இன்று அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்று அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று கட்சி தலைமை அலுவலகத்தில், நடைபெற உள்ளது. தமிழக சட்டசபை கூட்டம், வரும், 8ல் துவங்குகிறது. அன்று, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சட்டசபையில் உரையாற்றுகிறார். கூட்டத்தில்,சுயேச்சையாக வெற்றி பெற்ற தினகரனும்,பங்கேற்க உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 'டிபாசிட்'டை பறிகொடுத்த தி.மு.க.,வினர், சட்டசபையில், பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை தங்கள் வசம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க, தினகரனும் முயற்சித்து வருகிறார். இவற்றை முறியடிக்கவும், சட்டசபை கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை தீர்மானிக்கவும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னையில், கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், அ.தி.மு.க.,வின் அனைத்துஎம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்பரா என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை