமான திட்ட அனுமதி பணிகளுக்காக, நகரமைப்பு வல்லுனர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இத்துறைகளில், நகரமைப்பு வல்லுனர் தேர்வுக்கு, தனித்தனி வழிமுறைகள் பின்பற்றப்படுவதால், முறைகேடுகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், நகரமைப்பு வல்லுனர்களுக்கான பொதுவான பணி நிலையை உருவாக்க வேண்டும் என, மத்திய அரசின் நகரமைப்பு துறை அறிவுறுத்தியது.


இதையடுத்து, 'தமிழகத்தில், சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில், நகரமைப்பு வல்லுனர்களை நியமிப்பதற்கான, பொதுப்பணி நிலை வரையறுக்கப்படும்' என, முதல்வர், பழனிசாமி, 2017 பிப்ரவரியில், சட்டசபையில், 110 விதியின் கீழ்அறிவித்தார்.இந்த அறிவிப்பு வெளியாகி, 10 மாதங்களாகியும், கிடப்பிலேயே உள்ளது.
இது குறித்து, தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்க தலைவர், கே.எம்.சதானந்த் கூறியதாவது:திட்ட அனுமதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களில், தகுதியான நகரமைப்பு வல்லுனர்களை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்த புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டது; இதற்கான வரைவும் தயாரிக்கப்பட்டது. ஆனாலும், அதிகாரிகளில் ஒரு பிரிவினர், இதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, முதல்வரின் அறிவிப்பு கிடப்பில் போடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை, செயல்படுத்தினால், மேலிட செல்வாக்கு என்ற பெயரில், தகுதி இல்லாத நபர்களை, சீப் பிளானர்களாகவும், சீனியர் பிளானர்களாகவும் நியமிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


'வரைவு அறிக்கை தயார்'

இது குறித்து, டி.டி.சி.பி., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வரின் அறிவிப்பு அடிப்படையில், இதற்கான வரைவு விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஆனால், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் சிலர், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, இது தொடர்பான கோப்புகள், துணை முதல்வருக்கும், முதல்வருக்கும் செல்வதை தடுத்து வருகின்றனர். சி.எம்.டி.ஏ.,வின் பணி விதிகளுக்கு ஒப்புதல் பெறுவது, தற்காலிக பணியிடங்களுக்கு நீட்டிப்பு பெறுவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து, வீட்டுவசதி துறை முதன்மை செயலரின் கவனத்துக்கு எடுத்து செல்ல, முயன்று வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் -

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
02-ஜன-201811:06:15 IST Report Abuse

balakrishnanமுதல்வரை விட செல்வாக்கு படைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்,

Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
02-ஜன-201823:58:49 IST Report Abuse

Milirvanதப்பித்தவறி ஏதோ ஒன்றிரண்டு நல்ல முடிவுகளும் இந்த அரசியல்வாதிகள் செய்கிறார்கள்.. அதற்கும் கட்டை போட சிலர்.. அதை சிலாகித்து சொறிந்து கொள்ள சிலர்.. விளங்கிடும்.....

Rate this:
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
02-ஜன-201808:28:14 IST Report Abuse

Sathiamoorthy.Vநிலையான ஆட்சிமாற்றம் வந்த பிறகு முடிவு எடுக்கட்டும். தற்காலிக அறிவிப்புகள் லஞ்ச லாவண்யங்கள் வளர வழி வகுக்கும். மக்கள் பயன் அடைய வேண்டும். பயனாளிகள் பில்டர்களும் பிரமோட்டர்களும் இருக்க கூடாது. வருட கணக்கில் வீடு மனைகளை விற்ற பிறகு உட்புற சாலைகளை ஏன் அரசாங்கத்திடம் ஒப்படைக்க ப்ரோமோட்டார்கள் மறுக்கிறார்கள் என முதலில் CMDA அதிகாரிகள் கேட்கட்டும்.

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
02-ஜன-201807:42:19 IST Report Abuse

Kuppuswamykesavanசினிமாவில் வரும் 'ஓர் நாள் முதல்வரே' அப்படி பல சாதனைகளை புரியும் போது, நிஜமான பிரதமர், நிஜமான முதல்வர்களால் அப்படி ஏன் சாதிக்க முடிவதில்லை?.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-ஜன-201804:34:43 IST Report Abuse

Kasimani BaskaranCMDA ஒரு வீணாய்ப்போன அமைப்பு... கடந்து போன காலங்களுக்கு திட்டம் போடுவார்கள்...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement