கோவை போலீசுக்கு பிடிக்காத சொல் செயல்!ஆதாய கொலைகளில் 'துப்பில்லை':பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை | Dinamalar

தமிழ்நாடு

கோவை போலீசுக்கு பிடிக்காத சொல் செயல்!ஆதாய கொலைகளில் 'துப்பில்லை':பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை

Updated : ஜன 03, 2018 | Added : ஜன 03, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கோவை போலீசுக்கு பிடிக்காத சொல்  செயல்!ஆதாய கொலைகளில் 'துப்பில்லை':பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை

கோவை;சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரம், அருமையான சீதோஷ்ணம், சுவையான குடிநீர், கல்வி, மருத்துவத்துக்கு இந்நகருக்கு ஈடில்லை என்பதெல்லாம் சரி. குடியிருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்று கேட்டால், 'பெரிய நோ' தான் பதில். கோவை மாநகரில் நடந்த சில ஆதாய கொலை சம்பவங்களில் மூன்றாண்டுகளாகியும், போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை; குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருவது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
கோவை மாநகரில் கடந்த சில ஆண்டுகளாக, மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. கோாடநாடு எஸ்டேட் காவலாளி கொலை சம்பவம், வடமாநில ஏ.டி.எம்., கொள்ளை கும்பல், ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பு என, ஏதேனும் ஒரு வகையில் கோவைக்கு தொடர்பிருந்து வருகிறது.
இதேபோன்று சமீபகாலமாக ஆதாய கொலைகளும் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில், குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். கேட்டால், 'துப்பு கிடைக்கவில்லை' என்பதே பதிலாக உள்ளது. இதோ சில உதாரணங்கள்:
சாமியாரும் 20 சவரனும்
சிங்காநல்லுார், தனபால் லே-அவுட்டை சேர்ந்தவர் சுப்ரமணி, 45; சாமியார். திருமணம் ஆகவில்லை. தனியாக வசித்து வந்த இவர், 2015ம் ஆண்டு டிச., 10ம் தேதி வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இவர் அணிந்திருந்த, 20 பவுன் தங்க செயின் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், சரியான துப்பு எதுவும் கிடைக்காத காரணத்தால் விசாரணை முடங்கி கிடக்கிறது.
இரட்டை கொலை
அவிநாசி ரோடு, பி.ஆர்.எஸ்., பள்ளியில் உள்ள மருத்துவமனை எதிரே அமைந்துள்ள ஒரு வீட்டில் பாப்பாத்தி, 65, அவரது மகள் கீதா, 35, ஆகியோர் எரித்து கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்து ஒரு மாதம் கழித்து தகவல் கிடைத்து, போலீசார் எரிந்த இரண்டு சடலங்களையும் மீட்டனர். சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்தனர். கொலை செய்யப்பட்ட பாப்பாத்தியின் மகன் சரவணகுமார், 32, மீது சந்தேகம் ஏற்பட்டது.
மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கொலை செய்திருக்கலாம் என, கூறப்பட்டது. மாயமான சரவணகுமாரை போலீசார் இரண்டு ஆண்டுகளாக தேடுகின்றனர்... தேடுகின்றனர்... தேடிக்கொண்டே இருக்கின்றனர். அவர் உயிருடன் இருக்கிறாரா, கொலை சம்பவத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டார்களா என தெரியவில்லை.
இரு மூதாட்டிகள்
இதேபோன்று சுண்டாக்காமுத்துாரை சேர்ந்த கமலம், 73, என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது, மர்ம கும்பல் தலையில் கல்லை போட்டு, நான்கு பவுன் நகையை பறித்து சென்றது. சின்னியம்பாளையம், ஆர்.ஜி., புதுார் பகுதியில், 90 வயதான காளிக்குட்டி என்பவரும் கடந்த வாரம் ஆதாய கொலை செய்யப்பட்டார். இதுபோன்ற ஆதாய கொலை சம்பவங்களில், குற்றவாளிகள் பிடிபடாமல் இருப்பது, போலீசாரின் விசாரணையை கேள்விக்குறியாகி வருகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கோவை மாநகரில் கடந்த சில ஆண்டுகளாக ஆதாய கொலைகள் நடந்து வருகின்றன. முக்கியமான கொலை சம்பவங்களில் குற்றவாளிகள் பிடிபடாமல் உள்ளனர்.
'இந்த சம்பவங்களில் போலீசாருக்கு சரியான துப்பு கிடைக்காததால், குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறுகின்றனர். கண்காணிப்பு கேமரா, மொபைல் போன் உதவி இருந்தால்தான் குற்றவாளிகளை பிடிப்பார்களா? 'அப்படியானால் வெளியே உலவும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளால் பொதுமக்களுக்கு தொடர்ந்து ஆபத்து வருமா? குற்றவாளிகளை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்' என்றனர்.
கோவையை உலுக்கிய சம்பவம்!2015ம் ஆண்டு ஆக., மாதம் சிந்தாமணிபுதுார் சிக்னல் அருகே மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் நடுரோட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புள்ள கூலிப்படை தலைவனான மோகன்ராம் தற்போது வரை சிக்கவில்லை. இவர் மீது, 20க்கும் மேற்பட்ட கொலை, கடத்தல் வழக்குகள் இருக்கின்றன.
இதுபோன்ற ஒரு நபரை கூட போலீசாரால் நெருங்க முடியவில்லை என்ற, தகவலையும் இங்கு வருத்தத்துடன் பதிவு செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
03-ஜன-201808:16:21 IST Report Abuse
Amirthalingam Sinniah பணியை செய்வதுக்கு துப்பில்லாமல் இருக்கும்போது,துப்பு எப்படி கிடைக்கும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X