'இ - சேவை' மையங்களில் ரூ.3.33 கோடி வசூல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'இ - சேவை' மையங்களில் ரூ.3.33 கோடி வசூல்

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகளில், ஏராளமான பிழைகள் இருப்பதால், 'இ - சேவை' மையங்களுக்கு, 3.33 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில், காகித வடிவிலான ரேஷன் கார்டுகளுக்குப் பதிலாக, 'ஸ்மார்ட் கார்டு' என்ற, கையடக்க அட்டை, வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதில், பெயர், முகவரி போன்றவற்றில் பிழை இருந்தால், அரசு நடத்தும், இ- - சேவை மையங்களில், திருத்தங்கள் செய்யப்பட்டு, புதிய கார்டு வழங்கப்படுகிறது.
இது குறித்து, இ - சேவை மையங்களை நடத்தி வரும், அரசு கேபிள், 'டிவி' நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில், ஏராளமான அச்சுப்பிழைகள் உள்ளன. அதனால், இ - சேவை மையங்களில், ஒரு நாளுக்கு, 10 ஆயிரம் பேர் வரை, பிழை திருத்தங்கள் கோரி விண்ணப்பிக்கின்றனர். பிழைகளை திருத்த, 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம்.
பின், அதை அச்சிட்டு, புதிய கார்டு வழங்க, 30 ரூபாய் செலுத்த வேண்டும். இதுவரை, 11 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்டுகள், இ - சேவை மையங்களில் வினியோகிக்கப்பட்டுள்ளன. அதன் வாயிலாக, 3.33 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
03-ஜன-201804:17:08 IST Report Abuse
Bhaskaran முதலில் இந்த ஸ்மார்ட் கார்டகளை அச்சிட்டுக்கொடுத்த அச்சங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் செய்த தவறுகளுக்கு மக்களிடம் தண்டம் வசூல் செய்வது போல் இருக்கிறது தவறுகள் இருப்பின் பணம் வாங்காது ஸ்மார்ட்க்கார்டுகளை புதியதாக அச்சிட்டு கொடுப்பது அரசின் கடமையாகும் இதற்க்காக அரசின்மேல் வழக்கு தொடர வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை