சாதிக்க ஊனம் தடையில்லையாம்.. பாராலிம்பிக்கை குறிவைக்கும் இளைஞர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாதிக்க ஊனம் தடையில்லையாம்.. பாராலிம்பிக்கை குறிவைக்கும் இளைஞர்

Updated : ஜன 02, 2018 | Added : ஜன 02, 2018 | கருத்துகள் (6)
Advertisement
ஊனம், Disability,பாராலிம்பிக், Paralympic,  கலைச்செல்வன்,kalaiselvan , மாற்றுத்திறனாளி,Handicapped, மதுரை எம்.ஜி.ஆர் ஸ்டேடியம், Madurai MGR Stadium, சைக்கிள்,Cycling, ஓட்டப்பந்தயம் , running

பெரம்பலுார் : பாராலிம்பிக் போட்டிக்கான தேர்வில் வெற்றி பெற, பெரம்பலுாரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

பெரம்பலுார் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த வனிதா - சுப்ரமணி தம்பதியின் மூத்த மகன் கலைச்செல்வன், 34. மாற்றுத்திறனாளியான இவர் 2020ம் ஆண்டு நடக்கும் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கபயிற்சி பெற்று வருகிறார்.

இம்மாத இறுதியில், மதுரை எம்.ஜி.ஆர்., ஸ்டேடியத்தில் தேசிய அளவிலான தேர்வு முகாம் நடக்கிறது. இதில், பங்கேற்று தேர்வு ஆவதற்காக கலைச்செல்வன் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்.

இதற்காக, தற்போது, மேலப்பூலியூரிலிருந்து, 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரம்பலுாருக்கு தினமும் சைக்கிளிலில் பயணித்து பயிற்சி எடுத்து வருகிறார். இதுமட்டுமல்லாமல், 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ள இவர், பெரம்பலுார் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் ஓடி பயிற்சி பெற்று வருகிறார்.

இதுகுறித்து கலைச்செல்வன் கூறியதாவது:எனக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவி உள்ளார். 13 வயதில் லாரியில் கிளீனராக வேலை பார்த்தபோது, விபத்துல சிக்கி ஒருகை பறிபோனது. ஒன்றரை வருட சிகிச்சைக்கு பின் தேறினேன். வறுமை காரணமாக தினமும் வேலை தேடி, 40 கிலோமீட்டர் நடந்து செல்வேன்.

விளையாட்டிலும் எதாவது சாதிக்க வேண்டும் என்று வெறி வந்தது. இதையடுத்து ஓட்டம், நீச்சல் ஆகிய பயிற்சி எடுத்தேன். கடந்த, 2008ம் ஆண்டிலிருந்து ஓட்டம், சைக்கிள், நீச்சல்னு மாநில, தேசிய அளவிலான போட்டிகள்ல கலந்துக்கிட்டேன்.

2011ம் ஆண்டு லண்டன் பாராலிம்பிக் போட்டியில் என்னால கலந்துக்க முடிஞ்சது. பதக்கம் வாங்கல. ஆனா அங்க 'பிளாக் பியரிங்' வாய்ப்பு எனக்குக் கிடைச்சதே பெருமையா நினைக்கிறேன். வரும், 2020ல் நடக்க உள்ள பாராலிம்பிக் போட்டியில் சைக்கிள், ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளில் பங்கேற்று எனது சொந்த மண்ணுக்கு பெருமை சேர்ப்பேன். இதற்காக, நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் பயிற்சி எடுத்து வருகிறேன். அதற்கு அரசும் எனக்கு உதவினால் நிச்சயம் சாதிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
02-ஜன-201820:05:58 IST Report Abuse
Tamizhan kanchi மேலப்புலியூர் கலைச்செல்வனுக்கு வாழ்த்துக்கள்.... வெற்றி யை ஒன்றே இலக்காக வைத்து முயற்சி செய்யுங்கள்... வேண்டாத போராட்டங்கள் செய்து வெட்டியா திரிகிற தமிழக இளைஞர்கள் மத்தியில் உனது முயற்சி வெற்றி பெற்று தமிழகம் இந்தியா பெருமை பெறட்டும்...
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
02-ஜன-201810:33:27 IST Report Abuse
Syed Syed முயற்சி திருவினையாக்கும். நல் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
02-ஜன-201807:49:09 IST Report Abuse
Kuppuswamykesavan உடல் மனம் அறிவு, ஆரோக்கியம், விடாமுயற்ச்சி, கடின உழைப்பு, இளமையில் உழைத்து, சொத்துபத்து, புகழ்கள் சேர்த்துக்கொள்ளுதல், எனற விசயங்கள் தான், இந்த உலகில் பிறந்த எல்லோருக்கும் தேவை எனலாம்.
Rate this:
Share this comment
Cancel
02-ஜன-201804:55:47 IST Report Abuse
ஸாயிப்ரியா முயற்சியே சாதனையின் திறவுகோல். வாழ்த்துக்கள் சகோதரா.
Rate this:
Share this comment
Cancel
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜன-201804:46:08 IST Report Abuse
ushadevan முயற்சியே சாதனையின் திறவுகோல் வாழ்த்துக்கள் சகோதரா.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
02-ஜன-201803:02:18 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை