மத்திய அரசு மசோதா : ஸ்டாலின் கடும் எதிர்ப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு மசோதா : ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 மத்திய அரசு மசோதா : ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

சென்னை : தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: மருத்துவ கல்வியை தனியாருக்குத் தாராளமாகத் தாரை வார்ப்பதற்காகவே, தேசிய மருத்துவ கமிஷன் மசோதா கொண்டு வரப்படுகிறது. தேசிய அளவிலான பொதுத்தேர்வு எழுதி விட்டுத் தான், டாக்டர் தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற நிபந்தனையை உருவாக்குவதும், ஆபத்தை விளைவிக்கும். 'நீட்' தேர்வு மற்றும் எம்.பி.பி.எஸ்., பாடத்திட்டத்தை முடித்த பின், மீண்டும் ஒரு பொதுத்தேர்வு என்பது, அடித்தட்டு மக்களின் மருத்துவ கனவுக்குத் தடுப்பணை என்றே, தி.மு.க., கருதுகிறது. கடுமையான அபராதம், ஓட்டுனர் உரிமம் பெற கல்வித் தகுதியுடன் கூடிய, வரைமுறையற்ற நிபந்தனைகள் விதிப்பதுடன், மாநில உரிமைகளை அபகரிக்கும் விதத்தில், மோட்டார் வாகனத் திருத்தச் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில உரிமைகளை அபகரிக்கும், இரு மசோதாக்களையும், மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prem - chennai,இந்தியா
03-ஜன-201818:06:41 IST Report Abuse
Prem Mathiya arasoda seilgal ellam kovam varum alavuku iruku
Rate this:
Share this comment
Cancel
Brindha Sundar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜன-201811:38:06 IST Report Abuse
Brindha Sundar எதிர் கட்சி என்பது, மத்திய மாநில அரசுகள் கொண்டு வரும் நல்ல விஷயங்களை எல்லாம் எதிர்க்கவேண்டிய கட்டாயமில்லை. மக்களின் நாட்டின் வளர்ச்சிக்கு அரசுகள் கொண்டு வரும் நல்ல விஷயங்களை ஆதரித்து, தவறான விஷயங்களை எதிர்ப்பதற்கு மட்டுமே. வளர்ந்த எல்லா நாடுகளிலும் இருக்கும் நடைமுறை. இதை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன? மக்கள் வளர்வது பிடிக்க வில்லையா? அல்லது ஊழல் ஒழிவது பிடிக்கவில்லையா?
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
03-ஜன-201811:01:29 IST Report Abuse
adalarasan எல்லா மருதவக்கல்லூரியிலும் அரசியல்வாதிகள், பினாமிகள் கையில்தான் கறுப்புப்பணம் வாங்கி, பெரும் பணக்காரர்களாக்கினார்கள். சிலர் அந்த மசோதாவை படிக்காமலேயே என்ன வென்று புரிந்துகொள்ளாமல் எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X