'ஹிந்துஸ்தான் ஹிந்துக்களுக்கே': உ.பி., பா.ஜ., எம்.எல்.ஏ., ஆவேசம்| Dinamalar

'ஹிந்துஸ்தான் ஹிந்துக்களுக்கே': உ.பி., பா.ஜ., எம்.எல்.ஏ., ஆவேசம்

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (78)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
MLA,B.J.P,BJP,Bharatiya Janata Party,Uttar Pradesh,உத்தரபிரதேசம்,எம்.எல்.ஏ.,பா.ஜ

முசாபர்நகர் : உ.பி., மாநிலத்தில், ஆளும், பா.ஜ.,வைச் சேர்ந்த, எம்.எல்.ஏ., விக்ரம் சைனி, 'ஹிந்துஸ்தான், ஹிந்துக்களுக்கே' எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.


பாரபட்சம்:

உ.பி.,யில், பதற்றம் மிக்க மாவட்டமாக கருதப்படும், முசாபர்நகரில், ஆளும், பா.ஜ.,வைச் சேர்ந்த, எம்.எல்.ஏ., விக்ரம் சைனி, நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: நம் நாடு, ஹிந்துஸ்தான் என, அழைக்கப்படுகிறது. இதன் மூலம், இந்த நாடு, ஹிந்துக்களுக்கு மட்டுமே சொந்தம் என, புரிந்து கொள்ளலாம். முந்தைய அரசுகள், முஸ்லிம்களுக்கு மட்டுமே சலுகைகளை வாரி வழங்கி உள்ளன.

ஹிந்துத்துவ கொள்கைகளில், ஆழ்ந்த பிடிப்பு உள்ளவன் நான். பா.ஜ., ஆட்சியில், பாரபட்சம் இன்றி, அனைத்து தரப்பினருக்கும், சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், முந்தைய ஆட்சியில், எந்தளவுக்கு தாடி வைக்கின்றனரோ, அந்தளவு, சலுகைகளும் அதிகமாக வழங்கப்பட்டு வந்தன.

கடந்த காலத்தில், அப்போதைய தலைவர்கள், முஸ்லிம்களை இந்தியாவில் தங்க வைத்தனர். அதுவே, தற்போதைய அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம். நம் நாட்டை விட்டு முஸ்லிம்களை வெளியேற்றி இருந்தால், இந்தியா, நமக்கே சொந்தமாகி இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


கடும் கண்டனம் :

விக்ரம் சைனியின் இந்த கருத்துக்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கடந்த, 2013ல், முசாபர்நகரில் நடந்த கலவரத்தில், 60 பேர் உயிரிழந்தனர். அப்போது, தேசிய பாதுகாப்பு சட்டத்தில், விக்ரம் சைனி கைது செய்யப்பட்டார். கடந்தாண்டு, மார்ச்சில், 'பசுக்களை கொல்வோரின் கை, கால்களை உடைப்பேன்' என, விக்ரம் சைனி மிரட்டல் விடுத்திருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
03-ஜன-201819:07:01 IST Report Abuse
Milirvan ///காந்தி நேரு என்ன செய்யவில்லை/// கைப்புண்ணுக்கு கண்ணாடி கேக்குறாரு இந்த பெரியவரு...
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
15-ஜன-201816:41:13 IST Report Abuse
Sitaramen Varadarajanபோலி மத சார்பின்மை, இன்று வரை நமது சுதந்திரம், உரிமை, புனித மண் மீது உள்ள நம்பிக்கை அனைத்தையும் நாசமாக்கி விட்டது. இனி கலாச்சாரத்தை மீட்டு எடுக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
santha kumar - ruwi,ஓமன்
03-ஜன-201816:59:05 IST Report Abuse
santha kumar நண்பர்களே , நீங்கள் இந்தியாவின் பழைய வரலாறை மறந்து பேசுகிறீர்கள். ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா என்பது முன்பு கிடையாது. ஒரு தமிழராய் இருக்கும் நீங்கள் குறைந்தபட்சம் தமிழ் நாட்டு வரலாற்றை படித்து இங்கு கருத்து கூறுங்கள். நீங்கள் சொல்வது தவறு என்பதை முடிந்த அளவில் சுருக்கத்துடன் சொல்கிறேன். நிச்சயமாக தமிழ் மொழி பிறந்த சமயத்தில் இந்து மதம் என்பது கிடையாது. ஆனால் மொழி என்பது பிறக்க வேண்டுமென்றால் அதற்கு முன் மனிதர்கள் இருந்திருக்க வேண்டும். அது திராவிடர்கள் என்பதே என் கருத்து. ஒரு வேளை அந்த சமயத்தில் யாருக்காவது தெய்வ பக்தி இருக்குமென்றால் அது இப்பொழுது எந்த மதத்தில் இருக்கும் எந்த தெய்வமும் இருக்க வாய்ப்பில்லை. சுருக்கத்துடன் மக்கள் தான் பயந்தவற்றை தெய்வமாக பார்த்திருப்பார்கள். நாளடைவில் ஆரிய படையெடுப்பு பின் [இதற்கிடையில் பெரிய வரலாறு இருக்கிறது, அதை எழுதினால் உங்களுக்கு படிக்க பொறுமை இருக்காது] சமஸ்கிருதம் சிறிது சிறிதாக ஊடுருவியது. அது வழியே இந்து மதத்தின் இதி காசங்களும், அதன் தாக்கவும் மக்களிடத்தில் பரவ தொடங்கியது. [ இதில் பல மாறுபட்ட கருத்துக்கள் உண்டு, அதை இங்கு சொன்னால் உங்களுக்கு கோபம் வரும்]. அந்த சமயத்தில் இந்த மதத்தை வழிபடுபவர்கள் நாள் போக போக அதிகம் ஆகிக்கொண்டே இருந்தது. இதற்கு காரணம், மக்களுக்கு படிப்பறிவின்மை தான். ஏன்? எப்படி ? என்ற கேள்வியை எந்த ஒரு திராவிடனும் கேட்கவில்லை. ஆனால் ஆரியர்கள் இந்த மதத்தை விரிவுபடுத்த காரணம் அவர்கள் திராவிடர்களை தன் கீழ் வைத்திருக்க வேண்டும், என்பதே. அதில் வெற்றியும் பெற்றனர். ஆனால் அப்பொழுதும் தமிழ்நாட்டில் ஹிந்து என்ற மதத்தை ஆரியர்களின் வழியில் வழிபடுவது உயர்குல மக்களே. St . ஜார்ஜ் தமிழ்நாட்டில் வரும் வரையில் அப்பொழுது இருந்த மக்கள் மதம் என்றால் இந்து மதம் மட்டுமே. St . ஜார்ஜ் வந்த பிறகும் மக்களுக்கு கிறிஸ்தவம் என்ற மதம் உண்டு என தெரியுமே தவிர யாரும் அதை விரும்பவில்லை. ஆனால் அந்த சமயத்தில் ஜாதி என்பதும் பலமாக இருந்தது. காலப்போக்கில் மேல் ஜாதி மக்கள் கீழ் ஜாதி மக்களை கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர். இதன் விளைவுதான் கீழ் ஜாதி மக்கள் வேற்று மதத்திற்கு தாவ முயன்றனர், தாவினார். இதை பலபேர் மறுப்பர். கிறிஸ்டின் அல்லது முஸ்லீம் மக்கள் வேண்டும் என்றே கீழ் ஜாதி மக்களை விலை கொடுத்தோ அல்லது கொடுமைப்படுத்தியோ தான் மதம் மாற வைத்தனர் என சொல்வர். அது முற்றிலும் தவறே. சிறந்த eg . கன்னியாகுமரி மாவட்டம். அங்கு 100 வருடம் முன், கீழ் ஜாதி மக்கள் மேலாடை போட கூடாது, படிக்க கூடாது, செருப்பு போட கூடாது, ஒரு மேல் ஜாதி வீட்டில் கீழ் ஜாதி வீட்டில் உள்ள ஒரு ஆணும், பெண்ணும் வெறும் சோறுக்கு மட்டும் அவர்கள் வீட்டு வேலைக்கு போக வேண்டும். ஆதலால் தான் அங்குள்ள மக்கள் கூண்டோடு மதம் மாறினார்.[இதன் உண்மைத்தன்மை வேகமாக புரிய , எந்த மேல் ஜாதி மக்களும் மதம் மாறிய வரலாறு தமிழ் நாட்டில் இல்லை. மதம் இல்லை என சொல்வார்கள், மதம் மாற மாட்டார்கள்.] அந்த சமயத்திலும் கூட சட்டப்படி ஹிந்து ஆக இருப்பவர்கள் மிக சிலரே[மேல் ஜாதி மக்களை தவிர்த்து]வரலாறை முழுமையாக படித்தால் தெரியும், 1920 ஆம் ஆண்டில் தான் தமிழ் நாட்டில் உள்ள கிறிஸ்டின், முஸ்லீம் அல்லாத மக்கள் அனைவரையும் அரசு ஹிந்து வாக பதிவு செய்தது. இறுதியாக, இங்கு நான் சொன்னது தமிழ் நாட்டின் ஹிந்து வரலாறு. தமிழ் நாடு என்பது தற்பொழுது இந்தியாவின் ஒரு மாநிலம். இதே போல் ஒவ்வரு மாநிலத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. 1947 தான் பல ஆயிரக்கணக்கான வருடத்திற்கு பின் ஒருங்கிணைக்கப்பட்டது. முன்பு இந்தியா[அப்பொழுது இந்த பெயர் இல்லை ] ஒருங்கிணைந்த சமயத்தில் [பல ஆயிரக்கணாக்கான வருடம் முன்] இந்து மதம் இங்கு கிடையாது. இந்த மிக பெரிய இடைப்பட்ட காலத்தில் இந்து மதம் ஆரியர்களின் முயற்சியில் பெரிய அளவில் பரவியது, அதன் கூடவே மற்ற மதவும் சிறிதாக பரவியது. பின் அணைத்து இடமும் ஒன்றாகி இந்தியா என மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது. பின் எப்படி இந்தியாவை இந்து மதம் என சொல்வீர்கள். காரணம், இந்து மதத்தை வளர்க்க ஆரியர்களின் பங்களிப்பு மிக பெரிது. இப்பொழுது கூட சில அமைப்பு உள்ளது. அனைத்தும் எதாவது ஆரியர்களின் தொடர்பு இருக்கும். ஆனால் இந்த ஆரியர்கள் இந்தியர் கிடையாது. வேற்று நாட்டில் இருந்து இங்கு குடி ஏறியவர்கள். அவர்களுக்கு யாரவது இங்குள்ளவர்கள் வக்காலத்துக்கு நின்றால், அவர்கள் ஆங்கிலேயர்களை ஆதரிக்க வேண்டும். இருவரும் ஒன்றே. ஆரியர்கள் 10000 வருடம் முன் வந்தனர். ஆங்கிலேயர்கள் 300 வருடம் முன் வந்தனர். 10000 வருடம் முன் இப்பொழுதுள்ள எளிதான போக்குவரத்து உண்டென்றால் ஆரியர்கள் ஆங்கிலேர்களை விட அதிக கொடுமை தந்திருப்பர்.
Rate this:
Share this comment
Endless - Chennai,இந்தியா
03-ஜன-201818:28:42 IST Report Abuse
Endless"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"......
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
04-ஜன-201802:16:14 IST Report Abuse
Agni Shivaசாந்த குமாருக்குள் மறைந்து இருக்கும் மூர்க்க வெறியனே ..உங்கள் ஊரில் முட்டைக்கு முடி முளைத்து இருக்கிறது. எப்போது பார்க்க வருகிறாய்? உன்னை போன்ற ஆட்கள் தான் நடந்த வரலாறை நேரில் இருந்து பார்த்தது போல கற்பனை இந்திய வரலாறை கக்கி வைத்து இருக்கிறார்கள். இனி மேலும் கக்காதே..நாறுகிறது.....
Rate this:
Share this comment
JIVAN - Cuddalore District,இந்தியா
23-பிப்-201809:53:59 IST Report Abuse
JIVANஆங்கிலேயனால் நாடு அடிமைப்படுத்தப்பட்டும் விடுதலை கிடைத்துவிட்டது ஆனால் ஆரியனால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் இன்னும் விடுதலை பெறமுடியவில்லை. உனக்கு உண்மை கசக்கிறது....
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
03-ஜன-201816:16:49 IST Report Abuse
hasan இந்தியாவை இத்தனை காலம் ஹிந்துக்கள் ஆண்டார்கள் எந்த பிரச்சினையும் இல்லை , ஹிந்துதுவா வெறியர்களின் கையில் என்றைக்கு ஆட்சி போனதோ அன்றைக்கே சனியன் பிடித்துவிட்டது இந்தியா உண்மையான ஹிந்துக்களிடம் இருந்தால் எல்லோருக்கும் சந்தோசம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X