9 விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு பரிசீலனை Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
9 விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு பரிசீலனை

புதுடில்லி : நாடு முழுவதும், ஒன்பது விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

9 விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு பரிசீலனை

'மதுரை விமான நிலையத்துக்கு, முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும்' என, ராஜ்யசபாவில் நேற்று, பா.ஜ., - எம்.பி., சுப்பிரமணியன் சாமி வலியுறுத்தினார்.

வருத்தம்:

'மறைந்த தலைவர், நேதாஜி சுபாஷ்

சந்திரபோசுக்கு, நெருக்கமாக இருந்ததால், முத்துராமலிங்கம் ஆற்றிய அரும் பணிகள் கண்டுகொள்ளப்படவில்லை' என, அவர் வருத்தம் தெரிவித்தார்.அப்போது, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர், அசோக் கஜபதி ராஜு அளித்த பதில்: மாநில அரசுகள், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின், மத்திய அரசுக்கு அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் விமான நிலையங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும், ஒன்பது விமான நிலையங்களின்பெயர்களை மாற்றுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தீர்மானம்:

காங்., உறுப்பினர், அம்பிகா சோனி பேசுகையில், ''சண்டிகார் விமான நிலையத்துக்கு, பகத் சிங் பெயரை

Advertisement

சூட்ட வேண்டும்,'' என, வலியுறுத்தினார். அகாலிதளம் உறுப்பினர், நரேஷ் குஜ்ரால் பேசுகையில், சண்டிகார் விமான நிலையத்துக்கு, பகத்சிங் பெயரை சூட்ட, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashokmari - Tuticorin,இந்தியா
06-ஜன-201806:50:03 IST Report Abuse

Ashokmariஎன்னை பொருத்தவரை மதுரை விமான நிலையத்திற்கு பாண்டியன் என்ற பெயர் வைப்பது நல்லது . இப்படி வைத்தால் இரு சாதி இனருக்கும் சன்டை வராது என்று நான் இந்த இடத்தில் முன் வைக்கிறேன்.....

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
04-ஜன-201808:31:39 IST Report Abuse

balakrishnanஇதெல்லாம் தேவையற்ற வேலை, இது போன்ற பெயர் வைக்கும் வழக்கமே ஒழிக்கப்படவேண்டும், இன்றைய தலைவர்களை விட நாளை வேறு ஒரு மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவர்கள் வந்துக்கொண்டே தான் இருப்பார்கள், ஆனால் அந்த ஊரின் பெயர், நாட்டின் பெயர், யார் வந்து போனாலும் நிரந்தரமாக இருக்கும், சிலை வைப்பது, பெயர் வைப்பது எல்லாமே ஜிம்மிக் வேலைகள்

Rate this:
chails ahamad - doha,கத்தார்
04-ஜன-201800:24:29 IST Report Abuse

chails ahamadதேவையற்ற வேலைகளில் மிகவும் அக்கறையுடையவர்கள் இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் என்பதை உறுதிபடுத்துகின்றார்கள் விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற சிந்திப்பதில் இருந்து அறிய முடிகின்றது , மக்களின் வாழ்க்கை தரம் உயர சிந்திப்பதை தவிர்த்து வெட்டித்தனமான காரியங்களில் ஈடுபட விழைகின்றார்கள் . வாழ்க பாரதம் .

Rate this:
bal - chennai,இந்தியா
03-ஜன-201821:07:18 IST Report Abuse

balகண்டிப்பாக செய்ய வேண்டும். ஏனென்றால் இதுவரை எங்கும் நேரு, இந்திரா, ராஜிவ் மற்றும் எதிலும் நேரு, இந்திரா, ராஜிவ் பெயர்தான் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-ஜன-201819:30:39 IST Report Abuse

Pugazh Vஇங்கே ஒருவர் ஒருமுடியும் அறியா அண்ணா என்று விஷம் கக்கியிருக்கிறார்....இனதுரோகி...என்ன அல்ப சந்தோஷம் இதில்?

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-ஜன-201819:29:19 IST Report Abuse

Pugazh Vஆமா இதான் இப்ப ரொம்ப முக்கியம். எவனுமே காமராஜர் விமான நிலையம் என்றோ அண்ணா விமான நிலையம் என்றோ சொல்வதே இல்லை. அப்புறம் எதுக்கு?

Rate this:
Vamanan Nair - சான் ஹோஸே , கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
03-ஜன-201818:29:57 IST Report Abuse

Vamanan Nairராம் ஏர்போர்ட் கிருஷ்ணன் ஏர்போர்ட் ராமகிருஷ்ணன் ஏர்போர்ட் க்ருஷ்ணராம் ஏர்போர்ட் ராம்ராம் ஏர்போர்ட் க்ருஷ்ணக்ருஷ்ண ஏர்போர்ட் லோட்டஸ் ஏர்போர்ட் சரஸ்வதி ஏர்போர்ட் லட்சுமி ஏர்போர்ட் சீதாராம் ஏர்போர்ட் அவ்வளவுதான் ....

Rate this:
மணிமாறன் - chennai,இந்தியா
03-ஜன-201816:55:21 IST Report Abuse

மணிமாறன் கிருஷ்ணரின் 9 அவதாரங்களின் பெயர்களை வைத்து விடுங்கள்..உங்கள் ஆட்சிக்கு அதுதான் சரி......10 அவதாரம் வந்தால் அடுத்த ஒன்றுக்கு வைக்கலாம் ..

Rate this:
Abdul rahim - Thanjavur,இந்தியா
03-ஜன-201816:48:49 IST Report Abuse

Abdul rahimநம் நாடு இருக்கும் நிலையில் இது தான் நாட்டின் முக்கிய பிரச்னையா ?

Rate this:
devendran - madurai,இந்தியா
03-ஜன-201816:29:24 IST Report Abuse

devendranயாரு பெயரையும் வைத்து யாதும் நடக்காது Madurai ஏர்போர்ட் ன் இருக்கட்டும் அனால் Edam கொடுத்தது தேவேந்திரகுல வேளாளர் என்பதை நினைவில் கொள்ளவும் யாரும் இந்த உண்மையை மறக்கவும் மறுக்கவும் முடியாது ...

Rate this:
மேலும் 49 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement