'அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை' திட்டத்தால் இந்தியர்கள் கலக்கம்! 7.5 லட்சம் பேர் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படும் அபாயம் Dinamalar
பதிவு செய்த நாள் :
கலக்கம்!
'அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை' திட்டத்தால் இந்தியர்கள்..
7.5 லட்சம் பேர் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படும் அபாயம்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின், 'அமெரிக்க பொருட்களை வாங்குங்கள்; அமெரிக்கர்களை மட்டுமே பணிஅமர்த்துங்கள்' என்ற கொள்கையை நிறைவேற்றும் வகையில், அந்நாட்டு அரசு புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், 'எச் - 1பி' விசா வைத்திருக்கும், 7.5 லட்சம் இந்தியர்கள், சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் நிலை உருவாகும். இதனால், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பீதி எழுந்துள்ளது.

அமெரிக்கர்கள்,முன்னுரிமை,இந்தியர்கள்,கலக்கம்,7.5 லட்சம்,சொந்த நாடு,அபாயம்


அமெரிக்க அதிபராக, டிரம்ப் பதவியேற்றது முதல், வேலை வாய்ப்பில், அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகிறார்.

புதிய திட்டம்:


'அமெரிக்க பொருட்களை வாங்குங்கள்; அமெரிக்கர்களை மட்டுமே பணியமர்த்துங்கள்' என்பது, அவர் கொள்கையாக உள்ளது. இதன்படி, அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் நடவடிக்கைகளை, அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து துறைகளிலும், அமெரிக்கர்களை மட்டுமே பணியமர்த்தும் நோக்கில், டிரம்ப் அரசு, புதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால், திறமையான ஊழியர்களுக்கு வழங்கப்படும், எச் - 1பி விசா வைத்துள்ள எண்ணற்ற வெளிநாட்டவர்கள் பணி இழக்கும் நிலை உருவாகும்.

எச் - 1பி விசா மூலம், அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்களில், இந்தியர்கள் தான் பெருமளவில் உள்ளனர். இவர்களில்

ஏராளமானோர், அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை அளிக்கும், 'கிரீன் கார்டு' பெறுவதற்காக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

டிரம்ப் தலைமையிலான அரசு தயாரித்துள்ள திட்ட வரைவு, வெளிநாட்டவர்களை குடியமர்த்தும் பணிகளை மேற்கொண்டு வரும், டி.எச்.எஸ்., எனப்படும், உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கு, உள்ளார்ந்த குறிப்பாக அனுப்பப்பட்டுள்ளது.

அந்த குறிப்பில், 'எச் - 1பி விசா நீட்டிப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அமெரிக்க அரசு நிறைவேற்றினால், 5 - 7.5 லட்சம் இந்தியர்கள், சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் அபாயம் ஏற்படும் என, நிபுணர்கள் கருதுகின்றனர்.

கிரீன் கார்டு :


எச் -1பி விசா, மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா வைத்துள்ளவர்களின் பணி, திருப்திகரமாக இருந்தால், அதிகபட்சம், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு, விசா நீட்டிக்கப்படுகிறது. அதன்பின், அவர்கள், சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும். இந்த விசா வைத்திருப்பவர்களுக்கு, கிரீன் கார்டு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டால், அந்த கார்டு பெறுவதற்காக, காத்திருக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒப்புதல் கிடைத்தும், கிரீன் கார்டு கிடைக்காமல், இந்தியர்கள், நீண்ட காலம் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. ஓராண்டில், ஒவ்வொரு நாட்டுக்கும், கிரீன் கார்டு அளிப்பதில், உச்ச வரம்பு உள்ளதால், இந்த தேக்கநிலை இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை, இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அரசு தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகள், அந்நாட்டில் பணிபுரிய செல்வோர்,'விசா' பெறுவதை மிகுந்த சிரமத்துக்கு ஆளாக்கி உள்ளன. அவற்றை பயன்படுத்துவதிலும் அதிக சிரமங்கள் இருக்கும்.
-ஆர்.சந்திரசேகர், தலைவர், 'நாஸ்காம்'

Advertisement


ஒபாமா அளித்த சலுகையை பறித்த டொனால்டு டிரம்ப் :

அமெரிக்காவில், முந்தைய அதிபர், பராக் ஒபாமா ஆட்சியின் போது, 'எச் - 1பி' விசா வைத்திருந்து, கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் கணவன் அல்லது மனைவி, அமெரிக்காவில் பணிபுரிய வசதியாக, 'எச் - 4 இ ஏ டி' என்ற பணி அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த சலுகையை வாபஸ் பெறவும், டொனால்டு டிரம்ப் தலைமையிலான, தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், இந்தியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.ஆண்டுக்கு 85,000 பேர் :

அமெரிக்க அரசு, ஆண்டுதோறும், 85 ஆயிரம் பேருக்கு, 'எச் -1பி' விசா வழங்கி வருகிறது. இதில், 65 ஆயிரம் பேர், வெளிநாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள்; 20 ஆயிரம் பேர், அமெரிக்காவின் பள்ளி, கல்லுாரிகளில், மேம்பட்ட டிகிரி படிப்புகளில் சேர்பவர்கள். இவர்களில், 70 சதவீதம் பேர், இந்தியர்களாகவே உள்ளனர். 'பேஸ்புக், மைக்ரோசாப்ட், கூகுள்' போன்ற அமெரிக்க நிறுவனங்களிலும், இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ்., போன்ற, அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்களிலும், இந்தியர்களே பெரும்பாலும் பணியாற்றுகின்றனர். அமெரிக்க அரசின் இந்த புதிய திட்டத்தால், இந்தியர்களை பணியமர்த்தும் அமெரிக்க நிறுவனங்களுக்கே, கடுமையான பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது. அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை அவ்வப்போது இந்தியாவுக்கு திரும்ப அழைத்து, புதிய ஊழியர்களை அனுப்பி வருவதால், அவற்றுக்கு அதிக பாதிப்பு இருக்காது என, கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
03-ஜன-201820:51:17 IST Report Abuse

raghavan//அமெரிக்க அரசின் இந்த புதிய திட்டத்தால், இந்தியர்களை பணியமர்த்தும் அமெரிக்க நிறுவனங்களுக்கே, கடுமையான பாதிப்பு ஏற்படும் // இவர்களால்தான், இரண்டு கோடி, மூன்று கோடி ரூபாய் என்று இங்கே வீடுகள் வாங்க முடியும். இவர்களை வெளியேற்றினால் முதல் அடி ரியல் எஸ்டேட் தொழில் மீதுதான் விழும்.

Rate this:
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
03-ஜன-201820:11:14 IST Report Abuse

நந்தினி திவ்ய பாரதிஆஸ்திரேலியா, லண்டன், சிங்கப்பூர் ஜெர்மனிக்கு போயிருவங்கலமா. அங்கெல்லாம் குட்டிப்பிள்ளை சீக்கிரமா பொறந்துபோசீன்னா அங்யே இருந்துக்கவிட்ருவங்கலமா.

Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
03-ஜன-201819:09:15 IST Report Abuse

raghavanஅப்படியே, அவுட்சோர்சிங் பிபிஓ எல்லாத்தையும் ஒழிச்சிடுங்க நாடு ஈட்டும் அந்நிய செலவாணி அனாவசியமா கச்சா எண்ணெய்க்கே காலியா போகுது. நாங்க எதுக்கு உங்க நேரப்படி பகலிலும் எங்களின் இனிய இரவு பொழுதில் கண்விழித்து உடல் உபாதைகளுக்கு ஆளாகி அழியவேண்டும். கஷ்டமோ, நஷ்டமோ எங்கள் விவசாயத்துக்கே திரும்புறோம் உடல் மனது ஆரோக்கியமாக இருக்கும். ரொம்ப நன்றி டிரம்ப் அவர்களே.

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
03-ஜன-201817:09:42 IST Report Abuse

ஜெயந்தன்அப்படியே எல்லோரும் தமிழ் நாட்டிற்கு வந்து பிஜேபி உறுப்பினர் ஆகிடுங்க.. அடுத்த தேர்தலில் பிஜேபி நோட்டாவை விட அதிக வோட்டு வாங்கும்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
03-ஜன-201817:09:20 IST Report Abuse

Endrum IndianAmericans by nature "Totally Self Centred" Trump is following that path.

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
03-ஜன-201816:32:57 IST Report Abuse

BoochiMarunthuஇந்தியாவில் எவ்வளவு இந்து மதவெறி வளருகிறதோ அவ்வளவு சீக்கிரம் ஹிந்துக்களை அமெரிக்காக்காரன் விரட்டி விடுவான் . அவன் நேரடியா இது தான் காரணம் என்று சொல்ல மாட்டான் . இந்து உயர் ஜாதியினர் அமெரிக்காவில் குவிந்து ஜாதி சங்கங்களை ஆரம்பித்து வருகின்றன . நீ இந்தியாவில் பாவாடை ராகுல் வின்சி கிறிஸ்தவ சோனியா என்று கூவ கூவ அவன் மெதுவா காய் நகர்த்தி வருகிறான் . இந்தியாவில் இந்து மதவாதம் வளர வளர அமெரிக்கா uk ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் விசா குடியுரிமை விதிகளை கடுமையாக்கி உள்ளன . முன்பு பாதிரியாரை குழந்தைகளை எரித்து கொலை செய்தது போல மறுபடியும் நடந்தால் Trump கடுமையான நடவடிக்கை எடுத்து ஹிந்துக்களை துரத்திவிடுவார் . அப்போது இதே பிராமணர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு கமலஹாசனை போல secularism தான் வேண்டும் என்று கூவுவார்கள் அதையும் பார்க்கத்தான் போறோம் .

Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
04-ஜன-201811:48:44 IST Report Abuse

Milirvanபூச்சி.. அதுக்குமுன்ன முசுலீமே இல்ல விரட்டணும்? க்ரிஸ்ட்டீன் கோவில்லே பாதிரிய மாத்திரம் இல்ல.. கும்பல் கும்பலா போட்டு தள்றாங்களே.. தவிர லாஜிக்கலா அமெரிக்காவும் பாரதமும் மாத்திரமே ஜனநாயகம்.. மேலும் ஹிந்துக்கள் எங்கு சென்றாலும் அன்புடன் சட்டப்படி வாழ்பவர்கள்.. படிப்பும் திறமையும் உடையவர்கள்.. மனிதவளம் வேண்டுமென்று மூர்க்கர்களை சேர்த்துக்கொள்ளும் நாடுகள் இவர்களை விரட்டினால் அந்நாட்டிக்குத்தான் நஷ்டம்.. ஏதோ.. உங்கள் நப்பாசை.. சொல்லிவிட்டு போங்கள்.....

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
03-ஜன-201816:14:17 IST Report Abuse

ஜெயந்தன்மோடியின் ஆட்சில் அவனுங்க இங்க வந்துட்டானுங்க... இங்க இருக்குறவங்க எங்க போவாங்க..2019 வரை இது போல பல கூத்துக்கள் நடக்கும்...பொற்கால ஆட்சி அல்லவா ??

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
03-ஜன-201812:00:17 IST Report Abuse

Nakkal Nadhamuniவிவசாயி, மீனவர்களுக்காக குரல் கொடுக்க பலர் இருக்கிறார்கள்... இந்த மாதிரி திரும்பி வருபவர்களுக்காக குரல் கொடுக்க யாரேனும் இருக்கிறார்களா... இருக்காது, ஏனென்றால் இதனால் ஒட்டு கிடைக்காது...

Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
03-ஜன-201813:29:00 IST Report Abuse

Sridharஇவர்கள் என்ன திரும்பி வந்தால் தெருவிலா நிற்க போகிறார்கள்? கொஞ்சம் சொகுசு குறைவாக இருப்பார்கள். அவ்வளவு தானே? இந்தியாவில் கோடிக்கணக்கானோர் சோத்துக்கும் சுகாதாரத்திற்கும் சிங்கி அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அரசு அவர்களை பற்றி கவலைப்பட வேண்டுமா இல்லை சொகுசு குறைந்தவர்களை பற்றி கவலைப்பட வேண்டுமா? என்னய்யா சிந்தனை உமக்கு?...

Rate this:
MALIK - FREMONT,யூ.எஸ்.ஏ
03-ஜன-201814:36:27 IST Report Abuse

MALIKசரியாக சொன்னீர்கள், விட்டு போனது எழுபது ஆண்டுகளாக என்ற இரண்டு வார்த்தைகளும். "கோடிக்கணக்கானோர் சொத்துக்கும் சுகாதாரத்திற்கும் எழுபது ஆண்டுகளாக சிங்கி அடித்து கொண்டு இருக்கிறார்கள்"...

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
03-ஜன-201809:40:46 IST Report Abuse

balakrishnanஇரண்டுமுறை மோடி அவர்களின் அமெரிக்கா பயணத்தினால் இந்தியா பெற்ற நன்மை

Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
03-ஜன-201813:29:48 IST Report Abuse

Sridharஇப்படியும் கூட ஒருவரால் யோசிக்கமுடியுமா?...

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
03-ஜன-201816:39:31 IST Report Abuse

BoochiMarunthuமோடி போனது அம்பானி வியாபாரத்தை பெருக்கி உலகத்தில் நம்பர் 1 பணக்காரன் ஆக்குவதற்கு . இவர் 1 வினாடி கூட விசா பத்தி பேசி இருக்க மாட்டார் ....

Rate this:
Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
03-ஜன-201808:06:43 IST Report Abuse

Modikumarஇது உள்நாட்டு பிரச்சினை. ஒவ்வொரு நாடும் தன் குடிமக்களின் வேலை வாழ்வாதாரத்தை காக்க சட்ட நடவடிக்கை ஏற்படுத்து கொண்டுள்ளது. இது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருந்தும். இதில் நம் அரசு தலையிடவோ கட்டாய படுத்தவோ முடியாது. முக்கியமாக மென்பொருள் அல்லது வன்பொருள் சம்பந்தப்பட்ட கணினி வேலைகளுக்கு வெளிநாடு சென்று தான் பணியாற்ற வேண்டும் என்ற நிலை இல்லை. சென்னையில் ஆபீஸ் வைத்து கொண்டு உலகின் எந்த மூலையில் தேவை படும் நிறுவனத்திற்கு கணினி சம்பந்தப்பட்ட வேலையை ரிமோட் சிஸ்டம் மூலம் வழங்க முடியும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நாடு திரும்ப வாய்ப்பு கிடைத்தால் முடிந்தவரை நமக்கு டாலர் சம்பாத்தித்து கொடுத்த வெளிநாட்டிற்கு மனமார்ந்த நன்றி தெரிவித்து விட்டு நம் பிறந்த மண்ணிற்கு திரும்பி வருவதில் என்ன சிரமம். நான் என் தாய் நாட்டிற்கு வந்து நான் பார்த்த நல்ல நாடுகளை போல் என் நாட்டையும் மாற்ற வேண்டும் என எண்ணியுள்ளேன். ஆனால் என்னை திருப்பி அனுப்ப இன்னும் சிஸ்டம் அனுமதிக்க வில்லை. என்ன செய்வது.

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
03-ஜன-201816:37:13 IST Report Abuse

BoochiMarunthu//ஆனால் என்னை திருப்பி அனுப்ப இன்னும் சிஸ்டம் அனுமதிக்க வில்லை// நான் வெளிநாட்டில் தான் உள்ளேன் . அப்படி திருப்பி அனுப்ப கூடாது என்று ஒரு சிஸ்டெமும் இல்லை .நீ அந்த நாட்டை விட்டு வெளியே போகும் போது immigration ஸ்டேட்டஸ் கூட பார்க்க மாட்டார்கள் . மோடி என்ற பெயர் இருந்தாலே காதில் பூ சுற்ற தோணும் போல...

Rate this:
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
03-ஜன-201817:21:05 IST Report Abuse

M Selvaraaj Prabuநல்ல எண்ணம் தான். வரவேற்கிறேன். ஆனால் ஒரு சந்தேகம். //திருப்பி அனுப்ப இன்னும் சிஸ்டம் அனுமதிக்க வில்லை// என்பது புரியவில்லை. விளக்க முடியுமா சார்?...

Rate this:
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
04-ஜன-201812:02:01 IST Report Abuse

M Selvaraaj Prabu//வெளியே போகும் போது immigration ஸ்டேட்டஸ் கூட பார்க்க மாட்டார்கள்// இது உண்மை இல்லை. அப்படியானால், நீங்கள் முறையான விசா/பெர்மிட் இல்லாமல் எப்படியாவது அந்த நாட்டில் ஓரிரு வருடம் இருந்து விட்டு குஜாலாக வெளியே வர முடியுமா? நீங்கள்தான் காதில் பூ சுற்றுகிறீர்கள்....

Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement