தினகரன் நன்றி அறிவிப்பு : ரூ. 10 ஆயிரம் கிடைக்குமா?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் நன்றி அறிவிப்பு : ரூ. 10 ஆயிரம் கிடைக்குமா?

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: நன்றி தெரிவிக்க தினகரன் வருவதால், 20 ரூபாய் டோக்கனுக்கு பணம் கிடைக்கும் என, ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார். இவர், முறைப்படி, டிச., 29ல், எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்றார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க, இன்று மாலை தொகுதிக்கு செல்கிறார். புதுவண்ணாரப்பேட்டை, செரியன் நகர் பகுதியில் இருந்து, திறந்த வேனில் சென்று நன்றி தெரிவிக்கிறார். தினகரன் தரப்பினர், கடைசி நேரத்தில், ஓட்டுக்கு, 20 ரூபாய் டோக்கன் கொடுத்து, வெற்றி பெற்றதும், 10 ஆயிரம் ரூபாய் தருவதாக, உறுதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 20 ரூபாய் பெற்ற மக்கள், எப்போது பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தினகரன், இன்று நன்றி தெரிவிக்க வருவதால், ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கிடைத்து விடும் என்ற மகிழ்ச்சியில், தொகுதிமக்கள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
L.Pannneerselvam - chennai,இந்தியா
04-ஜன-201802:08:45 IST Report Abuse
L.Pannneerselvam மக்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ இல்லையோ, இப்பத்திரிக்கைக்கு எதிர்ப்பார்ப்பு அதிகம் இருக்கிறது. கையில்லே பணத்தை கொடுத்து ஓட்டு கேட்டாலே, பணம் கொடுத்தவருக்குத்தான் ஓட்டுபோட்டார் என்று நிச்சயம் கிடையாது. அப்படியிருக்க , தேர்தலில் வெற்றிபெற்று வந்தபின் தருவதாக சொன்னதற்காகவா மக்கள் ஓட்டு போட்டிருப்பார்கள்? மக்களை இப்படி கேவலப்படுத்துவது தவறானது.ஓட்டுபோட்ட எண்பத்தி ஓன்பதாயிரம் பேரும் பணம் வாங்கிக்கொண்டுதான் அல்லது பின்னர் பணம் தருவார்கள் என்று நினைத்துத்தான் ஓட்டளித்திருப்பார்களா? இப்படி தவறாக நினைத்துத்தான் தினகரனை எல்லோரும் வளர்த்துவிடுகிறார்கள். இன்னொன்று: இம்மாதிரி பத்திரிக்கைகள் தொடர்ந்து எழுதுவதால்,ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், பெறுவதும் சாதாரணம் என்ற எண்ணத்தை மக்களிடையே விஷத்தை தூவுவதுபோல் பரவச்செய்கின்றனர்.நல்ல பத்திரிக்கைகளுக்கு இது அழகல்ல, முறையல்ல
Rate this:
Share this comment
Cancel
Brindha Sundar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜன-201815:00:27 IST Report Abuse
Brindha Sundar அட்வான்ஸுக்கு ஒட்டு போட்ட அறிவாளி ஆர்.கே.நகர் மக்களே, நன்றி கூற இன்று தொகுதிக்கு வரும் பொழுதே பணத்தை வாங்கி விடுங்கள். இல்லையேல் தன் மீது இருக்கும் வழக்குகளை பல ஆண்டு காலம் நீடித்து கொண்டிருப்பதை போல், உங்களுக்கு கொடுக்கவேண்டிய இந்த பணத்தை கொடுப்பதற்கும் காலம் தாழ்த்திவிடுவார். கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
03-ஜன-201807:54:42 IST Report Abuse
Amirthalingam Sinniah காதிலே பூ வேணுமா, வயிதெரிச்சல் வேணுமா?.நீங்கள் முடிவு செய்யுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை