வைகை 2வது திட்ட குழாய்களில் வீணடிப்பு குடிநீர் லாரி தண்ணீர் சப்ளையில் அதிகாரிகள் ஆர்வம்| Dinamalar

தமிழ்நாடு

வைகை 2வது திட்ட குழாய்களில் வீணடிப்பு குடிநீர் லாரி தண்ணீர் சப்ளையில் அதிகாரிகள் ஆர்வம்

Updated : ஜன 03, 2018 | Added : ஜன 03, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
வைகை 2வது திட்ட குழாய்களில் வீணடிப்பு குடிநீர் லாரி தண்ணீர் சப்ளையில் அதிகாரிகள் ஆர்வம்

மதுரை : குடிநீர் வினியோகத்தில் மாநகராட்சி அக்கறையின்மையால், வைகை அணையில் இருந்து வரும் தண்ணீர் முழுமையாக மதுரைக்கு கிடைக்கவில்லை. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

வைகை 1 மற்றும் 2 வது குடிநீர் திட்டங்கள் மூலம் மதுரையின் பெரும் குடிநீர் தேவைகள் சமாளிக்கப்படுகிறது. வைகை 2வது குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழாய்கள் தரம் குறைவாக உள்ளதால் வைகை அணையில் இருந்து மதுரை வரை பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பெருமளவு தண்ணீர் வீணாகிறது.

கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது இந்த குழாய்களில் வீணாகும் தண்ணீரை சரிசெய்வதற்காக 3 நாட்கள் குடிநீர் நிறுத்தப்பட்டு பணி நடந்தது. ஆனாலும் பண்ணைப்பட்டியில் இருந்து சோழவந்தான் வரும் வழியில் பல இடங்களில் இந்த தண்ணீர் வீணாகி விவசாயத்திற்காக செல்கிறது. மண்ணாடிமங்கலம், முள்ளிப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலை தான்.

இதனால் மதுரைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குடிநீர் கிடைக்கவில்லை. இந்த இடங்களில் குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

நகர் பகுதியிலும் குடிநீர் வினியோகம் முறையாக நடக்கவில்லை. மேல்நிலைத் தொட்டிகள் வீணாக காட்சி தருகிறது. 'பைபாஸ்' சப்ளை என்ற முறை மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நான்கு நாட்களுக்கு ஒரு நாள் குடிநீர் கிடைத்த அளவிற்கு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கும் முறையில் மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை.

நான்கு நாட்களுக்கு ஒரு நாள் குடிநீர் வழங்கிய போது ஒரு பகுதிக்கு தொடர்ந்து 4 மணி நேரம் சப்ளை நடந்தது. தற்போது 2 மணி நேரம் நடக்கிறது. நகரில் 60 சதவீதம் இணைப்புகளில் மின் மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் தெருக்களின் கடைசி பகுதி வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. விரிவாக்க பகுதிகளில் மக்கள் குடிநீர் இணைப்புகளுக்கு வரி செலுத்தி வருகின்றனர். ஆனால் தண்ணீர் இல்லாமல் உள்ளது.

பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிடும் போது தற்போதைய நடைமுறையில் இப்படித் தான் குடிநீர் வினியோகிக்க முடியும். நான்கு நாட்களுக்கு ஒரு நாள் குடிநீர் என்ற முறை வந்தால் தான் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் லாரி தண்ணீரையே நம்ப வேண்டிய நிலை தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. வைகை அணையில் தண்ணீர் இருந்தும் மக்களுக்கு முறையாக மாநகராட்சியால் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. உதவி பொறியாளர்கள் தெரிவிக்கும் அபத்தமான தகவல்களை தான் கமிஷனர் அனீஷ்சேகர் நம்ப வேண்டிய நிலை உள்ளது.

குடிநீர் திட்ட வினியோகங்களை கண்காணிக்க தனி பிரிவு பொறியாளர்கள், அலுவலர்கள் அடங்கிய குழுவை நியமித்து ஒவ்வொரு பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைகளை ஆய்வு செய்து, குடிநீர் வினியோகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
03-ஜன-201806:07:38 IST Report Abuse
சூரிய புத்திரன் அரசியல்வாதிகள் ஊழல் செய்து கொள்ளையடிப்பது ஒருபுறம் இருக்க மக்கள் வாி பணத்தில் மாதந்தோறும் சம்பளமும், சலுகைகளும் பெரும் அதிகாாிகளும், அரரு பணியாளா்களும் பொறுப்பின்றி, லஞ்ச பிச்சை எடுத்து மக்களை இம்சிக்கின்றனா். மனசாட்சி சற்றும் இல்லாத இந்த கொள்ளையா்களை ஆண்டவன் தண்டிக்கவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை