அரசு மருத்துவமனை சேவைகள் குறித்து...விளம்பரம்! மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்| Dinamalar

தமிழ்நாடு

அரசு மருத்துவமனை சேவைகள் குறித்து...விளம்பரம்! மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

Updated : ஜன 03, 2018 | Added : ஜன 02, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
அரசு மருத்துவமனை சேவைகள் குறித்து...விளம்பரம்! மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

சென்னையில், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சேவைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்த, சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகளுடன் இணைந்த, 48 மருத்துவமனைகள்; ஒரு பல்நோக்கு அரசு மருத்துவமனை; ஒரு பல் மருத்துவமனை; 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள்; 11 ஆயிரத்து, 203 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

அவமரியாதை:
இதில், பொது மருத்துவம், சிறுநீரகம், இதயம், மூட்டு, தசை மற்றும் இணைப்பு திசு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்னைகள், புற்றுநோய், எலும்பு நோய்கள், இரைப்பை மற்றும் குடல் நோய்கள், முதியோருக்கான சிகிச்சை... கல்லீரல், சர்க்கரைநோய், நெஞ்சக நோய்கள், பாலியல் தொடர்பான பிரச்னைகள், மனநல பிரச்னைகள் உள்ளிட்ட, அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சைக்கும், தனித்தனி பிரிவுகள் உள்ளன. இதற்கு, தனித்தனியாக இயக்குனர்கள், அதன்கீழ் நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர்கள்உள்ளனர். மேலும், அவசர சிகிச்சையளிக்க, 'ஜீரோ டிலே வார்டு' உள்ளது. மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், மக்களுக்கு வழிகாட்ட உதவியாளர்கள் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இருந்தாலும், நடுத்தர மக்கள், தனியார் மருத்துவமனைகளையே தேடி செல்கின்றனர். அங்கு, சிகிச்சைக்கு அதிக கட்டணம் செலுத்தி, பாதிக்கப்படுகின்றனர்.

ஆனாலும், நோயாளிகள் மீதான அக்கறையின்மை, ஊழியர்களின் மெத்தன போக்கு, சுகாதாரமின்மை போன்ற காரணங்களால், நடுத்தர மக்கள், அரசு மருத்துவமனைகளுக்கு செல்வதில்லை. சில அரசு மருத்துவமனைகளில், ஒவ்வொரு பணிக்கும், ஒவ்வொரு விதமாக கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படுகிறது. பணம் தராவிட்டால், நோயாளிகளை அவமரியாதையாக பேசுவதோடு, சிகிச்சை அளிக்கவும் மறுக்கப்படுகிறது. அதேபோல், நோயாளிகள் அவசர காலங்களில் இருக்கும் போது, பெரும்பாலான மருத்துவமனைகளில், டாக்டர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதேபோல், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சுகாதார கட்டமைப்புகளை உருவாக்குவதும், அவற்றை மேம்படுத்துவதிலும், தமிழக அரசு கோட்டை விடுகிறது. அரசு மருத்துவமனைகளில் உள்ள கழிப்பறை, பார்வையாளர்கள் தங்கும் இடம் என, அனைத்தும், சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. இதனால், அரசு மருத்துவமனைகளுக்கு வருவோருக்கும், தொற்று நோய் ஏற்படும் என்ற பீதிஉள்ளது.

அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். அப்போது தான், அரசு மருத்துவமனைகள், சரியாக செயல்படும்; மக்களுக்கும், அரசு மருத்துவமனை மேல் நம்பிக்கை வரும். இந்த குறைகளை களைய, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சேவைகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திட்ட மிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் இதய சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை போன்ற அனைத்து உயர்தர சிகிச்சைக்கும், அதிநவீன மருத்துவ சாதனங்கள் உள்ளன.பிரபல தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்றும், கைவிடப்பட்ட நோயாளிகளை, அரசு மருத்துவமனை டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர். ஆசியா அளவில், அறுவை சிகிச்சையில், பல புதிய சாதனைகளையும் படைத்துள்ளனர்.

சாதனை:
இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில், சாதனைகள், சேவைகளை, 'டிவி' வழியாக விளம்பரப்படுத்த, சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னையில், ராஜிவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமாந்துாரர் போன்ற அரசு மருத்துவமனைகளில், 55 'டிவி'கள் நிறுவப்படுகின்றன.இதில், அந்தந்த மருத்துவமனை சாதனைகள் மற்றும் தமிழக அரசின் சுகாதாரத்திட்டம் போன்றவை விளம்பரபடுத்தப்பட உள்ளன.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.v.muthu - chennai,இந்தியா
03-ஜன-201811:25:17 IST Report Abuse
m.v.muthu பரிசோதனைக்க அதிக நேரம் காத்திருக்க வேண்டும். வார்டுகளில் செவிலியர்கள் பொறுமையுடன் இருப்பதில்லை. சில மருத்துவர்கள் மிகவும் கடினமாக நடந்து கொள்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X