தந்தை, மகள் கார் ஏற்றி கொலை : முன்விரோதத்தில் வாலிபர் ஆத்திரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை, மகள் கார் ஏற்றி கொலை : முன்விரோதத்தில் வாலிபர் ஆத்திரம்

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி: தேனி மாவட்டம், கண்டமனுார் அருகே, முன்விரோதத்தால், டீக்கடையில் இருந்த தந்தை, மகளை கார் ஏற்றிக் கொலை செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.
கண்டமனுாரைச் சேர்ந்தவர்கள், செல்வராஜ், 44, ரமேஷ்குமார், 34. இருவருக்கும் அதே ஊரில், பொது இடத்தில், டீக்கடை வைப்பதில் நீண்ட நாட்களாக தகராறு இருந்தது.
இது குறித்து, ரமேஷ்குமார் மற்றும் அவரது உறவினர் முத்துமணி மீது, கண்டமனுார் போலீசில், செல்வராஜ் புகார் அளித்தார். 'தன்னை டீக்கடை நடத்தக் கூடாது' என, அவர்கள் மிரட்டுவதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.ஆனால், நடவடிக்கை எடுக்காததால், அக்., 30ல், தேனி கலெக்டர் அலுவலகத்தில், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற போது கைது செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, கண்டமனுார் போலீசார், ரமேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதில், அவர்களிடையே பிரச்னை பெரிதானது. இந்த முன்விரோதத்தால், ரமேஷ்குமார் நேற்று காலை, 7:15 மணிக்கு, தன் அம்பாசிடர் காரை ஓட்டிச் சென்று, சாலையோர டீக்கடையில் இருந்த செல்வராஜ், அவரது மகள், அபிராமி, 9, மகன் அன்புச்செல்வன், 10, ஆகியோர் மீது ஏற்றினார்.
பலத்த காயமடைந்த, செல்வராஜ், அபிராமி அங்கேயே பலியாகினர்.
அன்புச்செல்வன் பலத்த காயத்துடன், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கண்டமனுார் போலீசார், ரமேஷ்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்; கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
03-ஜன-201811:12:53 IST Report Abuse
Mohammed Abdul Kadar அந்த மிருகத்தையும் அப்படியே காரை ஏத்தி கொல்ல வேண்டும் , இறக்கமில்லாத மனித மிருகம், பட் கோர்ட் இவனை ஜாமீனில் ஒரு கொலை குற்றவாளியை வெளியில் விடக்கூடாது, அப்படி விட்டால் அவர்களை பாவம் சும்மா விடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X