புத்தாண்டு கொண்டாட்டம் : மது விற்பனை ரூ.207 கோடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புத்தாண்டு கொண்டாட்டம் : மது விற்பனை ரூ.207 கோடி

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, 'டாஸ்மாக்' கடைகளில், இரு தினங்களில், 207 கோடி ரூபாய்க்கு, மது வகைகள் விற்பனையாகி உள்ளன.

இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, 200 கோடி ரூபாய் மதிப்பிற்கு, மது வகைகள் விற்பனை செய்ய திட்டமிட்டது. இதற்காக, அனைத்து கடைகளிலும், ஏழு நாட்களுக்கு தேவையான மது வகைகள் இருப்பு வைக்கப்பட்டன. விற்பனைக்கு ஏற்ப, உடனுக்குடன், 'சப்ளையும்' செய்யப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு, 2017 டிச., 31ல், 117 கோடி ரூபாய்; 2018 ஜன., 1ல், 90 கோடி ரூபாய் என, இரு தினங்களில், 207 கோடி ரூபாய் மதிப்பிற்கு, மது வகைகள் விற்பனையாகி உள்ளன. இது, முந்தைய ஆண்டில், 187 கோடி ரூபாயாக இருந்தது. பார் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்காததால், அவர்கள், பார் உரிம, 'டெண்டரில்' பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர். இதனால், பல மாவட்டங்களில், பார்கள் செயல்படவில்லை. அவை செயல்பட்டு இருந்தால், மது விற்பனை மேலும் அதிகரித்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
03-ஜன-201819:30:48 IST Report Abuse
Bhaskaran அந்த 207 கோடியில் ர்.கே.நகர் குடிமகன்களின் பங்கு கணிசமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது எல்லாம் தினகரன் உபயம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை