புனே கலவரத்தை எதிர்த்து மும்பையில் போராட்டம் Dinamalar
பதிவு செய்த நாள் :
புனே கலவரத்தை எதிர்த்து
மும்பையில் போராட்டம்

மும்பை : மஹாராஷ்டிர மாநிலம், புனேயில், பீமா கோரேகாவ்ன் என்ற இடத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், வன்முறை சம்பவம், தலைநகர் மும்பைக்கும் பரவியது. இந்த வன்முறை குறித்து, நீதி விசாரணைக்கு, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

புனே,கலவரம்,எதிர்த்து,மும்பை,போராட்டம்


மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. புனே அருகே உள்ள, பீமா கோரேகாவ்ன் பகுதியில், 1818ல் நடந்த போரில், பேஷாவா ராணுவத்தை, கிழக்கிந்திய கம்பெனி ராணுவம் வென்றது. அந்த காலத்தில் தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்ட, மகர் இன மக்கள், கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்துக்காக போரில் பங்கேற்றதால், அந்த போரின் வெற்றியை, தலித் இன மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

பீமா கோரேகாவ்ன் பகுதியில், 200வது வெற்றி விழாவுக்கு, நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, தலித்

மக்களுக்கும், மராத்தா இன மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது, வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில், ஓர் இளைஞர் உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்த வன்முறை சம்பவம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று எதிரொலித்தது. மும்பையில், தலித் மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகளை முற்றுகையிட்டும், ரயில் மறிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பல இடங்களில் கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டன. பாதுகாப்பு கருதி பல பகுதிகளில் பள்ளிகள், கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. குறிப்பாக செம்பூர், முலந்த் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன.

வன்முறையை துாண்டி விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என, போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். புனேயில் நடந்த வன்முறை தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அறிவித்தார்.

மேலும், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்றும்

Advertisement

அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், மும்பையிலும், மாநிலத்தின் முக்கிய நகரங்களிலும், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மஹாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு:

புனேயை அடுத்துள்ள, பீமாகோரேகாவ்ன் பகுதியில் நடந்த வன்முறையைக் கண்டித்து, மஹாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பாரிபா பகுஜன் மகா சங்கத் தலைவரும், சட்டமேதை அம்பேத்கரின் பேரனுமான, பிரகாஷ் அம்பேத்கர் கூறியதாவது: ஹிந்து ஏக்தா அகாடி, சிவராஜ் பிரதிஸ்தான் ஆகிய அமைப்புகள், இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அந்த அமைப்புகளே வன்முறைகளுக்கு காரணம். இந்த சம்பவங்கள், தலித் மக்களுக்கும், மராத்தா மக்களுக்கும் இடையேயான மோதல் இல்லை. வன்முறை ஏற்படாமல் தடுக்க, மாநில அரசு தவறிவிட்டது. வன்முறையைக் கண்டித்து, இன்று மஹாராஷ்டிரா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இது ஏற்புடையதாக இல்லை. மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த, தலைமை நீதிபதியிடம் மாநில அரசு கோர வேண்டும். விசாரணை நடத்த முழு அதிகாரம், அந்த நீதிபதிக்கு இருக்க வேண்டும். தலித் அல்லாதவராகவும் அவர் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endless - Chennai,இந்தியா
03-ஜன-201819:51:35 IST Report Abuse

Endlessஇன்னும் எத்துணை காலம் கையேந்தி, தன்னை தானே தாழ்த்திக் கொண்டிருக்கும் இந்த விலைபோன கூட்டம்.... வாழும் நம் பரதம்... வளரும் நம் பாரத பாரம்பர்யம்....

Rate this:
NRK Theesan - chennai,இந்தியா
03-ஜன-201819:01:09 IST Report Abuse

NRK Theesanமுகலாய ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு முன் இந்தியா வளமான நாடாகவும் சிறப்பாகவும் இருந்த நாடுதான் .இந்துக்கள் மீது குறை சொல்லும் நீங்கள் அமைதி மார்க்கம் பாகிஸ்தானுக்கு சென்று இருக்கலாமே இந்தியாவிடம் இருந்து திருடிய இடம் தானே ?அங்கு வசித்த இந்து மக்களை கொன்று அனுப்பிய பொழுதும் உங்களை பாதுகாத்த மக்கள் உங்களை பாதுகாக்கும் பொழுது மத துவேசம் இருந்ததா ?இன்றும் நகரத்தில் நீங்கள் சொல்லாமல் நீங்களே அடையாள படுத்தாமல் இருந்தால் யாருடைய ஜாதியும் தெரியாது .இது தோல்வியில் இருக்கும் தேச விரோத சக்திகள்தான் .இனிமேல் ஒதுக்கீடு பொருளாதா அடிப்படை என்று கொண்டுவந்தால் சிறிது காலத்தில்ஜாதி ஒழிந்துவிடும் .குறிப்பிட்ட ஜாதி பணக்காரர்கள் மட்டுமே தன பிழைப்புக்காக கலவரத்தை நடத்துகிறார்கள் .

Rate this:
prem - Madurai ,இந்தியா
03-ஜன-201817:21:30 IST Report Abuse

premMohamed Ilyas Karaikal நீ இந்தியாவில் இருக்கிறாயா இல்லை மேற்குலகத்தில் இருக்கிறாயா..... (((முஸ்லிம்களோ அல்லது கிறிஸ்துவர்களோ எந்த இந்து கடவுளை தாக்கி , சிறுமைப்படுத்தி , கொச்சை படுத்தி பேசுகிறார்கள்))) இந்த கேடுகெட்ட மதவியாதிகளுக்கு இந்துக்களை தாக்கியும் சிறுமைப்படுத்தி பேசுவதையும் தவிர வேறு எந்த வேலையும் இல்லை. இந்து விவசாயீ தான் இந்த கேடுகெட்ட இழிபிறவிகளுக்கு சோறு போடுகிறான். அவனையும் அவன் மதத்தையும் இழிவுபடுத்தி பேசி அற்ப சந்தோஷமடைகிறார்கள். இந்த புண்ணிய பாரத தேசத்தின் காற்றை சுவாசித்து நீரை உண்டு வளங்களையெல்லாம் அனுபவித்து கொண்டு அந்நிய மண்ணில் தோன்றிய அர்த்தமில்லாத Moral இல்லாத தத்துவம் இல்லாத வறண்ட கொள்கைகளை பின்பற்றிக் கொண்டு தாய் மண்ணிற்கு சொல்லவொண்ணா அவமதிப்பு செய்கிறார்கள். முட்டாள்தனமான கொள்கைகளையும் சட்டங்களையும் கடவுளின் சட்டங்கள் என்று வாய் கூசாமல் பொய் சொல்லி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். சுயநலவாதியை தேவதூதன் என்று சொல்கிறார்கள். இன்னும் சொல்லவே முடியாத வார்த்தைகளை எல்லாம் தங்கள் பிழைப்புக்காக சொல்லி வருவதோடு மக்களை தவறான வழிநடத்தி வருகிறார்கள். ஒரு இந்து மட்டுமே தர்மத்தை காக்க தன்பாட்டுக்கு வாழ்ந்து வருகிறான். அவனை நிந்தனை செய்ய செய்ய என்றாவது ஒருநாள் அவன் விழித்தெழுந்து இந்த அநீதிக்கு எதிராக தனது குரலை உயர்த்தும் போது இந்த பொய்மை புரட்டு எல்லாம் அழிந்து புதிய உலகம் பிறக்கும். இது அடித்து அடித்து அமுக்கி குரல்வளை நெரிக்கப்பட்டு பின் தனது பலம் உணர்ந்து நீதி செய்ய எழுகின்ற ஒரு இனத்தின் பெருங்கோபம்...

Rate this:
மேலும் 47 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X