'அ.தி.மு.க., ஆட்சி பா.ஜ.,விடம் அடமானம்': தினகரன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அ.தி.மு.க., ஆட்சி பா.ஜ.,விடம் அடமானம்': தினகரன்

Added : ஜன 02, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவாரூர்: ''மத்தியில் ஆளும், பா.ஜ.,விடம், அ.தி.மு.க., ஆட்சியை, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., அடகு வைத்து விட்டனர்,'' என, தினகரன் கூறினார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, தன் குலதெய்வ கோவிலில் நேற்று, தினகரன் சுவாமி தரிசனம் செய்தார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில், ஜெ., ஆட்சி நடக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். அதற்காக தான், ஆர்.கே.நகர் மக்கள், என்னை வெற்றி பெற செய்துள்ளனர். எனவே, மக்கள் விருப்பப்படி, ஜெ., ஆட்சி அமைப்போம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பின், தினகரன் காணாமல் போய் விடுவார் என, கூறியவர்களின் கனவு பொய்யாகி விட்டது. என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளின் காரணமாக, மூன்று மாதங்களுக்கு பின், அரசியலில் தினகரன் நீடிக்க மாட்டார் என, கூறுகின்றனர். அந்த வழக்குகளை, நீதிமன்றம் மூலம் சந்தித்து வெற்றி பெறுவேன். மத்தியில் ஆளும், பா.ஜ.,விடம், அ.தி.மு.க., ஆட்சியை, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., அடகு வைத்து விட்டனர். தமிழக ஆட்சியில், பா.ஜ., தலையிடுவதை மக்கள் விரும்பவில்லை. இவ்வாறு தினகரன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - kerala,இந்தியா
17-ஜன-201808:55:38 IST Report Abuse
rajan ஆமாம்பா. இத்தனை நாளும் அந்த ஆயாம்மா தமிழக ஆட்சியை உங்க மன்னார்குடி மாபியா சின்னத்தாயி கிட்டே அடகு வச்சிருந்தா இப்போ அது கை மாறி இருக்கு. நீ முன்னாடியே அதுக்கு என்ன டோக்கனா கொடுத்திருக்கே கண்டெய்னர் பாய்.
Rate this:
Share this comment
Cancel
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
12-ஜன-201819:50:37 IST Report Abuse
Sukumaran Sankaran Nair பொய்யுடையோன் ஒருவன் தன் சொல்வன்மையினால் பொய்யே கூறிடினும் அது மெய் போலும்மே அது மெய்போலும்மே இன்று நீதியின் முன்னால்,அரசியல் ஆட்டம் காணத்துவங்கியுள்ளது. நீதிதேவன் நாடியில் கைவைத்தவுடன் தான் இவனது கொட்டம் தானாகவே அடங்கிவிடும.சனநாயகமே இன்று பணநாயகமாக மாறி,கேலிக்கூத்தாடுகிறது இவன் பின்னால்,கூடும் ஆட்களை என்னவென்று கூறுவது?
Rate this:
Share this comment
Cancel
skandh - chennai,இந்தியா
05-ஜன-201810:31:03 IST Report Abuse
skandh தமிழகத்தில் பா ஜ கா வையே மக்கள் விரும்பவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை