சுயேச்சை ஆதரவாளர்கள் பதவி பறிப்பு தொடர்கிறது| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுயேச்சை ஆதரவாளர்கள் பதவி பறிப்பு தொடர்கிறது

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: தினகரனுக்கு ஆதரவு அளித்ததால், தகுதி நீக்கம்செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களின், கட்சிப்பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
தினகரனுக்கு ஆதரவு அளித்த, 18 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அவர்களின் கட்சிப் பதவியை பறித்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், பழனி சாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மத்திய மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர், கோதண்டபாணி; வேலுார் மேற்கு மாவட்ட மகளிர் அணிப் பொருளாளர், ஜெயந்தி பத்மநாபன்; தேனி மாவட்ட மருத்துவ அணி துணைத் தலைவர், கதிர்காமு ஆகியோரின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலர், சுப்பிரமணியன்; சிவகங்கை மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர், மாரியப்பன் கென்னடி; ராமநாதபுரம் மாவட்ட, மருத்துவ அணி செயலர், முத்தையா; துாத்துக்குடி மாவட்ட, அண்ணா தொழிற்சங்க துணைச் செயலர், சுந்தரராஜ்; துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஒன்றிய இணை செயலர், உமாமகேஸ்வரி ஆகியோர், அப்பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், விருத்தாசலம் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், விருத்தாசலம் நகரச் செயலர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் எம்.எல்.ஏ., வாக இருப்பதாலும், மற்றவர்கள் மீதான தகுதி நீக்கம் வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்ப தாலும், கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை