வார்டு வரையறை பிரச்னை: தி.மு.க., நிர்வாகிகள் மோதல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வார்டு வரையறை பிரச்னை: தி.மு.க., நிர்வாகிகள் மோதல்

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: மதுரையில் வார்டு வரையறை தொடர்பான மனு அளிக்கவந்த மண்டல அலுவலகத்தில் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலர் தளபதிக்கும், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தளபதி, ஜெயராமன் இருவரும் தங்கள் பகுதியில் வார்டுகள் மாற்றம் செய்யப்பட்டதில் உள்ள குழப்பங்கள் தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகரிடம் மனு அளிக்க நேற்று வந்தனர்.
அலுவலகத்தில் இருந்து தளபதி வெளியே
வரும் போது, ''இந்த பிரச்னைகள் தொடர்பாக நீங்கள் மட்டும் தனியாக அலுவலகம் வருகிறீர்கள். கட்சியில் யாரிடமும்
தெரிவிக்க வேண்டாமா,'' என ஜெயராமன் கேள்வி எழுப்பினார்.
''இது தொடர்பாக மனுக்களை கட்சி
அலுவலகத்தில் வழங்க சொல்லி உள்ளேன்,''
என தளபதி பதில்
அளித்தார்.
தொடர்ந்து இரு
வரும் ஒருமையில் திட்டிக் கொண்டனர். மோதல் ஏற்படும் நிலை வந்ததால் கட்சியினர் சமரசம் செய்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா
03-ஜன-201806:31:14 IST Report Abuse
Vilathur Nandhiyar வெறும் மோதல் கூடாது ..அழகிரி ஸ்டாலின் போல அடித்துக்கொள்ள வேண்டும் ..தா கிருஷ்ணன் போல் தலை உருள வேண்டும் ..ஏதாவது பத்திரிகை அலுவலகத்தை கொளுத்தவேண்டும் ...திமுக உடன்பிறப்புக்கள் சண்டை போடுவதில் தலைமையை பின்பற்ற வேண்டும் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X