ஜெ., வழியில் செல்லும் ரஜினி! Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., வழியில் செல்லும் ரஜினி!

நடிகர் ரஜினி, தன் அரசியல் பிரவேசத்திற்கு, தகவல் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார். அவருக்கான இணையதளம் மற்றும், 'மொபைல் ஆப்' என்ற, மொபைல் போன் செயலி, டில்லியில் உருவாக்கப்பட்டுள்ளது.

A.D.M.K,Jayalalithaa,Kollywood,Rajini,Rajinikanth,அ.தி.மு.க,ஜெயலலிதா,ரஜினி,ரஜினிகாந்த்


ரஜினி, தன் ரசிகர் மன்றம் பெயரில், இணைய தளம் மற்றும் மொபைல் ஆப் உருவாக்கி, அதில் உறுப்பினராக சேரும்படி, அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த இணையதளம் மற்றும் மொபைல் ஆப், டில்லியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விபரம் கேட்பு:


இதன்மூலம், ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இணைவோர் குறித்து, அனைத்து விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன. முதலில், பெயர், மொபைல் எண், இ - மெயில் ஆகியவற்றை

பதிவிட்டு, உறுப்பினராக வேண்டும். அதன்பின், உள்ளே சென்றால், ஒவ்வொருவரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், வாக்காளர் அடையாள அட்டை எண்...

தற்போது ஆதரிக்கும் கட்சி பெயர், வசிப்பிட முகவரி, வீடு அமைந்துள்ள பகுதி, எந்த உள்ளாட்சி அமைப்பை சேர்ந்தது, வார்டு எண், தாலுகா, மாவட்டம், சட்டசபை தொகுதி பெயர், கல்வித் தகுதி, தொழில், ஆண்டு வருமானம் போன்ற விபரங்கள் கேட்கப்படுகின்றன. அத்துடன், ஏற்கனவே உறுப்பினரா என்பதும் கேட்கப்படுகிறது.

இக்கேள்விகள் வாயிலாக, உறுப்பினராக சேருவோரில் எத்தனை பேர் ஆண்கள்; பெண்கள்; எந்த வயதினர் என்ற, விபரங்களை சேகரிக்க முடியும். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், ஒவ்வொரு தாலுகாவிலும், ஒவ்வொரு வார்டிலும், எத்தனை ஆதரவாளர்கள் உள்ளனர் என்பதையும் அறிய முடியும். மேலும், இணையதளத்தில், உறுப்பினராக சேருவோர், எத்தனை பேரை வேண்டுமானாலும், அதில் சேர்க்கலாம்.

இதே பாணியை, ஜெ., ஏற்கனவே, 2014 லோக்சபா தேர்தலுக்கு பின்பற்றினார். அ.தி.மு.க.,வில் முதல் முறையாக, தகவல் தொழில்நுட்ப அணியை, ஜெ., துவக்கினார்.

Advertisement

அந்த அணி சார்பில், ஓட்டுச்சாவடி வாரியாக வாக்காளர் விபரங்கள் திரட்டப்பட்டன.

நலத்திட்டங்கள் :


ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர்; அவர்கள் அரசியல் கட்சியை சார்ந்தவர்களா, நடுநிலையாளர்களா, அவர்கள் வீட்டிற்கு அரசு நலத்திட்டங்கள் போய் சேர்ந்துள்ளனவா என்ற விபரங்களும் சேகரிக்கப்பட்டன. அனைத்து வாக்காளர்களின் மொபைல் எண்களும் சேகரிக்கப்பட்டன. அவர்கள் மொபைல் போனுக்கு, ஜெ., உரையின், 'ஆடியோ' பதிவு அனுப்பப்பட்டது. அந்த தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, 37 தொகுதிகளை கைப்பற்றியது.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - சென்னை,இந்தியா
03-ஜன-201821:11:34 IST Report Abuse

தமிழன்ஜெ. வின் திறமை அபாரமானது. கருணாநிதி கூட தடுமாறினார் என்பது தான் உண்மை. மாநிலத்தில் திமுக வையும், மத்தியில் மோடி அலையையும் ஒருசேர ஜெயித்துக் காட்டியவர்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-ஜன-201819:23:52 IST Report Abuse

Pugazh Vஜெயலலிதா வழியில்... கொடநாடு எஸ்டேட் க்கு பதில் கூர்க் கில் அவருக்கு ருக்கற எஸ்டேட் பங்களா வுக்கு அப்பப்ப போயிடுவாரா?? 164 சொத்துக்கள் அபரிமித மாக வாங்ஙி போடுவாரா?

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
03-ஜன-201817:02:17 IST Report Abuse

mindum vasanthamKadantha therthalukku munbu dimalarile oru rating kulu vaithirukkalaam thimuka ethanai karuthu thinippukal seithathu

Rate this:
மணிமாறன் - chennai,இந்தியா
03-ஜன-201816:32:19 IST Report Abuse

மணிமாறன் இதெலாம் ஓவரா இல்ல... ஜெயலலிதா தமிழ் ஆங்கிலம் இரண்டும் மிக சரளமாக பேசியவர்... அரசு நிர்வாகத்தை கரைத்து குடித்தவர்.. மிக சிறந்த ஆளுமை மிக்க தலைவர்.. இவரோ 40 வருடம் கழித்தும் தட்டு தடு மாறி தமிழோ ஆங்கிலமோ பேச கற்று கொண்டிருக்கிறார்.....ஜெயாவின் திறமையில் அணு அளவும் இவருக்கு இல்லை... ஜெயாவின் வழியில் செல்ல இவர் தகுதியானவர் அல்ல... அது முடியவும் முடியாது..

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
03-ஜன-201815:53:20 IST Report Abuse

Endrum Indianரஜினியோ, ஜெயாவோ மண்டையில் சுயமாக ஒன்றும் கிடையாது, அவர்கள் வெறும் சாதாரணன் மூளையில் தான் செயல்படுகின்றனர். ஒரு வீரப்பன் ஜெயாவுக்கு, ஒரு குருமூர்த்தி ரஜினிக்கு அவ்வளவு தான், இவர்கள் தான் மூளையை கசக்கி எப்படி, என்ன செய்ய வேண்டும் என்று செய்து இவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வந்ததும் அவர்களை ஒதுக்கி அல்லது குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்கள். இது தான் வாழ்வின் அவலம்/ நிஜம்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
03-ஜன-201815:47:28 IST Report Abuse

Endrum Indianஆதார் எண்ணை கேட்கவில்லை??????

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
03-ஜன-201815:45:46 IST Report Abuse

Endrum Indianகாமராஜர் வழியில், கக்கன் வழியில் என்று சொல்லக்கூட முடியவில்லை???? குடிகாரப்பசங்கள் 72% நிறைந்த டாஸ்மாக் நாட்டில் வேறு என்ன எதிர்பார்க முடியும். சர்வேஸ்வரா உனது ஊழித்தாண்டவத்தை எப்பொழுது ஆரம்பிப்பாய்???

Rate this:
suresh - chennai,இந்தியா
03-ஜன-201813:43:10 IST Report Abuse

sureshஜெயலலிதா வெற்றியின் ரகசியம், ஒன்று, திமுகவின் ரவுடியிசம் , இரண்டு, இரட்டை இலை, திமுக ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், மக்கள் அலறியடித்து கொண்டு வேறு கட்சியை தேடினால், கண்ணில் தெரிவது இரட்டை இலை இதற்க்கு மேல் ஜெயலலிதாவின் வெற்றி ரகசியம் வேறு ஒன்றும் இல்லை. தனது ஆளுமை திறனால் கிடைத்த வெற்றி வாய்ப்பை தக்க வைத்து கொண்டார்,

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
03-ஜன-201813:09:40 IST Report Abuse

Nallavan Nallavanதகவல் தொழில்நுட்பத்தைக் கட்சியை வளர்க்க மட்டுமல்லாது பிரச்சாரத்துக்காகவும் பயன்படுத்தியதில் முன்னணியில் இருந்தது, இருப்பது பாஜக தான் .... அதன் பிறகே காங்கிரஸ் விழித்துக் கொண்டது .... தமிழகத்தில் கூட திமுக-தான் அதிகம் பயன்படுத்தியது ....

Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
03-ஜன-201815:17:20 IST Report Abuse

s.rajagopalanஇனி இந்த முறைதான் செயல்படும். பொதுக்கூட்டம் நடத்த இடமுமில்லை, கூட்டமும் சேர்வதில்லை. காமெடியன்களும் வண்டை வண்டையாக பேசுபவர்களும் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு தமாஷ் பார்க்க கொஞ்சம் கூடலாம். யாரை பார்த்தாலும் கையில் ஒரு மொபைல் , கோழி கொத்துவது போல் எதையோ கொத்திக் கொண்டு நடக்கிறார்கள் ...ஆக அதுதான் இனி பிரச்சாரத்திற்கு ஏற்ற கருவி....

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
03-ஜன-201812:14:49 IST Report Abuse

Karuthukirukkanஜெ வழி என்றால் என்ன ?? மன்னார்குடி மாபியா வெச்சு கொள்ளை அடிப்பதா ?? அவருடைய வலைத்தளம் மிக கண்றாவியாய் உள்ளது .. நான் கூட ரெஜிஸ்டர் செய்தேன் .. இதனை பேர் விளையாட்டுக்கு செய்தே வெறும் ஐம்பாதாயிரம் பேர் தான் ரெஜிஸ்டர் செய்து இருக்கிறார்கள் .. ஆனால் மீடியா ஏதோ இவர் ஆட்சியை பிடிப்பது போல பில்ட் அப் செய்து கொண்டு இருக்கு .. பிஜேபிக்கு கூட மிஸ்ட் கால் கொடுத்தேன் .. ஹி ஹி .. ஆனால் ஓட்டெல்லாம் போட மாட்டேன் .. மக்களை என்ன நினைத்து கொண்டு இந்த ரஜினி போன்றோர் அரசியலுக்கு வருகின்றனர் ..

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement