நூலக இயக்குனர் பதவிக்கு தொடர்கிறது ஆள் தேடல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நூலக இயக்குனர் பதவிக்கு தொடர்கிறது ஆள் தேடல்

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தமிழக பொது நுாலகத்துறை இயக்குனர் பதவிக்கு, ஐந்து ஆண்டுகளாக தகுதியான ஆள் கிடைக்கவில்லை. அதனால், ஆறாம் ஆண்டாக, மீண்டும் தேடும் படலம் துவங்கியுள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும், பொது நுாலகத்துறையில், இயக்குனர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவியில், 2012 முதல், யாரும் நியமிக்கப்படவில்லை.
பள்ளி கல்வித்துறையில், இயக்குனர் அந்தஸ்தில் இருப்பவர்களே, கூடுதலாக நுாலகத்துறையை கவனித்து வருகின்றனர். தனி இயக்குனர் நியமிக்காததால், பணிகள் பாதிக்கப்படுவதாக, நுாலக சங்கத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக, தமிழக பொதுநுாலகத் துறை பணியாளர் சங்கம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், மூன்று மாதங்களில், இயக்குனரை நியமிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி, இரண்டு முறை, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் தேர்வும் நடத்தப்பட்டது; ஆனால், யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

இது குறித்து, பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'இயக்குனர் பதவிக்கு, நுாலக அறிவியலில் முதுகலை படித்த, அனுபவம் மிக்கவர்கள் கிடைக்கவில்லை' என்றனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் வகையில், மூன்றாம் முறையாக, தேடல் பணி துவங்கியுள்ளது. 'இயக்குனர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள், ஜன., மூன்றாம் வாரத்திற்குள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை