விளையாட்டு வீரர்களுக்கு ரூ.99 லட்சம் ஊக்கத்தொகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு வீரர்களுக்கு ரூ.99 லட்சம் ஊக்கத்தொகை

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: விளையாட்டு போட்டிகளில், பதக்கம் வென்ற, ஒன்பது விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளித்த, ஐந்து பேருக்கு, ஊக்கத்தொகையாக, 99 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் பழனிசாமி, நேற்று வழங்கினார்.
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில், ஜூலையில் நடந்த, 22வது ஆசிய தடகள போட்டிகளில், 5,௦௦௦ மற்றும், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், லட்சுமணன், தங்கம் வென்றார். அவருக்கு, 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. தொடர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம், 400 மீட்டர் ஓட்டத்தில், வெள்ளி வென்ற ஆரோக்கியராஜுக்கு, 15 லட்சம் ரூபாய்; தொடர் ஓட்டம் தகுதிச்சுற்று போட்டியில், தங்கம் வென்ற மோகன்குமாருக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
கனடா நாட்டில், ஆக., 4 முதல், 13 வரை நடந்த, உயரம் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான, விளையாட்டுப் போட்டிகளில், மூன்று தங்கம் வென்ற கணேசனுக்கு, 15 லட்சம் ரூபாய் தரப்பட்டது. தங்கம், இரண்டு வெள்ளி வென்ற மனோஜுக்கு, 11 லட்சம் ரூபாய்; தங்கம் வென்ற செல்வராஜுக்கு, ஐந்து லட்சம் ரூபாய்; அவர்களின் பயிற்சியாளர்கள், ரஞ்சித்குமார், சுந்தர் ஆகியோருக்கு, 4.65 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
உஸ்பெக்ஸ்தான் நாட்டின், தாஷ்கண்ட் நகரில், ஒன்பதாவது ஆசிய வயது பிரிவினருக்கான, 'சாம்பியன்ஷிப்' போட்டி, செப்., மாதம் நடந்தது.
அதில், நான்கு பதக்கங்கள் வென்ற விக்காசுக்கு, 9.50 லட்சம்; தங்கம் வென்ற லெனார்ட்டுக்கு, நான்கு லட்சம்; வெள்ளி வென்ற தனுசுக்கு, 2.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
அவர்களின் பயிற்சியாளர்கள், சரோஜினிதேவி, கர்ணன், வீரபத்ரன் ஆகியோருக்கு, 2.40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை