அண்ணா பல்கலை துணைவேந்தர் யார்? : மூன்றாவது தேடுதல் வேட்டை துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணா பல்கலை துணைவேந்தர் யார்? : மூன்றாவது தேடுதல் வேட்டை துவக்கம்

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, மூன்றாம் முறையாக தேடல் பணி துவங்கி உள்ளது. தகுதியுள்ளவர்கள், பிப்., 1-க்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவி, 2016 மே முதல் காலியாக உள்ளது. இந்த பதவிக்கு, புதிய நபரை தேட, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர், பாஸ்கரன் தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர், மூன்று பேர் பட்டியலை கவர்னரிடம் அளித்தனர்.
அந்த மூன்று பேரிடம் நடத்திய நேர்காணலில், திருப்தி ஏற்படாததால், தேடல் குழுவை கவர்னர் கலைத்தார். பின், துணைவேந்தர் பதவிக்கான தேடல் குழுவில், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடம் பெறும் வகையில், சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி, லோதா தலைமையில், இரண்டாவது கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, பணிகளை துவக்கிய நிலையில், அதற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர் அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து, கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த, நீதிபதி லோதா, கவர்னர் அலுவலகத்தில் ராஜினாமா கடிதம் கொடுத்தார். இதற்கிடையில், தேடல் குழுவுக்கு வழங்கப்பட்ட, நான்கு மாத அவகாசமும் முடிந்து, குழு காலாவதியானது.
தொடர்ந்து, மூன்றாவதாக, உச்ச நீதிமன்ற நீதிபதி, சிர்புர்கர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, முதலில் இருந்து பணிகளை துவக்கி உள்ளது.
இதன்படி, துணைவேந்தர் பதவிக்கு, மூன்றாம் முறையாக, விண்ணப்பங்கள் தாக்கல் செய்ய, நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் பிப்., 1 வரை விண்ணப்பிக்கலாம் என, தேடல் குழுவின், பொறுப்பு அதிகாரி கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார். கூடுதல் விபரங்களை, www.annauniv.edu என்ற, இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை