புத்தாண்டில் போலீஸ், 'சென்டிமென்ட்' : புகார் வாங்க மறுப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புத்தாண்டில் போலீஸ், 'சென்டிமென்ட்' : புகார் வாங்க மறுப்பு

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சென்னை : சென்னை மாதவரத்தில், வீட்டில் குழந்தையுடன் தனியாக இருந்த பெண்ணிடம், கத்தி முனையில் நகை பறித்த சம்பவம் நடந்தது. இது குறித்த புகாரை, புத்தாண்டு தினத்தில், 'சென்டிமென்ட்'டாக பெற தயங்கிய போலீசாரால், நகையை இழந்தவர், அதிர்ச்சி அடைந்தார்.
சென்னை, மாதவரம் பால் பண்ணை அடுத்த மாத்துார், எம்.எம்.டி.ஏ., குடியிருப்பு, 2வது தெருவைச் சேர்ந்தவர் கனக மணிகண்டன்; கீழ்கட்டளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மிரட்டினான் : அவரது மனைவி நர்மதா, 23. இவர்களுக்கு, 2 வயது ஆண் குழந்தை உள்ளது. கடந்த, 31ம் தேதி இரவு, நர்மதா வீட்டில் குழந்தையுடன் இருந்தார். இரவு, 12:00 மணி ஆகியும், அவரது கணவர் வீட்டிற்கு வரவில்லை. நர்மதா, மொபைல் போனில் கணவரை தொடர்பு கொண்டு விசாரித்த போது, 1:00 மணிக்குள் வந்து விடுவேன்; கதவை மூட வேண்டாம் என, கூறியிருக்கிறார். கதவை தாழிடாமல், மூடிவிட்டு, நர்மதா, குழந்தையுடன் படுக்கை அறையில் படுத்திருந்தார். சில நிமிடங்களுக்கு பின், ஆள் நடமாடும் சப்தம் கேட்டு கண் விழித்தார்.
அப்போது, மர்ம நபர் ஒருவன், கத்தியுடன் நின்றிருந்தான். நர்மதா கூச்சல் போட்டு, உதவிக்கு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைக்க முயன்றார். அதற்குள், அந்த நபர், குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து, 'கூச்சலிட்டால், குழந்தையை குத்தி கொலை செய்துவிடுவேன்' என மிரட்டினான். அதனால், அமைதியானார் நர்மதா. இந்த நேரத்தில் நர்மதா அணிந்திருந்த, 7 சவரன் நகை, குழந்தை அணிந்திருந்த, 1 சவரன் செயின் ஆகியவற்றை, மர்ம நபர் பறித்து; தப்பினான்.
அவன், வீட்டிலிருந்து வெளியேறியதும், நர்மதா உதவி கோரி கூச்சலிட்டார். இதையடுத்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், அவனை பிடிக்க முயன்றனர். ஆனால் தப்பி ஓடிவிட்டான்.
அப்போது, வீட்டிற்கு வந்த, கணவர் மணிகண்டனிடம், சம்பவம் குறித்து தெரிவித்தார். அவர், மாதவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். புத்தாண்டு ரோந்து பணியில் இருந்த போலீசார், 'காலையில் விசாரிக்கிறோம்' என்று நழுவினர்.

அலைய வேண்டாம் : இதையடுத்து, மணிகண்டன், நேற்று முன்தினம் காலை, போலீசில் புகார் செய்ய சென்றார். அதற்கு போலீசார், 'புத்தாண்டு அதுவும், கத்தி முனையில், வீடு புகுந்து திருட்டு என்றால், அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். மேலும், 'சென்டிமென்ட்டாக' ஆண்டு முழுக்க, குற்ற வழக்குகளை பதிவு செய்யும் நிலை ஏற்படும்' என, கூறி, கனக மணிகண்டன் அளித்த புகாரை பெறாமல், மழுப்பினர். மேலும், 'புகார் ஏதும் வேண்டாம். நல்ல (புத்தாண்டு) நாளில் நீங்கள், போலீஸ் நிலையத்திற்கு அலைய வேண்டாம். மர்ம நபரை நாங்களே கண்டுபிடித்து, நகையை மீட்டு கொடுத்து விடுகிறோம்' என, உறுதி அளித்து, புகாரை பெறாமல், வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.ஆனால், இந்த தகவல், உயர் அதிகாரிகளுக்கு சென்றதால், வேறு வழியின்றி, நேற்று காலை கனக மணிகண்டனிடம், புகாரை பெற்றனர்.
இது குறித்து, போலீசாரிடம் கேட்டபோது, 'நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி யார் என்று தெரிந்துவிட்டது. இன்று (நேற்று) இரவுக்குள் பிடித்து விடுவோம்' என்று கூறி, மீண்டும் சமாளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை