மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன், மங்களநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பச்சை மரகத நடராஜரின் திருமேனியில் புதிய சந்தனக்காப்பு
அணிவிக்கப்பட்டது.ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9:30 மணி
யளவில் சந்தனம் களையப்பட்டு, காலை வேளையில் அபிஷேகமும், இரவு 11:00 மணிக்கு மேல் 18 வகையான மகா அபிஷேகமும் நடந்தது. பின்னர் புதிய சந்தனக்காப்பு சாத்தப்பட்டு, சர்வ மலர் அலங்காரத்தில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 10:00 மணிக்கு கூத்தர் பெருமான் திருவீதியுலாவும்,மாலை 4:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 9:30 மணிக்கு மாணிக்கவாசக சுவாமிகளுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேளதாளங்கள் முழங்க பஞ்சமூர்த்தி புறப்பாடுடன், வெள்ளி ரிஷப சேவையும் நடந்தது. பூஜைகளை ஸ்தானிக சிவாச்சாரியார்கள் செய்தனர்.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை