குறைந்த வருவாய் பிரிவு வீடு ரூ.67 லட்சம் : வீட்டு வசதி வாரியம், 'ஏடாகூடம்'| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குறைந்த வருவாய் பிரிவு வீடு ரூ.67 லட்சம் : வீட்டு வசதி வாரியம், 'ஏடாகூடம்'

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடுகள் விலையை, 67 லட்சம் ரூபாயாக, வீட்டுவசதி வாரியம் நிர்ணயித்துள்ளது. இது, பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டு வசதி வாரியத்தின், சென்னை, பெசன்ட் நகர் கோட்டத்துக்கு உட்பட்ட, அடையாறு இந்திரா நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லுார் பகுதிகளில், சுயநிதி திட்டத்தில் வீடுகள் கட்டப்படுகின்றன.
விலை அதிகம் என்பதால், வீடுகளை வாங்க, மக்கள் முன்வரவில்லை. ஆனால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் வீடு வாங்க முதலீடு செய்து விட்டதாக கூறி, கட்டுமான பணிகளை வாரியம் துவக்கியது.

அறிவிப்பு : மக்கள் பதிவு செய்யாத வீடுகளுக்கான செலவு, வாரிய நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. வாரிய நிதியை முதலீடாக செய்த வீடுகளை, குலுக்கல் முறையில் விற்க, வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.
அடையாறு இந்திரா நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லுார் பகுதிகளில், குறைந்த வருவாய் பிரிவில், 37 வீடுகளும், நடுத்தர வருவாய் பிரிவில், 47 வீடுகளும் குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட உள்ளன. இதில், குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீட்டின் விலை, 26 லட்சம் முதல், 67 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீட்டின் விலை, 59 லட்சம் ரூபாய் முதல், 1.75 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடுகளை வாங்க விரும்புவோர், ஜன., 4 முதல், 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, வாரியம் அறிவித்துள்ளது.

மக்கள் அதிர்ச்சி : இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: வாரிய மக்கள் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி, மாதம், 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுவோர், குறைந்த வருவாய் பிரிவினராக வரையறுக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு மேல், வீட்டுக்கடன் கிடைக்காது. அப்படி இருக்கும் போது, எப்படி, 67 லட்சம் ரூபாய் விலையில் வீடு வாங்க முடியும். அதிகாரிகளுக்கு, இந்த அடிப்படை விஷயம் கூட தெரியவில்லை.
இதே போன்று, மாத சம்பளம், 37 ஆயிரம் ரூபாய் வரை உள்ள நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீடுகள் விலை, 1.75 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் விலை நிர்ணயிக்கும் போக்கை, வாரியம் கைவிட வேண்டும். அடிப்படை நோக்கத்தை விட்டு விலகும் வாரியத்தின் செயல்பாடுகளை, தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
03-ஜன-201803:34:30 IST Report Abuse
ramasamy naicken பொதுமக்களே, முந்திரி முதல் இஞ்சினீர், சுக்குநீர் வரை எல்லோரும் இந்த வீடுகள் கட்டுவதில் அடித்த கொள்ளையை நீங்கள் கொடுக்காமல் டொனால்ட் டிரம்ப் ஆ கொடுக்க போகிறார். அடுத்த தேர்தல் வரும்போது ஒரு வோட்டுக்கு இருபது ஆயிரம் கேளுங்கள், கண்டிப்பாக கொடுப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை