அரசு மருத்துவமனையில், 'ஆப்பரேஷன்'; அரியலூர் பெண் கலெக்டர் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில், 'ஆப்பரேஷன்'; அரியலூர் பெண் கலெக்டர் அசத்தல்

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அரசு மருத்துவமனையில், 'ஆப்பரேஷன்'; அரியலூர் பெண் கலெக்டர் அசத்தல்

பெரம்பலுார் : அரியலுார் பெண் கலெக்டர், அரசு மருத்துவமனையில், குடல்வால் ஆப்பரேஷன் செய்து கொண்டார்.

அரியலுார் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா, 38. இவர், 2017, ஜூலை, 12ல் பொறுப்பேற்றது முதலே, மக்கள் நலனில், அக்கறையுடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சில நாட்களாக, இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில், கலெக்டருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

தொடர்ந்து, குடும்பத்தாரிடம், அரியலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூற, அவர்களும் அழைத்துச் சென்றனர். கலெக்டரை பரிசோதித்த டாக்டர்கள், குடல் வால் வளர்ந்துள்ளதால், உடனடியாக ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அங்கேயே, ஆப்பரேஷன் செய்யுமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

நேற்று முன்தினம் இரவு, முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர், கலெக்டருக்கு ஆப்பரேஷன் செய்தனர். ஆப்பரேஷனுக்கு பின், அங்கேயே உள்நோயாளியாக தங்கி, சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, நலமுடன் உள்ளார்.

கலெக்டராக உள்ளவர், தனியார் மருத்துவமனைகளை தவிர்த்து, அரசு மருத்துவமனையில் ஆப்பரேஷன் செய்து, சிகிச்சை பெற்று வருவதை அறிந்த பொதுமக்கள், அவரை நேரில் பார்த்து பாராட்டி, நலம் பெற வாழ்த்தினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vivekauma - Kallidaikurichi,இந்தியா
04-ஜன-201806:20:23 IST Report Abuse
vivekauma பூரண நலம்பெற வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Raja - newport,யுனைடெட் கிங்டம்
03-ஜன-201818:55:46 IST Report Abuse
Raja இதைத்தான் சீமான் ரொம்ப நாளா சொல்லிட்டுருக்கார்
Rate this:
Share this comment
Raji - chennai,இந்தியா
05-ஜன-201814:33:46 IST Report Abuse
Rajiஅப்டியா , இந்த சைமனுக்கு வாயில் ஆபரேஷன் பண்ணி விடணும்னுயா , புண்ணியமா போகும் யாராவது இத செஞ்சி விடுங்க...
Rate this:
Share this comment
Cancel
muthukamu g - cumbum,இந்தியா
03-ஜன-201815:08:43 IST Report Abuse
muthukamu g லட்சுமிபிரியா அம்மா அவர்கள் நலமுடன் திரும்ப வரவேண்டும். மக்களுக்கு சேவை வேட்டை தொடர வாழ்த்துக்கள். அன்புள்ள முத்துக்காமு,
Rate this:
Share this comment
Cancel
Saravanan stalin - Kuwait city,குவைத்
03-ஜன-201813:52:11 IST Report Abuse
Saravanan stalin விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel
M PRABAHARAN - Chengalpattu,இந்தியா
03-ஜன-201813:32:19 IST Report Abuse
M PRABAHARAN பூரண குணமடைய பிரார்த்திக்கின்றோம் ஆண்டவன் அவருக்கு அருள் புரியட்டும் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
03-ஜன-201813:10:38 IST Report Abuse
Nallavan Nallavan அரசு மருத்துவர்களுக்குத்தான் அறுவை சிகிச்சையில் அனுபவம் அதிகம் இருக்கும் ....
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
03-ஜன-201812:40:20 IST Report Abuse
Syed Syed நலமுடன் நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ துவா செய்கிறேன் ஆமீன்.
Rate this:
Share this comment
Cancel
c.k.sundar rao - MYSORE,இந்தியா
03-ஜன-201812:13:09 IST Report Abuse
c.k.sundar rao Being a collecter of the district she must have being given best treatment and personnel care by the doctors at the govt hospital.Can ordinary patient from lower strata of the society expect the same treatment from the doctors who atted on her.
Rate this:
Share this comment
Cancel
R.SUGUMAR - tiruvannamalai,இந்தியா
03-ஜன-201811:18:29 IST Report Abuse
R.SUGUMAR அரியலுார் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா அவர்களுக்கு உடல் நலம் பெற வாழ்த்துக்கள் ...அரசாங்க அலுவலர்கள் அனைவரும் இதனை கடைப்பிடித்தால் அரசு மருத்துவமனை தரம் உயரும் ....
Rate this:
Share this comment
Cancel
Muthukumar - Chennai,இந்தியா
03-ஜன-201811:14:09 IST Report Abuse
Muthukumar Sirappu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை