ஏகாம்பரநாதர் சிலைகளில் தங்கம் இல்லை : ஆய்வு மேற்கொண்ட போலீசார் அதிரடி தகவல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏகாம்பரநாதர் சிலைகளில் தங்கம் இல்லை : ஆய்வு மேற்கொண்ட போலீசார் அதிரடி தகவல்

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (5)
Advertisement
ஏகாம்பரநாதர் சிலைகளில் தங்கம் இல்லை : ஆய்வு மேற்கொண்ட போலீசார் அதிரடி தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், விலை மதிப்பில்லாதது என கருதப்பட்ட, பழைய உற்சவர் சிலையிலும், அது பழுதானதால் செய்யப்பட்ட புதிய உற்சவர் சிலையிலும் தங்கம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

புதிய உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று மேற்கொண்ட ஆய்வில் இது தெரிந்தது.

முறைகேடு : காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவில், பல நுாற்றாண்டு பெருமை கொண்டது. இங்குள்ள, பழைய உற்சவர் சிலை சிதிலம் அடைந்ததாகக் கூறி, புதிய சிலை செய்ய, அறநிலையத்துறை முடிவு செய்தது. 'பழைய உற்சவர் சிலை, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதில், 75 சதவீதம் தங்கம் உள்ளது; பல கோடி ரூபாய் மதிப்பு கொண்டது' என, காலம் காலமாக கூறப்பட்டு வந்தது. கடந்த, 2016ல் செய்யப்பட்ட, புதிய உற்சவர் சிலை மற்றும் அம்பாள் சிலையில், 5.45 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டதாக, கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அந்த அளவுக்கு அதில் தங்கம் சேர்க்கப்படவில்லை என்றும், சிலை செய்யப்பட்டதில், முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு படி, கடந்த, 10ல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், காஞ்சிபுரத்தில் விசாரணை நடத்தினார். அதன் பின், தலைமை ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் முருகேசன், சிலையை செய்த மாசிலாமணி மற்றும் ஸ்தானிகர்கள் ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பரிசோதனை : இதற்கிடையே, காஞ்சிபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரமணி, டி.எஸ்.பி., முகிலன் முன்னிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ரகுபதி தலைமையில், 12 போலீசார், ஏகாம்பரநாதர் கோவில் சிலைகளை நேற்று ஆய்வு செய்தனர்.
ஏகாம்பரநாதர் பழைய உற்சவர் சிலை உட்பட நான்கு சிலைகளை, நவீன கருவிகளுடன் பரிசோதித்தனர். அப்போது, திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. விலை மதிக்க முடியாதது என கருதப்பட்ட, பழைய சிலையிலும் தங்கம் கிடையாது; புதிதாக செய்யப்பட்ட சிலையிலும், போதிய அளவு தங்கம் இல்லை என்பது தெரிய வந்தது. இதனால், விலை மதிப்பில்லாதது என கருதப்பட்ட உண்மையான சிலை எங்கே... அந்த சிலை தான் என கருதப்படும், பழைய உற்சவர் சிலையும் போலி தானா... என, பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரமணி கூறியதாவது: நேற்று நடந்த ஆய்வில், பழைய சிலைகள் இரண்டு, புதிதாக செய்யப்பட்ட உற்சவர் சிலை மற்றும் அம்மன் சிலை என நான்கிலும் தங்கம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக, தவறு எங்கு நடந்துள்ளது... யார் செய்தனர் என்பதை கண்டறிவோம். விசாரணைக்கு பின் தகுந்த நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
03-ஜன-201811:24:59 IST Report Abuse
Harinathan Krishnanandam எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் நாட்டில் உள்ள அனைத்து தங்கத்தையும் அரசிடம் ஒப்படைத்து பத்திரங்கள் ஆக மாற்றிக்கொள்வது மக்கள் அனைவருக்கும் நல்லது கோவில்களும் இனி தங்க காணிக்கை பெறுவது இல்லை என்று அறிவிப்பு செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
vasu - Sydney,ஆஸ்திரேலியா
03-ஜன-201811:04:05 IST Report Abuse
vasu விலை மதிப்பு என்பது காலக்கணக்கு. தங்கம் இல்லை என்பது இந்த அரசியல்வாதி அதிகாரிகளின் விதி கணக்கு, பஞ்ச பூத மண் தலத்தில் நடந்து இருப்பதால், வம்சமே மண்ணாக போகிறது,
Rate this:
Share this comment
Cancel
ravisankar K - chennai,இந்தியா
03-ஜன-201807:47:19 IST Report Abuse
ravisankar K தமிழர் வாழ்வில் மற்றொரு மகுடம் . காஞ்சி மட்டுமல்ல , தமிழகத்தின் பல கோயில்களில் நிலைமை இதுதான் . எல்லாம் திராவிட பாரம்பரியம் . பல சிலைகளுக்கு எந்த ஆவணமும் கிடையாது . எவ்வளவு கொள்ளை போயின என்றும் தெரியாது .இந்த லட்சணத்தில் தமிழர் பெருமை பேசும் மூடத்தனம் .
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
03-ஜன-201803:55:10 IST Report Abuse
Bhaskaran முழு பூசணிக்காயையே சோற்றில் மறைப்பவர்களாயிற்றே நம் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திருச்செந்தூர் வைர வேல் திருடிய அமைச்சர் காலத்திலேயே இந்த தங்கத்தையெல்லாம் சுருட்டியிருப்பார்களோ என்னமோ பகுத்தறிவு வாதிகள் என்று சொல்லிக்கொண்டு கடவுள் சொத்தை கொள்ளையடிப்பவர்கள் உலகத்தில் தமிழகத்தை தவிர வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
03-ஜன-201803:42:24 IST Report Abuse
ramasamy naicken காஞ்சி ஸ்வாமிகளை விசாரித்தால் கண்டிப்பாக உண்மை வெளிவரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை