சராசரி மழையளவை விட கூடுதல் 242 மி.மீ., பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி| Dinamalar

தமிழ்நாடு

சராசரி மழையளவை விட கூடுதல் 242 மி.மீ., பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

Updated : ஜன 03, 2018 | Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சராசரி மழையளவை விட கூடுதல் 242 மி.மீ., பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு சராசரி மழையளவை விட 242 மி.மீ., கூடுதலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம் பர் மாதங்கள் வடகிழக்கு பருமழை பெய்யக் கூடிய மாதங்களாகும். கடந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழை தாமதமாக அக்டோபர் கடைசி வாரத்தில் துவங்கி டிசம்பர் 31ம் தேதி முடிவடைந்தது.

தென்மேற்கு பருவக்காற்றின் மூலம் வறட்சி பகுதிகளான திட்டக்குடி, வேப்பூர், தொழு துார் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வந்தது. சிதம்பரம், பரங்கிப்பேட்டை, வேப்பூர், விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய இடங்களில் தொடர்ந்து நாளொன்றுக்கு அதிகபட்சமாக 100 மி.மீ., வரை பெய்தது.

கடலுார் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 1206 மி.மீ., இதில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை 1449 மி.மீ., மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 242 மி.மீ., கூடுதலாகும். வடகிழக்குப் பருவமழையின்போது மட்டும் (அக்டோபர், நவம்பர், டிசம்பர்) 697 மி.மீ., மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 228 பொதுப்பணித்துறை ஏரிகளில் 88 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. 46 ஏரிகள் 75 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்குப்பின் கடலுார் மாவட்டத்தில் பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு, கொள்ளிடம், மணிமுக்தாறு போன்றவற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பெண்ணையாற்றில் தொடர்ந்து 15 நாட்கள் தண்ணீர் ஓடியது. அதனால் இந்த ஆண்டு விவசாயம் சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் நம்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை