Nitish Kumar's Dependent Son Four Times Richer Than Him | பீஹார் முதல்வர் நிதீஷை விட மகனின் சொத்து மதிப்பு 4 மடங்கு அதிகம்| Dinamalar

பீஹார் முதல்வர் நிதீஷை விட மகனின் சொத்து மதிப்பு 4 மடங்கு அதிகம்

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பீஹார், முதல்வர் நிதீஷை, விட, மகனின், சொத்து, மதிப்பு, 4 மடங்கு, அதிகம்

பாட்னா: பீஹார் முதல்வர் நிதீஷ்குமாரைவிட அவரது மகனின் சொத்து மதிப்பு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

பீஹாரில் பா.ஜ. -ஐக்கிய ஜனதா தள கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ்குமார் உள்ளார். இவரது அமைச்சரவையில் பா.ஜ.வைச் சேர்ந்த துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, உள்பட 27 அமைச்சர்களும் தங்களது அசையும், அசையா சொத்து கணக்கை வெளியிட உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன் விவரம் நேற்று பீஹார் அரசு இணைய தளத்தில் வெளியானது.இதில் நிதீஷின் அசையும் சொத்து மதிப்பு ரூ. 16.23 லட்சம் எனவும், அசையா சொத்தாக டில்லியில் 1000 சதுரடியில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான பிளாட் என மொத்தம் ரூ.56 லட்சத்து 23 ஆயிரம் எனவும், நிதீஷின் மகன் நிஷாந்த்தின் அசையும் சொத்து மதிப்பு ரூ. 1.18 கோடியும், அசையா சொத்து மதிப்பு ரூ.1.25 கோடி என ரூ.2 கோடியே 43 லட்சம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தந்தையின் சொத்து மதிப்பை விட மகனின் சொத்து மதிப்பு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-ஜன-201821:11:36 IST Report Abuse
தமிழ்வேல் இப்போல்லாம் ஒரு வீடு இருந்தாவே கோடீஸ்வரன்தான்.. 1 கோடிக்கு மேல போவுது..
Rate this:
Share this comment
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
03-ஜன-201815:38:33 IST Report Abuse
mrsethuraman  இனிமேல் யாரும் நிதிஷ் ஆட்சியில் வளர்ச்சியே இல்லை என்று பேச மாட்டார்கள் .
Rate this:
Share this comment
Cancel
S.Krishnamurthy - Chennai,இந்தியா
03-ஜன-201815:32:26 IST Report Abuse
S.Krishnamurthy 30000 கோடி 40000 கோடி என்று சொத்துக்களை வாங்கி குவித்திருக்கும் கும்பல்களை ஆதரிக்கிறீர்கள், வெறும் ஐந்து கோடிக்குள் சொத்து வைத்திருக்கும் பீஹார் முதல்வரையும் அவர் மகனையும் ஊரையே கொள்ளையடித்து சொத்து சேர்த்துவிட்டதுப்போல் விமர்சிக்கிறீர்கள். சக தமிழக மக்களே உங்களை புரிந்துக் கொள்ளவே முடியவில்லையே. ஏரிகள் காணாமல் போய், இயற்க்கை வளங்கள் சுரண்டப்பட்டு பலப்பல நூற்றுக்கணக்கான கோடிஸ்வரர்கள் வருடா வருடம் தமிழகத்தில் எப்படி உருவாகின்றார்கள் என்று இப்போதுதான் புரிகிறது. வாழ்க தமிழக அறிவு ஜீவிகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X