இருதயநோய் பாதிப்பால் 33 சதவீத இறப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருதயநோய் பாதிப்பால் 33 சதவீத இறப்பு

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: ''நாட்டில் 33 சதவீத இறப்புகள் இருதய நோய் பாதிப்பால் ஏற்படுகிறது,'' என தமிழ்நாடு
இன்டர்வென்ஷனல் கவுன்சில் செயலர் டாக்டர் கேசவமூர்த்தி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: நம்நாட்டில் 33 சதவீத இறப்புகள் இருதய நோய் பாதிப்பால் நடக்கிறது. மனஅழுத்தம், புகைபிடித்தல், எண்ணெய் மற்றும் துரித உணவுகளை அதிகம் உண்பதால் இளைஞர்கள் கூட மாரடைப்பால் இறக்கின்றனர். உணவு முறையில் கட்டுப்பாடு அவசியம். இருதயம் பாதித்த 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு கூட 'ஆஞ்சியோ' மூலம் 'வால்வு' பொருத்தலாம். மாநிலத்திலேயே மதுரையில், இருதயம் சார்ந்த சிகிச்சை அதிகம் அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு இன்டர்வென்ஷனல் கவுன்சில் மூலம், இருதயவியல் அறுவை சிகிச்சை குறித்த தொழில்நுட்பங்களை அறிய, மதுரை பசுமலை தி கேட்வே ஓட்டலில் ஜன.,6, 7 ல் தேசிய கருத்தரங்கு நடக்கிறது. ஜன.,6 மாலை 6:30 மணிக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை
தலைவர் குருசங்கர் துவக்கி வைக்கிறார். இருதயவியல் டாக்டர்கள், முதுநிலை
மாணவர்கள் என 300 பேர் பங்கேற்கின்றனர்.இன்டர்வென்ஷனல் கவுன்சில் தலைவர்
லட்சுமணதாஸ், இந்திய இருதய மைய தலைவர் கண்ணன், செயலர் ரவி, இந்திய இருதய மைய கவுரவ பொதுச் செயலர் சோமித்ராகுமார், முன்னாள் பொது செயலர் தாஸ் விளக்கம்
அளிக்கின்றனர், என்றார்.தமிழ்நாடு இன்டர்வென்ஷனல் கவுன்சில் துணை தலைவர் சிவக்குமார், இணை செயலர்கள் பாலசுப்பிரமணியன், சுப்புராமகிருஷ்ணன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X