புதுகை அருகே இரு தரப்பினர் மோதல்: கடைகள் அடைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுகை அருகே இரு தரப்பினர் மோதல்: கடைகள் அடைப்பு

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள ஆலத்துாரைச் சேர்ந்தவர் பால்ராஜ், 52. இவர், இலுப்பூர் கடை வீதியில், பெட்டிக்கடை நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த சிலர், போதையில் வந்து, பால்ராஜ் பெட்டிக் கடையில் சில பொருட்கள் வாங்கினர்.
அப்போது, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கியுள்ளனர். இதை தட்டிக் கேட்டவர்களையும் தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள், அந்தோணியார் கோவில் மணியை ஒலித்து, கிறிஸ்தவ இளைஞர்களை திரட்டி, மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்று, சரமாரி கல்வீச்சிலும், தாக்குதலிலும் ஈடுபட்டனர்.
இதில், சில கடைகள் சேதமடைந்தன. இரு தரப்பினருக்கும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில், 11 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று அதிகாலை, இலுப்பூர் அருகே உள்ள வெள்ளை மரியாள் கல்லறை கோவிலையும், அங்கிருந்த மரியாள் சிலையையும் சேதப்படுத்திய மர்ம நபர்கள், காவலாளி வருவதற்குள் தப்பியோடினர்.
இத்தகவல் பரவியதால், அங்கு நுாற்றுக்கணக்கில் மக்கள் திரண்டு, பதற்றம் அதிகரித்தது.
டி.ஐ.ஜி., பவானீஸ்வரி, எஸ்.பி., செல்வராஜ் விசாரணை நடத்தினர். இலுப்பூரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
நகரின் முக்கிய கோவில்களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கலவரம் தொடர்பாக, 10க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X