குறைந்த மார்க் மாணவர்கள் வெளியேற்றமா?| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குறைந்த மார்க் மாணவர்கள் வெளியேற்றமா?

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்றுள்ள மாணவர் பட்டியல் தயாரிப்பில், பள்ளிகள் ஈடுபட்டுள்ளன. அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் துவங்கின. பல பள்ளிகளில், நேற்றே அரையாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.
குறைந்த மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், அரையாண்டு தேர்வில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 50 சதவீதத்துக்கு குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பட்டியலை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயாரித்து வருகின்றனர். அதனால், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் வெளியேற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. நுாறு சதவீத தேர்ச்சிக்காக, தனியார் பள்ளிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையால் பாதிக்கப்படும் மாணவர்கள், மற்ற பள்ளியிலும் சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்; படிப்பை பாதியில் விட வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, 'பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, கடும் முன்னெச்சரிக்கை விடுத்து, இது போன்ற நடவடிக்கைகளை கைவிட செய்ய வேண்டும்' என, ஆசிரியர்களும், பெற்றோரும் வலியுறுத்தி உள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை