குழந்தைகளை கிணற்றில் தள்ளிய தாய் : தம்பி, தங்கையை காப்பாற்றிய சிறுமி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளை கிணற்றில் தள்ளிய தாய் : தம்பி, தங்கையை காப்பாற்றிய சிறுமி

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தடிக்கல் அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வம், 47. மனைவி லட்சுமி, 37. இவர்களுக்கு, 13 - 11 வயதில் இரு மகள்கள், 5 வயதில் மகன் உள்ளனர். ஓராண்டாக, உடல்நிலை சரியில்லாமல், செல்வம் வீட்டில் இருந்து வந்தார்.
இதனால், மனமுடைந்து காணப்பட்ட லட்சுமி, நேற்று முன்தினம், குழந்தைகளுக்கு அசைவ உணவு சமைத்து கொடுத்து, அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு கிணற்றில் நண்டு இருப்பதாக லட்சுமி கூறவே, மூன்று குழந்தைகளும் எட்டி பார்த்தனர்.
அப்போது, குழந்தைகளை கிணற்றுக்குள் லட்சுமி தள்ளி விடவே, 13 வயது மகள் மட்டும், அங்கிருந்து ஓட முயற்சித்தார். ஆனால், அவரையும் இழுத்து பிடித்து, கிணற்றுக்குள் தள்ளிய லட்சுமி, தானும் கிணற்றுக்குள் குதித்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். அதற்குள், தங்கை, தம்பியை, கிணற்றுக்குள் தொங்கி கொண்டிருந்த கயிற்றை பிடிக்க வைத்து, 13 வயது சிறுமி காப்பாற்றினார். ஆனால், லட்சுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samkey - tanjore,இந்தியா
03-ஜன-201808:13:58 IST Report Abuse
samkey நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் தற்கொலை பிரச்னைகளுக்கு தீர்வல்ல. அந்த குழந்தைகளுக்கு உதவ வேண்டும்.. மொபைல் எண் இருந்தால் கொடுக்கவும் நல்லோர்கள் உதவுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை