'எனக்கே தெரியாது!' கட்சி பெயர், சின்னம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் பளிச் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கட்சிபெயர்,சின்னம்,நடிகர்,Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்,பளிச்

அரசியலில் குதித்துள்ள, நடிகர் ரஜினி, தன் கட்சியின் பெயர், சின்னம் குறித்து, தனக்கு எதுவும் தெரியாது; போக போக தெரியும் என, நேற்று காலையில், சினிமா பாணியில் தெரிவித்தார். மாலையில், 'கட்சி கொடி தயாரிக்கும் பணி நடக்கிறது. பெயர், சின்னம் பற்றி விரைவில் அறிவிப்பேன்' என, பதில் அளித்தார். அதோடு, 'ஆன்மிக அரசியல்' குறித்தும் விரிவான விளக்கம் அளித்தார். தன் அரசியல் பிரவேசத்தை, உலகறிய செய்ததற்காக, பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தொடர்ந்து ஆதரவு தரவும், வேண்டுகோள் விடுத்தார்.

கட்சிபெயர்,சின்னம்,நடிகர்,Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்,பளிச்


நடிகர் ரஜினியின், அரசியல் பிரவேசம், அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தையும், அரசியல் கட்சிகளிடம் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதையடுத்து, அவர், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

தன் ரசிகர்களையும், பொது மக்களையும் ஒருங்கிணைப்பதற்காக, ரசிகர் மன்றம் பெயரில், இணைய தளம் மற்றும், 'மொபைல் ஆப்' உருவாக்கி உள்ளார்.அதைத் தொடர்ந்து, மன்றத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி வேகம் பெற்றுள்ளது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும், ஆர்வமுடன் உறுப்பினராகி வருகின்றனர்.

நேற்று காலையில், சென்னை, போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் முன், நிருபர்களிடம் பேசிய ரஜினி, ''என் கட்சி பெயர், சின்னம் குறித்து எனக்கே தெரியாது; போக போக தான் தெரியும்,'' என்றார்.


கொடி தயாரிப்பு :


'ஆன்மிக அரசியல்' கடுமையாக விமர்சிக்கப்படுவது குறித்து கேட்ட போது, 'உண்மையான, நேர்மையான, நாணயமான, ஜாதி, மதச் சார்பற்ற அரசியலே, ஆன்மிக அரசியல்' என, பதில் அளித்தார். சென்னையில், நேற்று மாலை, பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'கட்சி பெயர், சின்னம், கொடி தயாரிப்பு பணி நடந்து வருகிறது' என்றார்.

சென்னையில் ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டது போல், பத்திரிகையாளர்களை சந்தித்து, தனித்தனியே பேசி, புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது, அவர் பேசியதாவது: சென்னையில், ஆறு நாட்களாக, ரசிகர்களை சந்தித்து பேசிய விபரங்களை, உலகமறிய செய்த பத்திரிகைகளுக்கு நன்றி. நானும் சிறு வயதில், பத்திரிகையில் பிழை திருத்துபவராக பணியாற்றி உள்ளேன். நண்பர் ராமசந்திர ராவ், என்னை கன்னட தினசரி பத்திரிகை ஒன்றில், பிழை திருத்துனராக சேர்த்து விட்டார். அங்கு, இரண்டு மாதம் பணியாற்றினேன்.

தமிழ் வார இதழ் ஒன்றுக்கு, 1976ல், பேட்டி கொடுத்தேன். அதன் பின், 1996ல், பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அதன் பின், இன்று வரை, அறிக்கை மட்டுமே கொடுத்து வருகிறேன். பத்திரிகையாளர்களை எப்படி கையாள வேண்டும் என, எனக்கு தெரியவில்லை. நான் ஏதாவது சொன்னால், அது, பெரிய விவாதமாகி விடுகிறது. இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமானது மட்டுமே. நான் ஏதாவது தவறாக செய்திருந்தால் மன்னிக்கவும்.

நம் எல்லாருக்கும் ஒரு கடமை உள்ளது. சுதந்திரப் போராட்டத்தை போல்,

Advertisement

தற்போது, ஜனநாயகப் போராட்டம் துவங்கி உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க, நிறைய போராட்டங்கள், தமிழகத்திலிருந்து தான் துவங்கி உள்ளன.

அரசியல் புரட்சி:


இங்கிருந்து, அரசியல் புரட்சி துவங்க வேண்டும் என்பதே, என் ஆசை. இந்த தலைமுறையில், இந்த போராட்டம் துவங்கினால், வரும் தலைமுறையினரும் சந்தோஷப்படுவர். அதற்கு, உங்கள் ஒத்துழைப்பு தேவை. விரைவில், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

தனி விதம்!

நடிகர் ரஜினி, யாரை சந்திக்கிறாரோ, அது தொடர்பான விஷயங்களை நினைவுகூர்வதை வழக்கமாக்கி உள்ளார். சமீபத்தில், நெல்லை, கோவை, மதுரை, சென்னை மாவட்ட ரசிகர்களை சந்தித்த ரஜினி, அந்தந்த மாவட்ட மக்கள் குறித்தும், அந்தந்த ஊரில் நடந்த சம்பவங்களையும் கோடிட்டு காட்டிய பின்னரே, பேச்சை துவக்கினார். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோதும், இரண்டு மாதம், கன்னட பத்திரிகையில் வேலை பார்த்ததாக கூறினார்.பல ஆயிரம் பேர் :

ரஜினி ஆரம்பித்துள்ள மன்றத்தில், இதுவரை, பல ஆயிரம் பேர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி மன்றம் பெயரில், இணையதளம் மற்றும், 'மொபைல் ஆப்' செயலியை துவக்கியுள்ள ரஜினி, அதில் சேருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அதன்படி, ரசிகர் மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என, பல ஆயிரம் பேர் இணைந்திருப்பதாக, ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (144)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) தெரியாதா ? ரகசியம் காக்கிறாரா?

Rate this:
ஈரோடுசிவா - erode ,இந்தியா
04-ஜன-201800:23:29 IST Report Abuse

 ஈரோடுசிவாஅட ... திராவிச பாம்புகளே ... ரஜினி அரசியலில் இறங்கி தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடிக்க முடிவெடுத்திருக்கிறார் ... இதைக்குற்றம் என்று யாரும் சொல்ல முடியாது ... இந்திய அரசியல் சாசனப்படி இது ஒரு இந்திய பிரஜையின் உரிமை ... விருப்பமிருந்தால் மக்கள் தேர்ந்தெடுக்கட்டும் ... இல்லாவிட்டால் போகட்டும் ... இது ரஜினி பாடு ... மக்கள் பாடு ... நடுவில் இங்கே சிலர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வது ஏனோ ... ?

Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
03-ஜன-201819:31:04 IST Report Abuse

raghavanகாஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிலை மாற்றி பெரும் ஊழல் நடந்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன. இவர் ஏதாவது போராட்டம் செய்து தொண்டர்களை திரட்டி உண்மையை வெளி கொண்டுவருவாரா???

Rate this:
Ramesh Lal - coimbatore,இந்தியா
08-ஜன-201822:16:29 IST Report Abuse

Ramesh Lalரஜினிக்கு போராட்டம் செய்வது பிடிக்காது பேச்சுவார்த்தை மூலம் கண்டுபிடிப்பார். இப்போது இருக்கும் பிரச்னை குறித்தும் பேசமாட்டார். எம்.எல். எ . தேர்தல் வரும்போது கட்சி ஆரம்பிப்பார். எல்லோரும் அவருக்கே ஒட்டு பொடுரோம். அவர் முதல்வர் ஆவார்....

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-ஜன-201819:09:19 IST Report Abuse

Pugazh Vஎன்ன கட்சி ? தெரியாது. என்ன சின்னம்? தெரியாது. என்ன கொடி கலர்? தெரியாது. என்ன கொள்கை? தெரியாது. பளிச் பளிச் னு பதில் காது கிளிஞ்சுது. பெரிய பெட்டி வாங்கிவிட்ட ஊடகங்கள் கும்மி அடிக்குதுங்க

Rate this:
Krish Sami - Trivandrum,இந்தியா
09-ஜன-201812:37:17 IST Report Abuse

Krish Samiபுகழின் ஆத்திரம் புரிகிறது ஜெயலலிதா இல்லாத, உடைபட்ட அ இ அ தி மு க விடம் டெபாசிட் இழந்த தி மு க வின் 'செயல்படா' தலைவர் ஸ்டாலினின் பலவீனம் புரிந்துவிட்டதால் வரும் ஆத்திரம். இடையில் ரஜினி , கமல் போன்றவர்கள் வண்டி ஓட்ட நினைத்தால் புலம்பாமல் என்ன செய்வார்? ஆழ்ந்த அனுதாபங்கள். மற்றப்படி ரஜினி போன்ற 'திடீர்' தலைவர்கள் குறித்த விமர்சனங்களில் பொருள் இல்லாமல் இல்லை....

Rate this:
Snake Babu - Salem,இந்தியா
03-ஜன-201819:08:58 IST Report Abuse

Snake Babuஅகத்தியர் தமிழுக்கு இலக்கணத்தை வகுத்தார், அவர் தமிழை உருவாக்கவில்லை, தொல்காப்பியர் அவர் மாணவர் தான், தொல்காப்பியம் அகத்தியர் உருவாக்கியதை விட பெயர் பெற்றது. இலக்கணமே, மொழியை யாரும் உருவாக்கவில்லை. அடுத்து சமஸ்கிருதம் என்பது ஒரு encrypted code அதாவது சிலவிஷயங்களை மறைத்துவைக்க உருவாக்கப்பட்ட மொழி, அதில் மறை பொருளை வைத்தார்கள் அதை சிலர் பாதுகாக்க வேண்டும் என்று பணித்தார்கள். சமஸ்கிருதம் என்பது ஒரு வாழும் மொழி அல்ல. அதன் மொழியை அர்த்த்தை உள் அர்த்தத்தை அறிந்து கொள்ள ஆன்மீகத்தில் சிறந்து இருந்தால் தான் உணரமுடியும். தற்போது உள்ளவர்களுக்கு அப்படி ஒரு திறமை குறைவு என்று சொல்லலாம். மேலும் தற்போது அர்த்தத்தை தன போக்குக்கு சொல்லி சொல்லி உண்மையான ஆன்மீகத்தையே சீர்குலைத்துக்கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக பிராமிணர்கள் என்பது அவர்களுடைய செயலால் வர வேண்டும் ஆனால் வெறும் தகப்பன் பிராமிணன் அதனால் தானும் பிராமினனன் என்பதனால் தான் இவ்வளவு எதிர்ப்பு. இது உணர்வு மூலமாக வரவேண்டியது. கண்டிப்பாக உங்களை போன்றோர் பிராமினாராக இருக்கவே முடியாது. அந்தணர்களை பற்றி அகத்தியர், திருமூலர், திருவள்ளுவர் பாடலை பாருங்கள் அதன் படி வாழுங்கள். மூர்க்க குணத்தை விட்டொழியுங்கள். ராமானுஜர் போல நிறைய இருக்கிறது அதனுடைய யோக நிலையை பற்றி சித்தர்கள் நிறைய பாடிவைத்துள்ளார்கள். முதலில் ஒன்றை உறுதியாக கொள்ளுங்கள். கடவுள் ஒவ்வொருவர் உள்ளும் இருக்கிறது தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் ஏசுவிலும் இருக்கிறார் உன்னுள்ளும் இருக்கிறார் என்னுள்ளும் இருக்கிறார் முதலில் சகமனிதர்களை மதிக்கக்கற்றுக்கொள்ளுங்கள் மூர்க்ககுணத்தை விட்டொழுங்கள் நன்றி வாழ்க வளமுடன்

Rate this:
makkal neethi - TVL,இந்தியா
03-ஜன-201818:42:19 IST Report Abuse

makkal neethi அவனுக்குத்தான் தெரியும் ஒரு ஆரம்பமும் அதன் முடிவும் அட யாருக்காம்மா புரியும் இவன் வேடிக்கையும் அதன் விளைவும் ...

Rate this:
prem - Madurai ,இந்தியா
03-ஜன-201818:02:51 IST Report Abuse

premசிவா சிவா தமிழ்நாட்டை இந்த பகல் வேஷதாரியிடமிருந்து காப்பாற்று ..... தமிழனை அப்பன் இல்லாத அனாதை பிறவி ஆக்கி விடாதே... யார் யாரெல்லாம் தமிழனுக்கு அப்பனாவது..... மானம் ரோசம் உள்ள தமிழர் சிந்திப்பீர்

Rate this:
tamilselvan - chennai,இந்தியா
03-ஜன-201817:34:46 IST Report Abuse

tamilselvanநம் தமிழ்நாடு தலை எழுத்து, காலை ஒரு பேச்சி மாலை பேச்சி இப்படிப்பட்டவர்கள் தமிழ்நாட்டை ஆள பார்க்கிறார்கள் சிந்தியுங்கள் மக்களே தமிழ் நாட்டில் இருக்கும் ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் சிந்தியுங்கள்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
03-ஜன-201817:25:41 IST Report Abuse

Endrum Indianமீடியா இதை/இந்த உளரல்களை பிரசுரம் செய்யாமல் இருட்டடிப்பு செய்தால் இவர்கள் பெருமை/பிரபலம் படுத்துவிடும். அதை மீடியா செய்யுமா? செய்யாது?? இதை வைத்துக்கொண்டு தான் தன்னுடைய வியாபாரத்தை பெருக்க மீடியா முயற்சி செய்கின்றது. மீடியாவே தயவு செய்து இதை எல்லாம் பிரசுரம் செய்யமால் இருடடிப்பு செய்யவும்.

Rate this:
Riyadh Thamizhan - Riyadh,சவுதி அரேபியா
03-ஜன-201815:40:13 IST Report Abuse

 Riyadh Thamizhanவருங்கால தமிழக முதல்வர் விஜய் சேதுபதி வாழ்க... வாழ்க... வாழ்க... (இதுதான் இன்றைய அரசியல், புரிஞ்சவன் புரிஞ்சுக்கோ)

Rate this:
மேலும் 132 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement