வார்டு மறுவரையறை குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வார்டு மறுவரையறை குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம்

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை குறித்து, புகார் தெரிவிப்பதற்கான அவகாசம், வரும், 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரை ஆணைய உறுப்பினர் செயலர், ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:
உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், செய்யப்பட்டுள்ளது. இது, பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ஆட்சேபனைகள் இருந்தால், நேற்றைக்குள் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. அவகாசம் போதுமானதாக இல்லை கோரிக்கைகள் வந்தன.இதையடுத்து, ஆட்சேபம் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க, வரும், 5ம் தேதி மாலை, 5:00 மணி வரை, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வார்டு மறுவரையறை அதிகாரிக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கலாம்.இவை, மண்டல வாரியாக நடத்தப்படும் ஆலோசனை கூட்டத்தில், பரிசீலிக்கப்படும். அப்போது, நேரடியாக
ஆஜராகி, கோரிக்கைகளை எடுத்துரைக்கலாம். மண்டல வாரியான கூட்டம் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை