எம்.ஜி.ஆருக்கு கவர்னர் பன்வாரிலால் புகழாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆருக்கு கவர்னர் பன்வாரிலால் புகழாரம்

Added : ஜன 03, 2018
Advertisement
எம்.ஜி.ஆருக்கு கவர்னர் பன்வாரிலால் புகழாரம்

தஞ்சாவூர்: ''மறைந்த முதல்வர், எம்.ஜி.ஆர்., கிராமப்புற விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியவர்,'' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.

மறைந்த முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, தஞ்சாவூர் தமிழ் பல்கலை வளாகத்தில், அவரது, 2.5 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை நேற்று, கவர்னர் புரோஹித் திறந்து வைத்து, 'பாரத ரத்னா எம்.ஜி.ஆர்., பன்முகப் பார்வை' எனும் நுாலை வெளியிட்டு பேசியதாவது: எம்.ஜி.ஆர்., தன் எண்ணங்களையும், நோக்கங்களையும் செயல்படுத்திய மாமனிதர். அவரது உன்னதமான திட்டங்களால், ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மனதில், நிரந்தரமான இடம் பிடித்துள்ளார். அவர், முதல்வராக இருந்த போது, நிறைவேற்றிய உன்னதமான திட்டங்கள், இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தன.
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, இலங்கை தமிழர்களை பாதுகாப்பதில், முக்கியப் பங்கு வகித்தார். கிராமப்புற விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தினார். இவ்வாறு கவர்னர் பேசினார்.

முன்னதாக, கவர்னர் புரோஹித், நேற்று முன்தினம், தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில், சலங்கை நாதம் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். நேற்று காலை, 7:00 மணிக்கு, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்தார். தொடர்ந்து, குழந்தையம்மாள் நகருக்கு சென்ற கவர்னர், வீடு வீடாகச் சென்று, மாநகராட்சி பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்கு கின்றனரா என்பதை கேட்டறிந்தார். புதிய பஸ் ஸ்டாண்டில், துாய்மை இந்தியா திட்டத்தில், குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்ட கவர்னர், அங்குள்ள கடைகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.கவர்னரின் ஆய்வை கண்டித்து, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, பழனி மாணிக்கம், முன்னாள் எம்.பி., கணேசன், உட்பட, 300க்கும் மேற்பட்ட, தி.மு.க.,வினர், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, கவர்னர் காரில் வரும் போது, தயாராக வைத்திருந்த கறுப்பு கொடியை காண்பித்து, எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து, மலையில், பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில், தஞ்சாவூர் மாவட்டத் திட்டப் பணிகள் குறித்து, அதிகாரிகளுடன் கவர்னர் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை