மாணவி தற்கொலை டிரைவர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி தற்கொலை டிரைவர்கள் கைது

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டிவனம்: திண்டிவனத்தில், ஆட்டோ டிரைவர்கள் கேலி செய்ததால், பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் பிரியா, 17; அரசு பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் புத்தாண்டை முன்னிட்டு, நாகலாபுரம் முருகர் கோவிலுக்கு சென்று, காந்தி சிலையில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, ஆட்டோவில் இருந்த, இரண்டு டிரைவர்கள், பிரியாவை கேலி செய்துள்ளனர். அதன்பின், வீட்டிற்கு சென்ற பிரியா, நடந்த சம்பவம் குறித்து, யாரிடமும் கூறாமல் மவுனமாக இருந்துள்ளார். அன்று இரவு, வீட்டில் உள்ள அனைவரும் துாங்கிய பின், துாக்கு போட்டு, பிரியா தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தந்தை புகாரை அடுத்து, ரோஷணை போலீசார், தற்கொலைக்கு துாண்டுதல் பிரிவில் வழக்கு பதிந்து, ஆட்டோ டிரைவர்கள் காளி, 30, குரு, 28, ஆகிய இருவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை