கண்டமனூரில் தந்தை, மகள் கார் ஏற்றிக் கொலை : டீக்கடை முன்விரோதத்தில் வாலிபர் ஆத்திரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்டமனூரில் தந்தை, மகள் கார் ஏற்றிக் கொலை : டீக்கடை முன்விரோதத்தில் வாலிபர் ஆத்திரம்

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கண்டமனூரில் தந்தை, மகள் கார் ஏற்றிக் கொலை : டீக்கடை முன்விரோதத்தில் வாலிபர் ஆத்திரம்

வருஷநாடு : தேனி மாவட்டம் கண்டமனுார் அருகே முன்விரோதத்தில் டீக்கடையில் இருந்த தந்தை, மகளை கார் ஏற்றி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கண்டமனுார் அருகே ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர்கள் செல்வராஜ், 44, ரமேஷ்குமார், 34. இருவருக்கும் அதே ஊரில் பொதுஇடத்தில் டீக்கடை வைப்பதில் நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது. இதுகுறித்து ரமேஷ்குமார், அவரது உறவினர் திருமங்கலம் பி.அம்மாபட்டி சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் முத்துமணி ஆகியோர் மீது கண்டமனுார் போலீசில் செல்வராஜ் புகார்
அளித்தார். தன்னை டீக்கடை நடத்தக்கூடாது என அவர்கள் மிரட்டுவ தாக புகாரில் குறிப்
பிட்டிருந்தார்.ஆனால் நடவடிக்கை எடுக்காததால், அக்.30 ல் தேனி கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சி
யாக கண்டமனுார் போலீசார் ரமேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் அவர்
களிடையே பிரச்னை பெரிதானது.

கார் ஏற்றிக் கொலை : இந்த முன்விரோதத்தால் ரமேஷ்குமார் நேற்று காலை 7:15 மணிக்கு தான் ஓட்டி வந்த அம்பாசிடர் காரை ராமலிங்கபுரத்தில் ரோட்டோர டீக்கடையில் இருந்த செல்வராஜ், மகள் அபிராமி, 9, மகன் அன்புச்செல்வன், 10, ஆகியோர் மீது ஏற்றினார். பலத்த காயம் அடைந்த செல்வராஜ், அபிராமி அங்கேயே பலியாயினர். அன்புச்செல்வன் பலத்த தலைக்காயத்துடன் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கண்டமனுார் போலீசார் ரமேஷ்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது. அபிராமி அங்குள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்தார். அன்புச்செல்வன் 4ம் வகுப்பு படிக்
கிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
03-ஜன-201821:34:06 IST Report Abuse
கதிரழகன், SSLC காரை வெச்சு கொலை செய்யலாம் ன்னு யாரு இவனுக்கு ஐடியா கொடுத்தது? எல்லாம் அந்த கபாலீசுவரருக்கே வெளிச்சம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை