சுகாதார ஆய்வாளர் பணி : மாற்று திறனாளிகள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார ஆய்வாளர் பணி : மாற்று திறனாளிகள் கோரிக்கை

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: 'சுகாதார ஆய்வாளர் பணி நியமனத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு, இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி, புதிய அறிவிக்கை வெளியிட வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில், காலியாக உள்ள, 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப, தகுதியானவர்கள் விண்ணப்பிக்க கோரி, நகராட்சி நிர்வாக கமிஷனர் அறிவித்து உள்ளார்.
அதன்படி, விண்ணப்பிக்க, வரும், 19ம் தேதி கடைசி நாள். சுகாதார ஆய்வாளர் பணி, மாற்றுத் திறனாளிகளும் செய்யக்கூடிய ஒன்றாக, மத்திய, மாநில அரசுகள் அங்கீகரித்துள்ளன.
பல்வேறு நகராட்சிகளில் மாற்றுத் திறனாளிகள், இப்பணியில் உள்ளனர். ஆனால், நகராட்சி நிர்வாக கமிஷனர், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை மறுக்கும் விதத்தில் செயல்பட்டுள்ளார். ஊனமுற்றோர் புதிய உரிமைகள் சட்டம், 2016ன்படி குறைந்தபட்சம், ௪ சதவீத பணியிடங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
எனவே, நகராட்சி நிர்வாக கமிஷனர் வெளியிட்டு உள்ள அறிவிப்பை ரத்து செய்து, மாற்றுத் திறனாளி களுக்குரிய இட ஒதுக்கீட்டை உறுதி செய்து, புதிய அறிவிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை