நிலம் வாங்கி தருவதாக ரூ.40 கோடி மோசடி : மஹாராஷ்டிராவில் பதுங்கியிருந்தவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலம் வாங்கி தருவதாக ரூ.40 கோடி மோசடி : மஹாராஷ்டிராவில் பதுங்கியிருந்தவர் கைது

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (1)
Advertisement
நிலம் வாங்கி தருவதாக ரூ.40 கோடி மோசடி : மஹாராஷ்டிராவில் பதுங்கியிருந்தவர் கைது

சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில், நிலம் வாங்கி தருவதாக, 40 கோடி ரூபாய் மோசடி செய்த, முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
கேளம்பாக்கம், காமராஜ் தெருவை சேர்ந்தவர், வெங்கடரமணன், 57, ரியல் எஸ்டேட் புரோக்கர்.
சென்னை, சி.ஐ.டி., நகரைச் சேர்ந்த, பிரதீப்குமார் உட்பட, பலரிடம், நிலம் வாங்கி தருவதாக, 40 கோடி ரூபாய் மோசடி செய்து, மஹாராஷ்டிரா மாநிலத்தில் பதுங்கி இருந்தார்.
இது குறித்து, சில மாதங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பிரதீப்குமார் புகார் அளித்தார்.
மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர், முத்துவேல்பாண்டி தலைமையிலான போலீசார், வெங்கட ரமணனை, மஹாராஷ்டிராவில் நேற்று கைது செய்தனர்.
போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம்:
ஆழ்வார்பேட்டையில், ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தேன். அப்போது, பிரதீப்குமாருக்கு, காஞ்சிபுரம் மாவட்டம், கருநிலம் கிராமத்தில், 35 ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக கூறினேன்.
அதை வீட்டு மனைகளாக விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என, தெரிவித்து, 1.70 கோடி ரூபாய் மோசடி செய்தேன்.
அது போல, கூட்டாளிகள், முத்துநாராயணன், கமலேஷ் சேத், விஜயகுமார் மற்றும் கோபிநாத் ஆகியோருடன் சேர்ந்து, 'கே.ஆர்.வி., பிராபர்ட்டிஸ்' என்ற நிறுவனத்தினருக்கு, நிலம் வாங்கி தருவதாக, 5.23 கோடி ரூபாய் மோசடி செய்தேன்
சென்னையை சேர்ந்த, கிரண் வர்கீஸ் தாமஸ் என்பவருக்கு, பெரும்பாக்கத்தில், 25 ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக கூறி, 50 கோடி ரூபாய் வாங்கினேன்.
ஆனால், அவருக்கு, 17.54 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10.99 ஏக்கர் நிலத்தை மட்டுமே வாங்கி கொடுத்தேன்.
மீதி தொகையான, 32.46 கோடி என, 40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து, மூன்று ஆண்டுகளுக்கு முன், மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு தப்பி விட்டேன்.
சொந்தமாக, ஹெலிகாப்டர் வாங்கி, 'இந்திரா ஏர் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம் நடத்தி வந்தேன்.
சில மாதம் முன், என் கூட்டாளிகள், முத்து நாராயணன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்த தகவல் கிடைத்து, மும்பை, கோவா, ஜெய்ப்பூர் என, பல இடங்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினேன்.
மஹாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் பகுதியில் பதுங்கி இருந்த போது, சென்னை போலீசார் என்னை கைது செய்தனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா
03-ஜன-201809:26:47 IST Report Abuse
Viswanathan Meenakshisundaram இந்த மூஞ்சியை பார்த்து எப்படி ஐயா பணத்தை கொடுத்து ஏமாந்திர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை