தி.மு.க., தயவால் அ.தி.மு.க., டிபாசிட் தப்பியது: தினகரன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., தயவால் அ.தி.மு.க., டிபாசிட் தப்பியது: தினகரன்

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தஞ்சாவூர்: ''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தி.மு.க., முறையாக ஓட்டு சேகரித்திருந்தால், அ.தி.மு.க., டிபாசிட் இழந்திருக்கும்,'' என, எம்.எல்.ஏ., தினகரன் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் நேற்று அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு, அனைத்து மாநிலங்களையும் தன் ஆளுமை, அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து, இந்தியாவில் அதிபர் ஆட்சி வர முயற்சி செய்கிறது. '2ஜி' வழக்கை, சி.பி.ஐ., முறையாக நடத்தவில்லை. மத்திய, மாநில அரசுகள் முறையாக செயல்படாததால், '2ஜி' வழக்கில் தோல்வி ஏற்பட்டுள்ளது. கவர்னர் தன்னிச்சையாக ஆய்வு செய்வது, நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பின் முதன் முறையாக நிகழ்கிறது. இது தவறான முன்னுதாரணம்.
இதற்கு, தமிழகத்தில் உள்ள முதல்வரும், துணை முதல்வரும், எங்கு எது நடந்தாலும் நமக்கென்ன, நம் பதவியை காத்துக்கொள்ள வேண்டும் என்று இருப்பதே காரணம். வரும் தேர்தலில் முதல்வரும், துணை முதல்வரும், தங்களது சொந்த தொகுதியில் கூட, வெற்றி பெற முடியாது.
ஆர்.கே.நகர் தேர்தலில் முதல்வர், வாக்காளர்களுக்கு, 6,000 ரூபாய் என, 160 கோடி ரூபாய் கொடுத்தும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், 'தினகரன் காசு கொடுத்து வெற்றி பெற்றார்' என பேசி வருகிறார். 20 ஆண்டுகளாக, ஆர்.கே.நகர் தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. இம்முறை, தி.மு.க., முறையாக ஓட்டு சேகரித்திருந்தால், அ.தி.மு.க., டிபாசிட் இழந்திருக்கும்.
இவ்வாறு அவர்
கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prem - chennai,இந்தியா
03-ஜன-201818:08:37 IST Report Abuse
Prem Nee panapattuvada panni 20 R.s token kuduthu jeichathu yaarukum theriyathu nu pesuriya
Rate this:
Share this comment
Cancel
Laxmanan Mohandoss - ambur,இந்தியா
03-ஜன-201810:24:08 IST Report Abuse
Laxmanan Mohandoss Dinakaran ,you won because of the understanding between you and Stalin,do not hide hide it.
Rate this:
Share this comment
Cancel
samkey - tanjore,இந்தியா
03-ஜன-201807:33:34 IST Report Abuse
samkey இது ஆண்டவனுக்கே அடுக்காது ............. தாங்க முடில...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X