காஷ்மீரில் பலியான ராணுவ வீரர் உடல் தகனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காஷ்மீரில் பலியான ராணுவ வீரர் உடல் தகனம்

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

துாத்துக்குடி: காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி இறந்த துாத்துக்குடியை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் மனைவியால் தகனம் செய்யப்பட்டது.துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சாத்துாரப்பன் நாயக்கர்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் 35. அவருக்கு மனைவி ஆனந்தலட்சுமி 30, ஒன்றரை வயதில் மகள் உள்ளனர்.ராணுவத்தில் காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவில் பணியாற்றி வந்தார். பணியின் போது பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டு ஆம்புலன்சில் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டு ராணுவ வீரர்கள் அணி
வகுப்பு மரியாதை செலுத்தினர். அவரது உடலுக்கு மனைவி ஆனந்தலட்சுமி தீமூட்டி தகனம் செய்தார். ராணுவ சுபேதார்கள் சீனிவாசன், ரமேஷ் தலைமையில் 15 ராணுவ வீரர்கள், மாவட்ட என்.சி-.சி. அலுவலர் லெப்டினென்ட். கர்னல் வெற்றிவேல், விளாத்திகுளம் டி.எஸ்.பி., தர்மலிங்கம், எட்டயபுரம் தாசில்தார் சூர்யகலா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X