ஓட்டை, உடைசல் வாகனங்களில் செல்லும் எஸ்.பி.,க்கள்; அதிகாரிகள் வீட்டுக்கு,'சேவை' செய்யும் புதிய ஜீப்கள் Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அவலம்...!
ஓட்டை, உடைசல் வாகனங்களில் செல்லும் எஸ்.பி.,க்கள்;
அதிகாரிகள் வீட்டுக்கு,'சேவை' செய்யும் புதிய ஜீப்கள்

கண்டமான வாகனங்களை ஓரம் கட்டி விட்டு, புதிய வாகனங்கள் வாங்க, அரசு நிதி ஒதுக்காததால், ஓட்டை, உடைசல் வாகனங்களை பயன்படுத்தும் அவல நிலைக்கு, மாவட்ட, எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஓட்டை,உடைசல்,வாகனங்கள்,எஸ்.பி.,,அதிகாரிகள்,வீட்டுக்கு,சேவை,புதிய ஜீப்கள்

காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு ஆண்டுதோறும், கோடிக்கணக்கான ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. அந்த நிதியில், துறைக்கு தேவையான வாகனங்கள், வாக்கி டாக்கி, கண்காணிப்பு கேமரா, போதையில் வாகனம் ஓட்டுவோரை கண்டறிவதற்கான, 'ப்ரத் அனலைசர்' அதி நவீன துப்பாக்கிகள், காவலர்கள் பயன்படுத்தும் லத்தி உட்பட, பல பொருட்கள் வாங்கப்படுகின்றன.

முறைகேடு புகார்:


ஆனால், இந்தப் பொருட்கள் வாங்குவதற்கான, 'டெண்டர்' விடுவதில், முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன. அதனால், தமிழகத்திற்கு இந்தாண்டு தரவேண்டிய, மத்திய அரசு நிதி தரப்படவில்லை. மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்களான, எஸ்.பி.,க்கள் பயன்படுத்தும் வாகனங்கள் எல்லாம், 2 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓடியவையாக உள்ளன. அதனால், அவர்கள், மாவட்டத்தை விட்டு, காவல் பணிக்காக, பல, 100 கி.மீ., துாரத்தில் உள்ள பகுதிகளுக்கு, தங்களுக்கான வாகனத்தில் செல்ல முடியாத நிலைஉள்ளது.
சென்னையில், டி.ஜி.பி., நடத்தும் கூட்டங்களுக்கே, வாடகை வாகனத்திலோ அல்லது ரயிலிலோ தான் வருகின்றனர். பொதுவாகவே, போலீஸ் துறையில், வாகனங்கள் வாங்க, ஒவ்வொரு ஆண்டும்

குறைந்த அளவு நிதியே ஒதுக்கப்படுகிறது. அந்த நிதியில் வாங்கப்படும் புதிய வாகனங்களும், டி.ஜ.ஜி., - ஐ.ஜி., - கூடுதல் டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ளஅதிகாரிகளின் வீடுகளுக்கு, 'எடுப்பு' வேலைகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. இதனால், புதிய வாகனங்கள் வாங்க முடியாமல், கண்டமான வாகனங்களையே, மாவட்ட, எஸ்.பி.,க்கள் பயன்படுத்துகின்றனர்.
எஸ்.பி.,க்கள் நிலைமை தான் இப்படி என்றால், பெரும்பாலான இன்ஸ்பெக்டர்கள் பயன்படுத்தும் ஜீப்களும், ஏனோ தானோ நிலையில் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்னையால், மாவட்ட அளவில், கைதிகளை போலீஸ் நிலையத்தில் இருந்து, கோர்ட் மற்றும் சிறைக்கு, பஸ்களில் தான் அழைத்து செல்ல வேண்டியுள்ளது. பஸ்களில் செல்லும் போது, சில சமயங்களில், கைவிலங்குடன், கைதிகள் தப்பிக்கும் சம்பவங்களும், அவ்வப்போது நடக்கின்றன.
இதுமட்டுமின்றி, தமிழகத்தில், பல ஆண்டுகளாக போலீசார் பயன்படுத்தி வந்த, 2,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள், ஆங்காங்கே போலீஸ் நிலையங்களில் ஓரங்கட்டப்பட்டு துருப்பிடித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்கவும் அரசிடம் போதிய நிதி இல்லாததால், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்தப் பிரச்னை குறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு போலீஸ் அதிகாரிக்கு ஒரு வாகனம், இரண்டு டிரைவர் என்ற திட்டத்தை, தமிழக காவல்துறையில் அமல்படுத்த வேண்டும்.

காய்கறி வாங்க


ஒரு சில, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், தாங்கள் அலுவலகம் சென்று வர ஒரு வாகனத்தையும், வீட்டில் மனைவி, குழந்தைகள் பயன்படுத்த, நான்கைந்து வாகனங்களையும் பயன்படுத்துகின்றனர். விரல் விட்டு எண்ணக்கூடிய சில அதிகாரிகளே, ஒரே ஒரு வாகனத்தை மட்டும் பயன்படுத்துகின்றனர். இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி.,க்களுக்காக வாங்கப்படும் புதிய வாகனங்களை, உயர் அதிகாரிகளின் வீடுகளுக்கு, காய்கறி வாங்க, வேலைக்கார பெண்கள் பயன்படுத்துகின்றனர்; காலங்காலமாக இந்த நிலை தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தால் தான், சட்டம் - ஒழுங்கை, சிறப்பாக பராமரிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

சேலத்திற்கு, 22 புதிய வாகனங்கள் :

சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் செல்லும் முதல்வர், பழனிசாமி, அங்கிருந்து சேலம் செல்லும் போது, பாதுகாப்பு வாகனங்கள் உடன் செல்லும். அதற்காக, '22 புதிய வாகனங்கள், 2.74 கோடி ரூபாயில் வாங்கப்படும்' என, 2017 ஜூலையில், போலீஸ் மானிய கோரிக்கையின் போது, முதல்வர், பழனிசாமி அறிவித்தார். இதுபோல, போலீஸ் துறைக்கு, 39; தடய அறிவியல் துறைக்கு ஆறு; தீயணைப்புத் துறைக்கு, ஒன்பது அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 'டெண்டர்' முறைகேடு விவகாரத்தால், மத்திய அரசு நிதி கிடைக்காததால், இந்த அறிவிப்புகள் எல்லாம், ஏட்டளவிலேயே உள்ளன. தற்போது, இந்த அறிவிப்புகளில், சேலத்திற்கு மட்டும், முதல்வருக்கான பாதுகாப்பு வாகனங்கள் வாங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முதல்வரின் காருக்கு பின்னால், வெறுமனே செல்வதற்கு, இந்த வாகனங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றை மாவட்ட, எஸ்.பி.,க்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஏலம் விட்டால் வருவாய் கிடைக்கும் :

போலீசார் பயன்படுத்தி கண்டமான, 2,192 வாகனங்கள், காவல் நிலையங்களிலும், மாவட்ட, எஸ்.பி.,க்கள் அலுவலகங்களிலும், மழை, வெயிலில் நனைந்து துருப்பிடித்து, பாம்பு, பறவைகளின் கூடாரமாகி உள்ளன. இந்த வாகனங்களை குறிப்பிட்ட காலத்தில் ஏலம் விட்டால், அரசுக்கு வருவாய் கிட்டும். இதையெல்லாம், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. கண்டமான வாகனங்களுக்கு பதிலாக, புதிய வாகனங்கள் வாங்க, 15 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி தேவைப்படுவதாக, டி.ஜி.பி., அலுவலக அதிகாரிகள், அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அரசிடம் போதிய நிதி இல்லாததால், 15 கோடிக்கு பதிலாக, 1.16 கோடி ரூபாயை மட்டுமே, அரசு ஒதுக்கியுள்ளது. யானை பசிக்கு சோளப்பொரி போல, இந்த நிதியில், எவ்வளவு வாகனங்கள் வாங்கப்பட உள்ளனவோ, அவற்றில் எத்தனை வாகனங்கள், உயரதிகாரிகளின் வீட்டிற்கு செல்லப் போகின்றவோ தெரியவில்லை.- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MaRan - chennai,இந்தியா
09-ஜன-201811:17:33 IST Report Abuse

MaRan.. விடுதலை எப்போது?

Rate this:
Prabaharan - nagercoil,இந்தியா
03-ஜன-201810:28:27 IST Report Abuse

Prabaharanகாய்கறி வாங்க பழைய வண்டியை கொடுத்தால் வண்டி ரிப்பேர் ஆகி பின் காய்கறிகள் அழுகிவிடும். அதனால் தான் இந்த ஏற்பாடு?

Rate this:
Naga - Edmonton,கனடா
03-ஜன-201807:14:23 IST Report Abuse

Nagaஇந்த ரிப்போர்ட்டை கவர்னருக்கு ஆங்கிலத்தில் அனுப்பினால் ஆய்வு செய்ய வழி பிறக்கலாம்.

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X