தினகரன் கொடுத்தனுப்பிய, 'பென் டிரைவ்' விசாரணை கமிஷனில் ஒப்படைப்பு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தினகரன் கொடுத்தனுப்பிய, 'பென் டிரைவ்'
விசாரணை கமிஷனில் ஒப்படைப்பு

சென்னை : ஜெ., மரணம் குறித்து விசாரிக்கும், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில், நேற்று தினகரன் சார்பில், 'வீடியோ' பதிவுகள் அடங்கிய, 'பென் டிரைவ்' ஒப்படைக்கப்பட்டது.

Dinakaran,TTV Dinakaran,டி.டி.வி. தினகரன்,தினகரன்,பென் டிரைவ்,விசாரணை கமிஷன்,ஒப்படைப்பு,இளவரசி மகள், கிருஷ்ணபிரியா,நான்கு வீடியோ


சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன், தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., இருந்தபோது எடுக்கப்பட்டதாக கூறி, 20 வினாடி வீடியோ காட்சியை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, அவருக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது.

இதையடுத்து, அவர் அந்த வீடியோவை, விசாரணை கமிஷனில் ஒப்படைத்தார். அதேபோல், தினகரன், சசிகலா ஆகியோருக்கும், சம்மன் அனுப்பப்பட்டது. தினகரன் சார்பில், நேற்று அவரது வழக்கறிஞர், ராஜா செந்துார்பாண்டியன், விசாரணை கமிஷனில் ஆஜராகி, வீடியோ காட்சிகள் அடங்கிய, 'பென் டிரைவ்' ஒன்றை ஒப்படைத்தார்.


பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தினகரன் சார்பில், 'பென் டிரைவ்' ஒப்படைத்துள்ளோம். அதிலிருக்கும் பதிவுகளை பார்த்துவிட்டு, நீதிபதி ஒப்புகை சீட்டு கொடுத்துள்ளார். மேலும், வெற்றிவேல் தாக்கல் செய்த வீடியோ தவிர, வேறு என்னென்ன இருந்ததோ, அவற்றை எல்லாம் ஒப்படைத்து உள்ளோம்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு, டிச., 23ல், சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் எனக்கு வக்காலத்து கொடுத்துள்ளார். அதை நான் தாக்கல் செய்ய உள்ளேன். தினகரன், வெற்றிவேல் ஆகியோரை, எளிதாக சந்திக்க முடிந்ததால், அவர்களிடமிருந்த பொருளை பெற்று, ஒப்படைக்க முடிந்தது. சசிகலாவுக்கு, 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளனர். அதன்பின், வக்காலத்து போட்டு, ஆவணங்களை தாக்கல் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

இளவரசி மகளிடம் 4 மணி நேரம் விசாரணை!


ஜெ., மரணம் தொடர்பாக, இளவரசி மகள், கிருஷ்ணபிரியாவிடம், விசாரணை கமிஷனில், நான்கு மணி நேரம் விசாரணை நடந்தது.

நேற்று காலை, 10:15 மணிக்கு, அவரிடம் விசாரணை துவங்கியது; பகல், 2:15 மணிக்கு நிறைவடைந்தது. ஜெ., மருத்துவமனையிலிருந்த

Advertisement

போது நடந்த சம்பவங்கள், அப்போது எடுக்கப்பட்டதாக கூறி, வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ உட்பட, பல விஷயங்கள் குறித்து, நீதிபதி விசாரித்துள்ளார்.

விசாரணை குறித்து, கிருஷ்ணபிரியா கூறுகையில், ''விசாரணை கமிஷனுக்கு, என் தரப்பில் முழு ஒத்துழைப்பு அளித்தேன். மற்ற விபரங்களை பகிர்ந்து கொள்வது, சரியாக இருக்காது. ஜெ., சிகிச்சை தொடர்பாக, வீடியோ ஆதாரம் இருப்பதாக, நான் எதுவும் கூறவில்லை,'' என்றார்.

புதிதாக நான்கு வீடியோ!

தினகரன் வழங்கிய, 'பென் டிரைவில்' ஏற்கனவே, முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ பதிவுடன், மேலும், நான்கு வீடியோ பதிவுகள் இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், ஜெ., வீட்டில் வேலை செய்தவர்கள் குறித்த விபரங்களை ஒப்படைக்கும்படி, ஜெ., உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கு, சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர், ஓராண்டாக, போயஸ் கார்டனில் பணிபுரிந்த, 15 பேர் பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை, விசாரணை கமிஷனில் ஒப்படைத்துள்ளார். இந்தப் பட்டியலில், டிரைவர்கள், சமையல்காரர்கள் உட்பட, பலர் இடம் பெற்றுள்ளனர். விரைவில் இவர்களுக்கு, விசாரணை கமிஷன் சார்பில், சம்மன் அனுப்பப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
03-ஜன-201816:09:32 IST Report Abuse

Endrum Indianஇதிலிருந்தே தெரியவில்லையா இந்த வீடியொ பூராவும் டுபாக்கூர் என்று?? அப்பல்லோவில் சி.சி.டி.வி புடிங்கிப் போட்டுவிட்டு வீடியொ பிடிப்பார்களாம்? அப்படியென்றால் நிறுத்தி நிதானமாக யோசித்து கொலையை மறைக்க என்ன என்ன வழியெல்லாம் இருக்கின்றது என்று ஆய்ந்து ஆராய்ந்து செய்தது போல மிக தத்ரூபமாக இருக்கின்றது. ஆமா ஜெயா கொலைக்கு முன் இந்த கண்றாவிகள் எல்லாம் மீடியாவில் வரவேயில்லையே?? தீபாவில் ஆரம்பமான ஒவ்வொருவரும் இப்போ மீடியாவில் ஆஜர்.

Rate this:
Malaichaaral - Ooty,இந்தியா
03-ஜன-201811:06:52 IST Report Abuse

Malaichaaralகொலைகார குடும்பம்..

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
03-ஜன-201809:12:16 IST Report Abuse

balakrishnanஅவருடைய மரணம் இயற்கையான மரணம், இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை, என்று தீர்ப்பு வரப்போகிறது, ஓ.பி.எஸ் சும். ஈ.பி.எஸ் சும் தங்களின் பதவி வெறியினால் தங்களின் சுயநலத்திற்க்காக தங்களது உயிரினும் மேலான தலைவியின் மரணத்தை கொச்சைப்படுத்தி விட்டார்கள்

Rate this:
rajan - kerala,இந்தியா
03-ஜன-201808:13:39 IST Report Abuse

rajanஇதுவும் வெற்றி கனி அக்கா சேலை கலரில் கட்டி ரெண்டுமா சேர்ந்து இந்த தமிழ் நாட்டை அசத்திடுவார்களோ. அத்தனை பரதேசிகளும் இனி செத்தானுங்கடா.

Rate this:
rajan - kerala,இந்தியா
03-ஜன-201808:00:31 IST Report Abuse

rajanஓ இப்போ தான் உண்மையான சின்னத்தாயி வீடியோ கடை சி டி எல்லாம் பென் டிரைவ் ஆக மாறி கச்சோடத்துக்கு வந்து விட்டதோ. அப்போ சின்னத்தாயி மௌன சாமியாராகி பூடுவாரோ.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-ஜன-201804:41:13 IST Report Abuse

Kasimani Baskaranஇவர்கள் கொடுக்கும் பில்டப் எதோ சுதந்திரத்துக்கு பாடுபட்டது போல இருக்கிறது... எல்லாம் நேரம்...

Rate this:
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
03-ஜன-201803:01:08 IST Report Abuse

கும்புடுறேன் சாமிஒரு பெண்ணைப்பற்றிய வீடியோவை பென் டிரைவ் வில்தான் வெக்கணும்ன்னு நினைத்த தினகரன்தான் அடுத்த புதிய புரட்சித்தலைவர்

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-ஜன-201818:57:45 IST Report Abuse

தமிழ்வேல் அவரைப் பற்றிய வீடியோவை ஒரு ஆன் ட்ரைவரில் வைப்பார்.....

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
03-ஜன-201802:40:46 IST Report Abuse

அன்புசசி குடும்பத்து உறுப்பினர்கள் அத்தனை பேரின் சொத்துக்களையும் தமிழகம் எடுத்து கொள்ள வேண்டும்.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
03-ஜன-201809:18:27 IST Report Abuse

balakrishnanசசியும் ஜெ யும் ஒன்று தான், இருவர் சொத்தும் ஒன்று தான், அத்தனை சொத்துக்கள் வாங்குவதற்கு முக்கிய காரணமே ஜெ தான் அதை வசதியாக மறைக்க முடியாது,...

Rate this:
skv - Bangalore,இந்தியா
03-ஜன-201801:51:40 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>அதுமட்டும் இல்லீங்க அவர் அப்போலோலே அட்மிட் ஆனா பொது பாலா விபரீதங்கள் நடந்தன என்றும் அவர் தாக்கப்பட்டார் என்றும் அதுலே சசி இளவரிசிசரஸ்வதி வாலார்மதியும் உடந்தை என்றும் ரூமெர்இருக்கே அதெல்லாம் எப்படீங்க மறைக்கப்பட்டன ?//அவருக்கென இருந்த ஸ்பெஷல் உதவியாளப்பணுக்கள் கடத்தி என்னாச்சி ?இருக்காளா இல்லே கொலை செய்யப்பட்டார்களா ? எவ்ளோ மர்மங்கள் அதெல்லாம் எப்படீங்க பாறைக்கப்பட்டன ஒரு முதல்வருக்கே இந்த கதி என்றால் (அவ நடிச்சு சேர்த்த காசுலேதான் போயஸ் ஆண்ட சில சொத்துக்களை வாங்கினார் ) எல்லாத்தையும் சுருட்டிண்டுபோகவே தான் நடராசன் சசியை உள்ளே அனுப்பின்னான் , இப்போ அவனும் நடைப்பிணம் அவளும் சிறையிலே ஜாலியா சுத்தின்னு இருக்கா . சசியின் கூட்டத்ததுலே சகலமும் பிராடுகளேதான் இது தெளிவான உண்மை ஆனால் எதனாலோ எல்லாம் மூடி மறைச்சுண்டு மேல ஆகாசம் கீழே காதல்னு சொல்லிநிண்டே நீட்டுறாங்க வழக்கை

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
03-ஜன-201809:17:06 IST Report Abuse

balakrishnanஅம்மா இருக்கும் வரை அவரது அறையை எட்டிப்பார்க்க கூட எவனுக்கும் தைரியம் இருந்தது இல்லை, எல்லோருமே சசியை பார்த்துவிட்டுத்தான் திரும்பினார்கள், ஏன்., அந்த அளவுக்கு சசிகலாவுக்கு ஜெ அவர்கள் அனுமதி கொடுத்து இருந்தார், ஜெ அவர்களை மிகவும் யோக்கியசிகாமணியாக்க சசிகலாவை பலிகடா ஆக்க நினைக்கிறார்கள், அனைத்து சொத்துக்களும் ஜெ அவர்கள் உயிருடன் இருந்தபோது வாங்கியவைகள் தான், இப்போ வசனம் பேசுவது எடுபடாது,...

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
03-ஜன-201817:15:07 IST Report Abuse

dandyமஞ்சள் துண்டு குடும்பம் மாதிரி உத்தமர்களாக .பினாமி பெயரில் சொத்துக்கள் சேர்க்க உயர் அறிவு வேண்டும் நைனா...

Rate this:
karthi - chennai,இந்தியா
03-ஜன-201817:22:06 IST Report Abuse

karthiஜெயலலிதா மரணத்தில், உலகமே சசிகலா மேல் சந்தேகப்படும் போது, பாலகிருஷ்ணன் மட்டும் சசிக்கு வக்காலத்து வாங்குவது ஏன்? பாலகிருஷ்ணன் எவ்வளவு கோடிக்கு விலை போனார்?...

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
03-ஜன-201801:44:55 IST Report Abuse

ramasamy naickenகிருஷ்ண ப்ரியா கண்ணாடியில் சூப்பர் ஆக இருக்கின்றார்.

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
03-ஜன-201816:48:59 IST Report Abuse

dandyதமிழ் படத்தில் அக்கா வேடம் போடலாம்...

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-ஜன-201819:01:24 IST Report Abuse

தமிழ்வேல் இப்போ mgr மட்டும் உசுரோட இருந்தா..................

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement