எங்கே செல்லும் 'இன்கோ'வின் எதிர்காலம் நிரந்தர தீர்வா மானியம்? 'விசால பார்வையால்' கிடைக்கும் பொற்காலம்| Dinamalar

தமிழ்நாடு

எங்கே செல்லும் 'இன்கோ'வின் எதிர்காலம் நிரந்தர தீர்வா மானியம்? 'விசால பார்வையால்' கிடைக்கும் பொற்காலம்

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

ஊட்டி;'இன்கோ' தேயிலை தொழிற்சாலை உறுப்பினர்களுக்கு, மீண்டும் மானியம் அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், கூட்டுறவு தொழிற்சாலைகள், தங்களை ஸ்திரப்படுத்தி கொள்வதில் தடுமாற்றம் ஏற்படுமா' என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு (இன்கோ) நிறுவனத்துக்கு சொந்தமாக, நீலகிரியில், 15 தொழிற்சாலைகள் உள்ளன; அவற்றில், 25 ஆயிரம் சிறு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அவர்கள், தங்கள் தோட்டங்களில் இருந்து பறித்து வழங்கும் பசுந்தேயிலை மூலம், தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு, குன்னுாரில் உள்ள கூட்டுறவு துறையின் 'டீ சர்வ்' ஏல மையம் மூலம், பிரதி வாரம் புதன் கிழமைகளில் விற்கப்படுகிறது.தர வரிசையில் கடைசிகுன்னுார், கோவை, கொச்சி, சிலிகுரி, கவுகாத்தி, கோல்கட்டா என, நாட்டில் உள்ள அனைத்து ஏல மையங்களை ஒப்பிடுகையில், 'டீ சர்வ்' ஏல மையத்தில் விற்கப்படும் 'இன்கோ' தேயிலை துாளின் விலை தான் மிகக் குறைவு.தேயிலை துாளின், ஏல விலையின் அடிப்படையிலேயே விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலைக்கு விலை வழங்கப்படும் நிலையில், சமீப ஆண்டுகளாக, ஒரு கிலோ தேயிலை துாளின் சராசரி விலை, 70 ரூபாயை கூட தாண்டுவதில்லை. விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலைக்கு வழங்கப்படும் விலையும், கிலோவுக்கு, 12 -15 ரூபாயை தாண்டுவதில்லை.தீர்வு என்ன?'தாங்கள் வழங்கும் பசுந்தேயிலைக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை' என, விவசாயிகள் கூறி வரும் நிலையில், மாநில அரசின் சார்பில், கிலோ பசுந்தேயிலைக்கு, 2 ரூபாய் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, விவசாயிகளுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது, நிரந்தர தீர்வாக அமையுமா, என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, கடந்த, 2011ல், 'இன்கோ' விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலைக்கு, கிலோவுக்கு, 2 ரூபாய் மானியம் வழங்கினார். ஆறு ஆண்டு இடைவெளிக்கு பின், அதே, 2 ரூபாய், மீண்டும் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆறாண்டு இடைவெளியில், 'இன்கோ' மூலம் உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாளின் விலையில், வியத்தகு முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை; சர்வதேச தேயிலை சந்தையில் போட்டியிடும் வகையில், 'இன்கோ' தேயி லை துாளின் தரம் உயரவில்லை என்பதை சந்தை நிலவரம் தெளிவுப்படுத்துகிறது. கடந்த, 2011ல், 'இன்கோ' தொழிற்சாலைகள் மூலம் டீ சர்வ் ஏல மையத்தில் விற்கப்பட்ட தேயிலை துாளின் சராசரி விலை, கிலோ தேயிலை துாளுக்கு, 50-72 ரூபாயாக இருந்தது.அதே சமயம் குன்னுார் தேயிலை ஏல வர்த்தகர்கள் சங்க(சி.டி.டி.ஏ.,) ஏல மையத்தில் விற்கப்பட்ட, பிற தனியார் தேயிலை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்த தேயிலை துாளின் சராசரி விலை, 70 - 98 ரூபாயாக இருந்தது.
கடந்த, 2012ல், இன்கோ தேயிலை துாளின் சராசரி விலை, கிலோவுக்கு, 62 -100 ரூபாய் வரையும், தனியார் தொழிற்சாலைகளின் தேயிலை துாள், அதை காட்டிலும், கிலோவுக்கு, 20 - 30 ரூபாய் வ ரை அதிகமாகவும் இருந்தது.
கடந்தாண்டு, (2017) நிலவரப்படி, 'இன்கோ' தேயிலை துாளின் சரசாரி விலை குறைந்தபட்சம், 56 ரூபாய், அதிகபட்சம், 100 ரூபாய் வரை இருந்துள்ளது; ஆனால், சி.டி.டி.ஏ., ஏல மையத்தில் விற்கப்பட்ட, தனியார் தொழிற்சாலைகளின் தேயிலை துாளின் சராசரி விலை, குறைந்தபட்சம்,70 ரூபாய், அதிகபட்சம், 137 ரூபாய் வரை இருந்துள்ளது.ஆக, அருகேயுள்ள தனியார் தேயிலை தொழிற்சாலைகளின் தேயிலை துாளுக்கு நிகராக போட்டியிட்டு, அவற்றிற்கு இணையான விலையை கூட 'இன்கோ' தொழிற்சாலைகளால் பெற முடியவில்லை என்பதையே காட்டுகிறது.இதனால், அரசின் மானிய உதவி, 'இன்கோ' உறுப்பினர்களுக்கு தற்காலிக நிவாரணமாக இருக்க முடியுமே தவிர, நிரந்தர பலன் தராது.
தேயிலை தொழிற் சார்ந் தோர் சிலர் கூறியதாவது:'இன்கோ' நிறுவனத்தின் உற்பத்தி, சந்தை மற்றும் நிர்வாக செயல்பாடுகள் மீது தனி கவனம் செலுத்தப்பட வேண்டும். அதிகளவு வர்த்தகர்கள் 'டீ சர்வ்' ஏல மையத்தில் பங்கேற்று, தேயிலை துாளை வாங்க முயற்சி எடுக்க வேண்டும்; ஏலத்தில் போட்டியை அதிகரிக்க செய்வதன் மூலம், தேயிலை துாளுக்கு, சந்தையில் நல்ல விலை கிடைக்க செய்ய வேண்டும். நிர்வாகத்தில் நிலவும் தேவையற்ற செலவுகள், சீர்கேடுகளை கண்டறிந்து, அவற்றை களைய வேண்டும்.இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மட்டுமே, 'இன்கோ' தொழிற்சாலைகளின் எதிர்காலம் பிரகாசிக்கும் என்பது நிச்சயம். இவ்வாறு அவர்கள் கூறினர்.முயற்சிக்கு என்ன பலன்?
கடந்த, 2011 -12ல், பசுந்தேயிலைக்கு, 2 ரூபாய் மானியம் அறிவித்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இன்கோ தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, 15 தொழிற்சாலைகளை நவீனப்படுத்தும் திட்டத்திற்கென, 5.46 கோடி ரூபாய் மானியம் வழங்கினார்.
'இன்கோ சர்வ்' மூலம் தயாரிக்கப்படும் 'ஊட்டி டீ' விற்பனையை அதிகரிக்க, 2011ல், பொது வினியோகத் திட்டத்தில், 'ஊட்டி டீ' விற்பனை துவக்கப்பட்டது. இத்தனை முயற்சிகள் எடுக்கப்பட்டும், 'இன்கோ' நிறுவனத்தின் முன்னேற்றம் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை என்பது, விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை