பொங்கல் தொகுப்பில் வழங்க கரும்பு தேர்வு செய்வதில் சிக்கல் : அதிகாரிகள் பரிதவிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொங்கல் தொகுப்பில் வழங்க கரும்பு தேர்வு செய்வதில் சிக்கல் : அதிகாரிகள் பரிதவிப்பு

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்க கரும்புகளை தேர்ந்தெடுப்பதில் அரசு அதிகாரிகளுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஜன. 14 தைப்பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கார்டுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, ஐந்து கிராம் ஏலக்காய் வழங்கப்படுகிறது.

தேர்ந்தெடுப்பதில் சிக்கல் : 'ருசி' மிக்க கரும்புகளை கண்டறிய கரும்புத் தோட்டங்களில் தினமும் வருவாய், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு படுகையில் உள்ள பெரிய குளம், தேவதானபட்டி பகுதிகளில், சுத்தமான தண்ணீரில் விளைந்த கரும்பு ஏழு அடி செழித்து வளர்ந்துள்ளது. ஆனால் அங்கு போதிய கரும்பு கிடைக்காததால் சின்னமனுார் மற்றும் முல்லை பெரியாறு நீர் பாயும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி
களிலும் ஆய்வு செய்கின்றனர். 70 சதவீத கரும்புத் தோட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் சாக்கடை நீரில் விளைந்துள்ள தடிமன் குறைவாகவும், இனிப்புச்சுவை குறைந்தும் இருக்கின்றன. இதனால் கொள்முதல் செய்ய அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தேனி மாவட்டத்தில்இருந்து பிற மாவட்டங்
களுக்கும் கரும்பு அனுப்ப உத்தரவிட்டுள்ளனர். ஆனால் இம்மாவட்ட கார்டுதாரர்களுக்கே போதிய கரும்பு கிடைக்காத நிலை உள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X