தேக்கம்பட்டி புத்துணர்வு முகாம் : நெல்லையிலிருந்து சென்ற யானைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேக்கம்பட்டி புத்துணர்வு முகாம் : நெல்லையிலிருந்து சென்ற யானைகள்

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருநெல்வேலி: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டியில் நடக்கும்
யானைகள் புத்துணர்வு முகாமிற்கு நெல்லை, துாத்துக்குடியில் இருந்து 9 கோயில் யானைகள்
கிளம்பிச்சென்றன.ஜன.,4ம் தேதி முதல் பிப்.,20ம் வரை யானைகள் புத்துணர்வு முகாம்
நடக்கிறது. அறநிலையத்துறை கோயில் யானைகள் இதில் பங்கேற்கின்றன.
நெல்லை மண்டலத்தில் இருந்து திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் பெண் யானை தெய்வானை 24, சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் பெண் யானை கோமதி24, நெல்லை நெல்லையப்பர் கோயில் 46 வயது பெண் யானை காந்திமதி 46, திருவிலஞ்சி குமார
சுவாமி கோயில் 17வயது பெண் யானை வள்ளி, நவதிருப்பதி ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் 22 வயது பெண் யானை ஆதிநாயகி, திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் 24வயது பெண் யானை குமுதவல்லி, இரட்டை திருப்பதி அரவிந்த லோசனர் கோயில் 18 வயது பெண் யானை லட்சுமி, திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் 24வயது பெண் யானை குறுங்குடி வள்ளி, அதே கோயிலைச் சேர்ந்த 15 வயது பெண் யானை
சுந்தரவல்லி ஆகிய 9 யானைகள் முகாமில்
பங்கேற்கின்றன.
நெல்லை ம.தி.தா.,
இந்து மேல்நிலைப்
பள்ளி வளாகத்தில் இருந்து யானை காந்திமதி லாரியில் ஏற்றப்
பட்டது.
யானைகளுக்கு அந்தந்த கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து லாரிகளில் அனுப்பி
வைத்தனர்.
நெல்லை அறநிலையத்துறை உதவிஆணையர் சாத்தையா தலைமையில் நெல்லையப்பர் கோயில் கண்காணிப்பாளர் ரவீந்திரன், திருச்செந்துார் கோயில் கண்காணிப்
பாளர் யக்ஞ நாராயணன், தென்காசி காசிவிஸ்வ
நாதர் கோயில் செயல்
அலுவலர் சங்கர்
உள்ளிட்டோர் யானைகளுடன் மேட்டுப்
பாளையம் சென்றனர்.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை