மதுரையில் பிப்.4, 11ல் பாஸ்போர்ட் சிறப்பு மேளா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் பிப்.4, 11ல் பாஸ்போர்ட் சிறப்பு மேளா

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை: மதுரையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் மாணவர்கள், அரசு அலுவலர்களுக்காக பிப்., 4, 11ல் பாஸ்போர்ட் மேளா கோச்சடை சேவா கேந்திரத்தில் நடக்கிறது.
மண்டல அலுவலர் டி.அருண் பிரசாத் கூறியதாவது: இம்மண்டல அலுவலகத்திற்குட்பட்ட ஒன்பது மாவட்டங்களில் இருந்து பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2016 ல் 2 லட்சத்து 43 ஆயிரத்து 143 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன. 2017 ல் 2 லட்சத்து 94ஆயிரத்து 846 ஆக உயர்ந்தது. இது 22.16 சதவீதம் அதிகம். பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. மண்டல அலுவலகம் சார்பில் மாணவர்கள், அரசு அலுவலர்கள் பயன்பெற பிப்., 4, 11ல் சேவா கேந்திரத்தில் சிறப்பு மேளா நடக்கிறது. வார விடுமுறையில் சொந்த ஊர் வந்து செல்லும் அரசு, பொது துறை நிறுவன ஊழியர்கள் சொந்த ஊர் சேவை மையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
மாணவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க கட்டாயமில்லை. திருமணமானவர்கள் கணவன்/மனைவி பெயரை பாஸ்போர்ட்டில் இணைக்க திருமண சான்றிதழ்/நோட்டரி அபிடவிட் இணைக்க தேவையில்லை.
விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல், கட்டணமில்லா தொலைபேசி, ஆன்லைன் மூலம் சந்தேகங்கள், குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்யலாம். ஹஜ் யாத்திரை பயணிகளுக்காக மதுரை மண்டல அலுவலகத்தில் தனி கவுன்டர் அமைக்கப்பட்டு, ஒரு சிறப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.
2017 ல் மட்டும் 2 லட்சத்து 99 ஆயிரத்து 176 விண்ணப்பங்கள் மதுரை, திருநெல்வேலி சேவா கேந்திரங்களில் பெறப்பட்டன. இதில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 819 விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, ஏற்கப்பட்டன, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை