2017ம் ஆண்டு மாவட்டத்தில் மழைப்பொழிவு அமோகம்!இந்தாண்டிலும் கைகொடுக்கும் என நம்பிக்கை| Dinamalar

தமிழ்நாடு

2017ம் ஆண்டு மாவட்டத்தில் மழைப்பொழிவு அமோகம்!இந்தாண்டிலும் கைகொடுக்கும் என நம்பிக்கை

Updated : ஜன 03, 2018 | Added : ஜன 03, 2018
Advertisement
2017ம் ஆண்டு மாவட்டத்தில் மழைப்பொழிவு  அமோகம்!இந்தாண்டிலும் கைகொடுக்கும் என நம்பிக்கை

திருப்பூர் :திருப்பூர் மாவட்டத்தில், வட கிழக்கு பருவ மழை குறைந்த போதும், கடந்தாண்டு சராசரி மழைப்பொழிவு, இயல்பை விட கூடுதலாகவே பெய்துள்ளது.
இந்தாண்டும், மழை நன்றாக இருக்க வேண்டும் என்பது, விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 1.90 எக்டேர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை பொழிவு, 618.20 மி.மீ., ஆகும்.கடந்த, 2016ல் பருவ மழை ஏமாற்றியதால் 385.92 மி.மீ., மழை மட்டுமே பதிவானது. இதனால், மாவட்டத்தில் விவசாயம் முடங்கியதோடு, கடும் வறட்சி ஏற்பட்டது.ஜனவரி, பிப்ரவரி மாத குளிர் கால மழை, ஆண்டு சராசரியாக, 14 மி.மீ., என்ற நிலையில், கடந்தாண்டு, 6.64 மி.மீ., பெய்தது.
மார்ச் - மே வரையிலான கோடை காலத்தில், இயல்பான மழை பொழிவு, 135.10 மி.மீ., ஆகும். கடந்த ஆண்டு, 115.35 மி.மீ., மழை பெய்தது.மாறாக, தென் மேற்கு பருவமழை அபரிமிதமாக பெய்தது. ஜூன் - செப்., வரையிலான தென்மேற்கு பருவ மழையின், ஆண்டு சராசரி மழை பொழிவு, 154.80 மி.மீ., ஆகும். கடந்தாண்டு இது, அபரிமிதமாக பெய்து, 310.31 மி.மீ., என்ற அளவை எட்டியது. இதனால், பாசன அணைகளுக்கு நீர் வரத்தும், நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்தது.மாவட்டத்தின் வறட்சி நிலை நீங்கி, பசுமை திரும்பியது.மாவட்டத்தின் ஆண்டு மழை பொழிவில், அக்., முதல் டிச., வரையிலான, வட கிழக்கு பருவ மழையின் பங்களிப்பே அதிகமாக இருக்கும். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, கடந்தாண்டு வடகிழக்கு பருவ மழை ஏமாற்றியது. ஆண்டு சராசரி, 314.30 மி.மீ., என்ற நிலையில், 251.32 மி.மீ., மட்டுமே பதிவானது.குறிப்பாக, நவ.,மற்றும் டிச.,மாதங்களில், மழைப்பொழிவு மிகவும் குறைவாக இருந்தது. எனினும், கடந்தாண்டு, 683.62 மி.மீ., மழை கிடைத்துள்ளது; இது, இயல்பைவிட 65.42 மி.மீ., மழை கூடுதலாக கிடைத்துள்ளது.
தற்போது, கடும் பனிப்பொழிவும், குளிரும் நிலவுகிறது. இது, வழக்கத்தைவிட அதிகமாகும். வரும் குளிர் கால மற்றும் கோடை மழை ஓரளவு பெய்தால் மட்டுமே, கோடை காலத்தை சமாளிக்க முடியும். இது, விவசாயிகளுக்கு சற்று கவலையை அளித்துள்ளது.கோவை வேளாண் பல்கலை காலநிலை ஆய்வு மைய தலைவர் பன்னீர் செல்வம் கூறுகையில்,“வழக்கத்தை விட, தற்போது பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், 18.5, -19 டிகிரி செல்சியஸ் என்ற அளவில், வெப்பநிலை குறைந்துள்ளது. அடுத்து வரும், மூன்று வாரங்களில், மேலும் குறைய வாய்ப்புள்ளது; பனிப்பொழிவு அதிகரிக்கும். மழைக்கான வாய்ப்பு, அதன் பிறகே தெரிய வரும்,” என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை